உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என விஜய் ஆவேசம்!

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என விஜய் ஆவேசம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:தமிழகத்தில் போலீஸ் விசாரணையின் போது இறந்தவர்களின் மரணத்திற்கு நீதி கேட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில், சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், 'தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை' என ஆவேசப்பட்டார். மேலும், 'ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ.,வின் கைப்பாவையாக சி.பி.ஐ., உள்ளது; அதன் பின்னால் முதல்வர் ஒளிந்து கொள்வது ஏன்' என்றும் கேள்வி எழுப்பினார்.தமிழகத்தில் நடந்த போலீஸ் நிலைய மரணங்களுக்கு நீதி கேட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில், சென்னை சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில், த.வெ.க., தலைவர் விஜய் பேசியதாவது:திருப்புவனம் அஜித்குமார் சாதாரண எளிய குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர். அவர் குடும்பத்திற்கு நடந்த கொடுமைக்கு முதல்வர் மன்னிப்பு கேட்டார்; அதில், தவறில்லை.

நிவாரணம்

அதோடு சேர்த்து இதையும் பண்ணிடுங்க முதல்வரே. அதாவது, உங்கள் ஆட்சிக் காலத்தில், போலீஸ் விசாரணையில், 24 பேர் இறந்துள்ளனர். அந்த, 24 பேரின் குடும்பத்திற்கும், நீங்கள் தயவு செய்து சாரி சொல்லிடுங்க.அஜித்குமார் குடும்பத்திற்கு நிவாரணம் தந்தது போல, 24 பேர் குடும்பத்திற்கும் நிவாரணம் கொடுத்துடுங்க. 'சாத்தான்குளம் ஜெபராஜ், பெனிக்ஸ் போலீஸ் நிலைய மரண வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்றி உத்தரவிட்டது, தமிழக காவல் துறைக்கு அவமானம்' என்று அன்று அறிக்கை வெளியிட்டீர்கள்.இன்றைக்கு நீங்கள் சி.பி.ஐ., உத்தரவிட்டதற்கு என்ன பேருங்க. அன்றைக்கு நீங்க சொன்னதும், இன்றைக்கு நடக்கறதும் அதேதான். ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ.,வின் கைப்பாவையாக சி.பி.ஐ., உள்ளது. அதன் பின்னால் ஏன் போய் ஒளிந்து கொள்கிறீர்கள்.

பயமே காரணம்

'அஜித்குமார் கொலை வழக்கு விசாரணையை, நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில், சிறப்பு புலனாய்வு குழு அமைத்து நடத்த வேண்டும்' என, த.வெ.க., சார்பில், 'ஸ்ட்ராங்' ஆக கேட்டுஉள்ளோம். மத்திய அரசு பின்னால் ஒளிந்து கொள்வதற்கு, அந்த பயம் தான் காரணம். உங்கள் ஆட்சியில் எத்தனை, 'அட்ராசிட்டீஸ்!' அண்ணா பல்கலை பாலியல் சம்பவம் முதல் அஜித்குமார் கொலை வரை, எல்லாவற்றுக்கும் நீதிமன்றம் தலையிட்டு கேள்வி கேட்கிறது. அப்படி நீதிமன்றம் கேள்வி கேட்க வேண்டும் என்றால், 'நீங்க எதுக்கு; உங்க ஆட்சி எதுக்குங்க முதல்வரே. உங்களுக்கு முதல்வர் பதவி எதுக்குங்க?'எப்படி கேட்டாலும், உங்களிடம் இருந்து எந்த பதிலும் வரப்போவது கிடையாது. மேக்சிமம், 'சாரி'மா என்ற பதில் தான் வரும். அப்படி இல்லை என்றால், தெரியாம நடந்துடுச்சும்மா; நடக்கக் கூடாதது நடந்துச்சுமா. 'சாரி' மா என்று பதில் வரும். இந்த வெற்று விளம்பர தி.மு.க., அரசு, இப்போது, 'சாரி' மா மாடல் அரசாக மாறி விட்டது. இப்படி இருக்கும் இயலாமை அரசு செய்த தவறுகளுக்கு பரிகாரமாக, சட்டம், ஒழுங்கை சரி செய்தே ஆகவேண்டும். இல்லையென்றால் மக்களோடு, மக்களாக நின்று, நாங்கள் சரி செய்ய வைப்போம். த.வெ.க., சார்பில் அதற்காக போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு விஜய் பேசினார்.அதைத்தொடர்ந்து, தமிழக அரசுக்கு எதிராக, கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த், தேர்தல் பிரிவு பிரசார மேலாண்மை செயலர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

