மேலும் செய்திகள்
தினமும் ஒரு பெருமாள் -2
17-Dec-2024
நவக்கிரக சன்னதி கும்பாபிேஷகம்
09-Dec-2024
கோயம்புத்துார் அருகே ஒத்தக்கால் மண்டபத்திலுள்ள நவகோடி நாராயணரை தரிசித்தால் நவக்கிரக தோஷம் நீங்கும். ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார் பெருமாள். வைணவ குருநாதரான ராமானுஜர் இங்கு வந்துள்ளார். இதனால் இவருக்கு பெருமாள் அருகே சிலை உள்ளது. இத்தல பெருமாளை தரிசிப்போருக்கு நவக்கிரக தோஷம் ஏற்படக் கூடாது என நவகோடி முனிவர்கள் வேண்டியுள்ளனர். இதனால் சுவாமிக்கு 'நவகோடி நாராயணர்' என்ற பெயர் உண்டானது. துளசி அர்ச்சனை செய்தால் நினைத்தது நடக்கும். முன்பு மூன்றடுக்கு கோட்டைக்குள் கோயில் இருந்துள்ளது. தற்போது புதியதாக திருப்பணி செய்யப்பட்டுள்ளது. புரட்டாசி சனிக்கிழமை, வைகுண்ட ஏகாதசியன்று சிறப்பு வழிபாடு நடக்கிறது.கோயம்புத்துாரில் இருந்து 19 கி.மீ., நேரம்: காலை 6:30 - 11:00 மணி மாலை 4:30 - 7:00 மணி தொடர்புக்கு: 89404 22202 அருகில் உள்ள தலம்: சிங்காநல்லுார் உலகளந்த பெருமாள் 20 கி.மீ., நேரம்: காலை 7:00 - 11:00 மணி மாலை 5:00 - 8:00 மணி
17-Dec-2024
09-Dec-2024