உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பத்திரப்பதிவு கட்டணம் ஒரு சதவீதம் குறைப்பு: நாளை முதல் அமல்

பத்திரப்பதிவு கட்டணம் ஒரு சதவீதம் குறைப்பு: நாளை முதல் அமல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மகளிர் பெயரில் பதிவாகும் பத்திரங்களுக்கு, பதிவு கட்டணத்தில், ஒரு சதவீதம் குறைப்பு நாளை(ஏப்ரல் 1) முதல் அமலுக்கு வர உள்ளது. தமிழகத்தில் சொத்து பத்திரங்களை பதிவு செய்யும் போது, அதன் மதிப்பில் ஏழு சதவீதத்தை, முத்திரை தீர்வையாகவும், 2 சதவீதத்தை பதிவு கட்டணமாகவும், செலுத்த வேண்டும். 'மகளிர் பெயரில் பதிவாகும் பத்திரங்களுக்கு, பதிவு கட்டணத்தில் ஒரு சதவீதம் குறைக்கப்படும்' என, தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதை செயல்படுத்தும் வகையில், 10 லட்சம் ரூபாய் வரையிலான வீடு, மனை, விவசாய நிலங்களை, மகளிர் பெயரில் வாங்குவோருக்கு, ஒரு சதவீதம் பதிவு கட்டணம் குறைப்பு சலுகை, நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான அரசாணையை பதிவுத்துறை செயலர் குமார்ஜெயந்த் வெளியிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Sivak
மார் 31, 2025 13:15

அந்த லஞ்சத்தை ஒழிச்சாலே போதும்... மக்கள் நிம்மதியா இருப்பாங்க ... ஆமா அதென்ன பெண்களுக்கு மட்டும் ஏன்? ஆண்கள் பெயரில் வாங்கினால் இந்த சலுகை கிடையாதா? ஆம்பளைங்க சம்பாதிக்கணும் பெண்கள் பெயரில் சொத்து வாங்கணும் .... நல்ல இருக்கு ...


Anantharaman Srinivasan
மார் 31, 2025 11:18

வெறும் Eye wash. சொத்து மதிப்பு பத்து லட்சத்துக்குள்ளாக இருந்தால் தான்.


Jay
மார் 31, 2025 10:37

ரியல் எஸ்டேட் ட்ரான்ஸ்ஷாக்ஷன் குறைவதனால் தான் இது போன்ற சலுகைகள் கொடுக்கிறார்கள். ரியல்எஸ்டேட் துறை ஆய்வில் இருக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. பொதுவாக பொருளாதாரம் நன்றாக செல்லும்பொழுது இது போன்ற ரியல் எஸ்டேட் துறை நன்றாக செல்லும்.


ravi subramanian
மார் 31, 2025 08:06

All election stunt.


மணியன்
மார் 31, 2025 07:50

பத்திரபதிவு லஞ்சம் 16 மடங்கு அதிகம்.


புதிய வீடியோ