'சாரி' வேண்டாம் பதாகையுடன் வந்த விஜய்

முதல்வரை 'சாரி' கேட்க சொன்னதால் குழப்பம்'சாரி வேண்டாம்; நீதி வேண்டும்' என்ற பதாகையை கையில் பிடித்திருந்த விஜய் பேசும் போது, முதல்வரிடம் சாரி கேட்க சொன்னதால், த.வெ.க.,வினர் குழப்பம் அடைந்தனர். த.வெ.க., ஆர்ப்பாட்டத்திற்கு கடந்த, 6 ம்தேதி அனுமதி கேட்ட நிலையில், போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவு பெற்று, போலீஸ் அனுமதியுடன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. திடீரென அனுமதி கிடைத்ததால், போராட்டத்தை நடத்தியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. முதலில் கட்சியின் மாநில நிர்வாகிகள் மட்டும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க திட்டமிட்டனர். ஆனால், ஆர்ப்பாட்டத்தில் விஜய் பங்கேற்றால் தான், எழுச்சியாக இருக்கும் என, அவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. அதை ஏற்று நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் விஜய் பங்கேற்றார்.தனது காரில் ஆர்ப்பாட்ட மேடைக்கு பின்புறம் வந்தார். அங்கிருந்து இறங்கி, வேகமாக மேடைக்கு சென்றார். விஜய்யின் பேச்சை கேட்பதற்காக தொண்டர்கள் அதிக அளவில் திரண்டனர். சிவானந்தா சாலை முழுதும், கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆர்ப்பாட்டத்தில் விஜய் குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது உரை நிகழ்த்துவார் என்று தொண்டர்கள் வெயிலில் காத்திருந்தனர். ஆனால், நான்கு நிமிடங்களிலேயே, தன் பேச்சை முடித்து கொண்டார். இதனால், ஆர்வமுடன் வந்த தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர். முதல்வர் ஸ்டாலின் படத்துடன், 'எங்களுக்கு சாரி வேண்டாம்; நீதி வேண்டும்' என அச்சிடப்பட்ட பதாகையை, விஜய் கையில் வைத்திருந்தார். ஆனால், விஜய் பேசும் போது, 'போலீஸ் நிலைய மரணங்களுக்கு, முதல்வர் சாரி கேட்க வேண்டும்' என்று வலியுறுத்தினார். இதனால், கட்சி தொண்டர்கள் குழப்பம் அடைந்தனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க திரண்டவர்களால் நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி பெண்கள் உட்பட, 20க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்தனர். அவர்களை தொண்டர்கள் ஓரமாக அழைத்து சென்று, தண்ணீர் தெளித்து ஆசுவாசப்படுத்தி அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

