மார்ச் 7, 1945 மயிலாடுதுறையில், டி.எஸ்.வேம்பு - கோமதி தம்பதிக்கு மகனாக, 1945ல் இதே நாளில் பிறந்தவர் டி.வி.சங்கரநாராயணன்.இவரது தாய், கர்நாடக இசைக் கலைஞர் மதுரை மணி அய்யரின் சகோதரி. இவர், தன் மாமா மணி அய்யரிடம் வாய்ப்பாட்டு கற்று, 1968ல் அரங்கேற்றம் செய்தார். இவருக்கு வயலின் இசைக் கலைஞர் டி.என்.கிருஷ்ணன், மிருதங்க கலைஞர் ராமபத்ரன் ஆகியோர் பக்க வாத்தியம் வாசித்தனர்.இவரும் மதுரை மணி அய்யர் பாணியில் பாடத் துவங்கி தனித்திறனால் புகழ் பெற்றார். இவருக்கு லால்குடி ஜெயராமன், எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன், டி.கே.மூர்த்தி, முருகபூபதி, பாலக்காடு ரகு, உமையாள்புரம் சிவராமன் உள்ளிட்டோர் பக்கவாத்தியம் வாசித்தனர்.கடந்த 1975ல், அமெரிக்காவில் முதன்முதலாக கர்நாடக இசை நிகழ்ச்சியை நடத்தினார். தெலுங்கு கீர்த்தனைகளுடன், தமிழ் இசைப் பாடல்களையும் பாடினார். இவருக்கு, 'சிவன் இசை செல்வர், தமிழ் இசை வேந்தர், நாதக்கனல், சங்கீத சூடாமணி' உள்ளிட்ட பட்டங்கள் வழங்கப்பட்டன. இவர், 2022, செப்டம்பர் 2ல் தன், 77வது வயதில் மறைந்தார்.கர்நாடக சங்கீதத்துக்காக வழக்கறிஞர் தொழிலை கைவிட்ட பத்மபூஷண், 'டி.வி.எஸ்.,' பிறந்த தினம் இன்று!