உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராமநாதபுரத்தில் ஓ.பி.எஸ்., போட்டி: பா.ஜ., கூட்டணியில் சுயேச்சை சின்னம்

ராமநாதபுரத்தில் ஓ.பி.எஸ்., போட்டி: பா.ஜ., கூட்டணியில் சுயேச்சை சின்னம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : பா.ஜ., கூட்டணியில், அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில், சுயேச்சை சின்னத்தில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட உள்ளார்.அவர் அளித்த பேட்டி: பிரதமர் மோடி சிறப்பான ஆட்சியை தந்துள்ளார். மூன்றாம் முறையாக, அவர் பிரதமராக வந்தால், அனைத்து நிலைகளிலும், இந்தியா முழு வளர்ச்சி அடைந்த நாடாக மாறும். எனவே, அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு, முழு ஆதரவை அளித்துள்ளோம். எங்கள் இலக்கு, இரட்டை இலை சின்னத்தை பெறுவது. அதற்காக சட்டப் போராட்டம் நடத்தி வருகிறோம். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், லோக்சபா தேர்தல் வந்துள்ளது. தொண்டர்கள் இரட்டை இலை சின்னத்தில் நிற்க வேண்டும் என்றனர். அதை பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதால், தொண்டர்களின் பலத்தை நிரூபிக்க, ஒரு தொகுதியில் நிற்க முடிவு செய்துள்ளோம்.ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில், பா.ஜ., கூட்டணி சார்பில், சுயேச்சை சின்னத்தில் போட்டியிட உள்ளோம். ஒரு தொண்டரை நிறுத்துவதை விட, நானே களத்தில் நின்று பலத்தை நிரூபிக்க உள்ளேன். தொகுதிகளை அதிகம் தர, அவர்கள் விருப்பம் தெரிவித்தனர். இரட்டை இலை சின்னம் இல்லாததால், ஒரு தொகுதியில் நிற்கிறோம். அனைத்து தொகுதிகளுக்கும் பிரசாரத்திற்கு செல்வேன். இவ்வாறு, அவர் கூறினார்.முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் கூறியதாவது: ராமநாதபுரம் தொகுதியில், லட்சக்கணக்கான ஓட்டுகள் வித்தியாசத்தில், பன்னீர்செல்வம் வெற்றி பெறுவார். புகழேந்தி, மருது அழகுராஜ் ஆகியோருடன் கருத்து வேறுபாடு இல்லை. அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.பன்னீர்செல்வம் தலைமையில், அ.தி.மு.க., வரும் என்ற நம்பிக்கை உள்ளது. தேர்தலில் இரட்டை இலையை எதிர்த்து நிற்கவில்லை; அதை பெற நிற்கிறோம். அ.தி.மு.க., கூட்டணி அணி அல்ல அது பிணி. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Ramaraj P
மார் 23, 2024 07:48

அதிமுக வே காலி ஆகப் போகிறது. இதில் பன்னீர்செல்வம் விதிவிலக்கு இல்லை ??


venugopal s
மார் 22, 2024 19:55

எப்படி இருந்தவர் இப்படி ஆகிவிட்டாரே! பேசாமல் அதிமுகவிலேயே மீண்டும் ஐக்கியம் ஆகிவிடலாம்!


venugopal s
மார் 22, 2024 11:39

எப்படி இருந்தவர் இப்படி ஆகிவிட்டாரே! இந்த அவமானம் இவருக்கு தேவையா? அநேகமாக இதுதான் இவர் போட்டியிடும் கடைசி தேர்தலாக இருக்கும், பாஜகவுடன் சேர்ந்த யாரும் உருப்பட்டதில்லை!


Oviya Vijay
மார் 22, 2024 08:21

முன்னாள் முதல்வர் என்ற அந்தஸ்து எங்கே... இப்போ பிஜேபியால் நடத்தப் படுவது கொடுக்கப்படும் மரியாதை எங்கே... உச்சகட்ட அவமானம்...


Raja Vardhini
மார் 22, 2024 08:07

இறைவன் கொடுத்த தண்டனை ஒரு சீட்டுக்கு கெஞ்சி ஐயோ பாவம்


சந்தர்
மார் 22, 2024 07:46

அதிமுக கூட்டணி அல்ல பிணி. இவிங்களுக்கு பிடிச்சது சனி. தேர்தலில் மக்கள் அடிக்கப் போறாங்க மணி. என் ரூட்டே தனி. கிடைக்காது வெற்றிக்கனி.


Raja Vardhini
மார் 22, 2024 07:26

டெபாசிட் கோவிந்தா வினை விதைத்தால் வினைதான் அறுவடை


மேலும் செய்திகள்