J. Vensuslaus
ஜூலை 15, 2025 03:26

மற்ற மாநிங்களோடு ஒப்பிடும்போது தமிழ் நாட்டில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளது. குற்றங்கள் மிக மிக குறைவு. அரசியலில் கால் ஊன்றுவதற்காக கொள்கையற்ற, நோக்கங்களற்ற கூத்தாடி கும்பல்கள் சாதாரணமாக நடக்கும் சம்பவங்களை மிகைப்படுத்தி தவறான செய்திகளை பரப்புகின்றன. இத்தகைய செய்திகளை பத்திரிகைகள் விற்பனையை அதிகரிக்க பெரிய பெரிய எழுத்துக்களில் அச்சிட்டு வெளியிடுகின்றன. குற்றங்களே நடவாத பிராந்தியங்களோ நாடுகளோ உலகில் எங்குமில்லை. அப்படியிருந்தால் அந்த விபரங்களை சோசப் விஐயோ அல்லது தினமலரோ ஜனங்களுக்கு சொல்லட்டும். சட்ட ஒழுங்கை நிலைநாட்டி குற்றங்களை குறைப்பதற்காகத்தான் காவல், நீதி துறைகள் முதலியன அமைக்கப் பட்டுள்ளன. சட்ட ஒழுங்கு பிரச்சனைகளே இல்லாத நாடு என்றால் அங்கே காவல் நிலையங்களுக்கு, நீதிமன்றங்களுக்கு, சிறைச்சாலைகளுக்கு என்ன தேவை? தெண்டத்திற்கு அல்லது முதல்வர் ஆகிவிடலாம் என்ற பேராசையில் கட்சி தொடக்கியிருக்கும் விசய் பிற மாநிங்களுக்கு பயணம் சென்று அங்கெல்லாம் நிலவும் சட்ட ஒழுங்கு நிலவரங்களை அறியவும். அப்போது புரியும் அவருக்கு தமிழ் நாட்டின் சிறப்பு. ஒரு குறிப்பிட்ட வழக்கை சிபிஐக்கு மாற்றுவதில் என்ன தவறு காணமுடியும். அப்படிப்பட்ட வழக்குகளை விசாரிக்கத்தானே சிபிஐ உள்ளது.


J. Vensuslaus
ஜூலை 14, 2025 18:48

மற்ற மாநிங்களோடு ஒப்பிடும்போது தமிழ் நாட்டில் குற்றங்கள் மிக மிக குறைவு. அரசியலில் கால் ஊன்றுவதற்காக கொள்கையற்ற, நல்ல சிந்தனையற்ற, நோக்கங்களற்ற இது போன்ற கும்பல்கள் சாதாரணமாக நடக்கும் சம்பவங்களை மிகைபடுத்தி தவறான செய்திகளை பரப்புகின்றன. இத்தகைய செய்திகளை பத்திரிகைகள் விற்பனையை அதிகரிக்க பெரிய பெரிய எழுத்துக்களில் அச்சிட்டு வெளியிடுகின்றன. குற்றங்களே நடவாத பிராந்தியங்களோ நாடுகளோ உலகில் எங்குமில்லை. அப்படியிருந்தால் அந்த விபரங்களை சோசப் விஐயோ அல்லது தினமலரோ சனங்களுக்கு சொல்லட்டும். குற்றங்களை குறைப்பதற்காகத்தான் காவல், நீதி துறைகள் முதலியன அமைக்கப் பட்டுள்ளன. குற்றங்களே நடக்காத நாடு என்றால் அங்கே போலீஸ், நீதிமன்றங்களுக்கு, சிறைச்சாலைகளுக்கு என்ன தேவை? தெண்டத்திற்கு அல்லது முதல்வர் ஆகிவிடலாம் என்ற பேராசையில் கட்சி தொடக்கியிருக்கும் விசய் பிற மாநிங்களுக்கு பயணம் சென்று வரவும். அப்போது புரியும் அவருக்கு தமிழ் நாட்டின் சிறப்பு.


என்றும் இந்தியன்
ஜூலை 14, 2025 16:24

இந்தமாதிரி அரசியலுக்கு வந்தவர்கள் பேசுவதை ஆய்ந்து பார்த்தால் இவர்கள் தேவதாசி குலத்தை சேர்ந்தவர்கள் என்று அதாவது பணம் பணம் பணம் கொடு எதற்கு வேண்டுமானாலும் ரெடி என்பது போல பட்டவர்த்தனமாகத்தெரிகின்றது அவர்களின் பேச்சும் செயலும்


என்றும் இந்தியன்
ஜூலை 14, 2025 16:16

கிறித்துவவ ஆட்சி மோசமென்று ஒரு கிறித்துவ நடிகன் சொல்வது கிறித்துவத்திற்கு சரியில்லையே


BHARATH
ஜூலை 14, 2025 14:37

என்ன கூந்தலுக்கு முதல் பக்கம். அவனே ஒரு தி மு க அடிமை


Nagendran,Erode
ஜூலை 14, 2025 15:29

அப்பத்துக்கு மதம் மாறிய Oviya vijay எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வரவும்..


நரேந்திர பாரதி
ஜூலை 14, 2025 13:34

ஜெய் ஜக்கம்மா...அவன் சொல்றான்...இவன் செய்றான்...கெட்ட காலம் பொறக்குது கெட்ட காலம் பொறக்குது


வண்டு முருகன்
ஜூலை 14, 2025 12:44

முதல்ல இவங்க கட்சிக்காரங்க செஞ்ச அநியாயங்களா ஊரே பார்த்து கைகொட்டி சிரிக்கிறது. இதுல இவரு சட்டம் ஒழுங்கு பத்தி பேசுறாரு


R.PERUMALRAJA
ஜூலை 14, 2025 10:23

காலி மனை வாங்கி போட்டு பின் நல்ல விலை வந்தவுடன் விற்பது போல, முதல்வர் நாற்காலி மீது கண் வைத்திருக்கும் விஜய்யையுடன் திரை படங்களில் நடித்த ஒருவர், விஜய்யை முதல்வர் நாற்காலி கனவு காண செய்து, விஜய் அவரது கட்சியை பல வருடங்களுக்கு வளர்க்க செய்து, வயது முதிர்ந்து MGR போல அரசியல்விட்டு ஒதுங்கும் நேரத்தில் கட்சியை கைப்பற்றி முதல்வராக ஆகிவிடலாம் என்று கனவுலகில் மிதந்து இருந்து கொண்டு இருக்கிறார் அந்த திரை பிரபலம். விஜய் முந்திக் கொண்டு ஆந்திர பவன் கல்யாண் போல முந்திக்கொண்டு ஆ தி மு க வுடன் கூட்டு சேர்வது சிறந்தது. இல்லை என்றால் அண்ணாதுரை கட்சியை வளர்த்து கறுநாகத்திடம் கொடுத்தது போல ஆகிவிடும்


R.PERUMALRAJA
ஜூலை 14, 2025 10:12

சர்வே எடுப்பதிலேயே, அதுவும் மக்களின் மன நிலையை வார வாரம் சர்வே எடுப்பதிலேயே உளவுத்துறையும் காவல் துறையும் காவல்துறையும் மூழ்கி விட்டது, பிறகு என்ன, எதை செய்தாலும் முதல்வர் கண்டுக்க மாட்டார், கண்டுக்க வாய்ப்பில்லை என்று எண்ணி இருக்கும் காவல் துறை மற்றும் உளவு துறை அதன் போக்கிற்கு வேலை செய்துகொண்டு, மேலும் மெருகு ஏற்றும் விதமாக, புதிதாக கட்சி ஆரம்பிக்கும் எல்லோரையும் முதல்வர் நாற்காலி மீது ஆசை காட்டி அவர்களை தனி தனியாக தேர்தலில் போட்டியிடவைத்து, வாக்குகளை பிரித்து, ஐந்தாவது அணி, ஆறாவது அணி என்று மாதாமாதம் ஒரு அணியை உருவாக்கி இருக்கும் எட்டு மாதத்தில் 8 அணியை உருவாக்க assignment மற்றும் target கொடுக்கப்பட்டு இருக்கிறது . ராமதாஸ் மற்றும் அன்புமணி சண்டை கூட உளவுத்துறையின் வேலையே , விஜய் தனியாக போட்டியிட்டால் முதல்வர் நாற்காலி என்று மறைமுகமாக ஆசை காட்டியதும் உளவுத்துறையை .


kumar mani-kamalam
ஜூலை 14, 2025 10:01

இதுவரை தேர்தலையே சந்திக்காத, தொடங்கி இரண்டு வருடங்கள் கூட ஆகாத "நடிகரின்" கட்சி நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு, பத்திரிகையின் முதல் பக்கத்தில் முக்கியத்துவம் கொடுக்கும், கட்சி தொடங்கி இதுவரை நான்கு பொதுத்தேர்தல்களை கூட்டணியில்லாமல் தனியாகச் சந்தித்து சிறிது சிறிதாக மக்களின் நம்பிக்கையைப் பெற்று தேர்தல் ஆணையம் மூலம் "அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி" யாக , மாநிலத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி தொடர்பான செய்திகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறது என்பதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை