உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழ் சினிமாவில் பெய்டு விமர்சனங்கள் அதிகம் : 96 இயக்குனர் பிரேம்குமார் குற்றச்சாட்டு

தமிழ் சினிமாவில் பெய்டு விமர்சனங்கள் அதிகம் : 96 இயக்குனர் பிரேம்குமார் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஒளிப்பதிவாளராக இருந்து விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த '96' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரேம்குமார். அடுத்து அவர் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி நடித்து வெளிவந்த 'மெய்யழகன்' படமும் பாராட்டுக்களைப் பெற்றது. இரண்டு படங்களுக்குமே 'பாசிட்டிவ் விமர்சனங்கள்' தான் அதிகம் வந்தது. 'மெய்யழகன்' படத்திற்கு மட்டும் சில 'நெகட்டிவ் விமர்சனங்கள்' வந்தது.இந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் மாநாட்டில் இயக்குனர் பிரேம்குமார் கலந்து கொண்ட விவாத நிகழ்வு ஒன்றின் வீடியோ சமீபத்தில் வெளியானது.அதில் பிரேம்குமார் பேசுகையில், “தமிழ் சினிமாவில் 'நெகட்டிவ் விமர்சனங்கள்' வருவது தற்போது மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது. நாளுக்கு நாள் அது அதிகமாகி வருகிறது. முன்பெல்லாம் அவர்களை விமர்சகர்கள் என்று அழைத்தோம், ஆனால், இப்போது அப்படியில்லை. அது வேறு விதமாக மாறிவிட்டது. அவர்களது 'டார்கெட்' வேறு ஒன்றாக இருக்கிறது. எல்லாரையும் அப்படி சொல்லவில்லை.அவர்கள் பேசும் விதம், பயன்படுத்தும் வார்த்தைகள் மிகவும் நெகட்டிவ்வாக உள்ளது. படம் வெளியான முதல் வார வசூலை அவர்கள் 'டார்கெட்' வைக்கிறார்கள். அதன்பின் அந்த தயாரிப்பாளர் அவரது அடுத்த படத்திற்கு அந்த விமர்சகரைத் தேடிப் போகிறார்.

நேர்மையான விமர்சனம் ?

பணம் கொடுத்து விமர்சனம் செய்வது தற்போது 90 சதவீதம் ஆகிவிட்டது. நேர்மையான விமர்சனம் செய்பவர்கள் கொஞ்சம் பேர்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு படத்தை சரியாக விமர்சனம் செய்யும் தகுதியும் இல்லை. ஒன்றிரண்டு பேர்தான் நல்ல விமர்சனம் தருகிறார்கள். இப்படியான விமர்சனங்களை வைத்துத்தான் ரசிகர்களும் படத்திற்குப் போகலாமா வேண்டாமா என முடிவு செய்கிறார்கள்.தமிழகத்தில் இது பெரிய பிரச்னையாக உள்ள நிலையில், அடுத்த மாநிலங்களைப் பற்றி எனக்குத் தெரியாது. இது மிகவும் மோசமாகப் போய்க் கொண்டிருக்கிறது. இதைப் பற்றி தயாரிப்பாளர்கள் மாநிலங்கள் கடந்து ஒன்றிணைந்து நிவர்த்தி செய்ய வேண்டும்,” இவ்வாறு அவர் பேசியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

ஆரூர் ரங்
ஜூலை 11, 2025 11:24

20 ஆண்டுகளுக்கு முன்பு அப்போது பிரபலமாக இருந்த இயக்குனர் .. தானே கதாநாயகனாக நடித்து இயக்கி தயாரித்த படத்தின் ஒளிபரப்பு உரிமையை அரசியல் குடும்ப சானல் மிகக்குறைந்த விலைக்குக் கேட்டு அழுத்தம் கொடுத்தது. அவர் அதற்கு மறுத்ததால் அப்படத்திற்கு படுமோசமான ரேட்டிங் விமர்சனம் செய்தது. அதையும் மீறி அப்படம் எதிர்பாராத அளவுக்கு சாதனை வசூல் செய்து தேசீய விருதுகளையும் பெற்றது. ஆக விமர்சனங்கள் மட்டுமே வெற்றியை பாதிக்கும் என்பது அபத்தம்.


அப்பாவி
ஜூலை 11, 2025 10:38

அந்த விமர்சனத்தை எல்லாம் படுச்சிட்டு படம் பாக்கப் போற மக்கள் மந்தைகளைச் சொல்ல மாட்டீங்களா?


Jagan (Proud Sangi )
ஜூலை 10, 2025 19:41

RJ பாலாஜி ன்னு ஒருத்தன் எப்பப்பாரு ஹிந்துக்களை ரொம்ப ரொம்ப கிண்டல் செய்யுறான், அவன் படத்தயும் போட்டு தாக்குங்கள் நண்பர்களே , உங்களுக்கு புண்னியமா போகும். நாசகார சினிமா ஒழிந்தால் சரியே.


yts
ஜூலை 10, 2025 19:23

நானும் தடக்லைட் படம் ஓடிடியில் தான் பார்த்தேன் பாதி படம் கூட என்னால் பார்க்க முடியவில்லை டிவியை அணைத்துவிட்டு சென்று ஓடி விட்டேன் இங்கேயும் வந்து சிலர் முட்டுக் கொடுக்கிறார்களே கமலுக்கு


Jagan (Proud Sangi )
ஜூலை 10, 2025 19:17

இது பிசினெஸ் தானே ??? நீங்க காசு குடுத்து நல்ல விமர்சம் எழுதாத மாதிரி பேசுறீங்க ? இது என்ன தேச பாதுகாப்பு சம்மந்தப்பட்டதா என்ன ?? சினிமா தானே, கேட்டதை குடுத்தாதே இல்லையா இதுக்கு முன்னாடி ?


ஆரூர் ரங்
ஜூலை 10, 2025 16:27

மொக்கை படங்களுக்கு கூட சோசியல் மீடியா இன்புளுயன்சர்களுக்கு தண்ணீ பார்ட்டி வெச்சு பெட்டிகளும் கொடுத்து, பாசிட்டிவ் விமர்சனம் எழுத வைக்கும் தயாரிப்பாளர்கள் பற்றியும் பேச வேண்டும். மேலும் பத்திரிக்கைகள் மற்றும் டிவி சானல்களுக்கு லஞ்சமாக பட விளம்பரங்கள் அளிக்கிறார்கள். அப்படி கவனிப்பு கிடைக்காத மற்ற பல சமூக வலைத்தள விமர்சகர்கள் அதே படங்களை கழுவி ஊற்றுகிறார்கள். சினிமாவே குறிபிட்ட சில ஆளும் கட்சி ஆட்களிடம் அடிமைப்பட்டு கிடக்கிறதாம். அவ‌ர்க‌ள்தானே முற்காலத்தில் / கவனிப்பு / கிடைக்காத படங்களுக்கு மட்டமான சானல் விமர்சன ரேட்டிங் கொடுத்து கீழே தள்ளிய கூட்டம்?


சின்னப்பா
ஜூலை 10, 2025 16:04

தமிழ்த் திரைப்படங்களின் முதல் எதிரி திரையரங்குகளின் குழு. அவர்கள் பலவிதங்களில் எதிர்மறை ஆகிறார்கள். எனக்கு மாதம் இரு டிக்கட்டுகள் கார்டு மூலம் இலவசம் உண்டு. இருந்தும் நான் தியேட்டர் செல்வதில்லை. ஏனெனில், பாப்காரன் தின்னும் சௌக் சௌக் சத்தம்… மற்றும் சிக்கன் நாற்றம்… பலமுறை பாதியில் திரும்பி வந்த பின்… அந்தப் பக்கமே போவதில்லை…. சௌகார் ஜானகியின் காவியத்தலைவி படத்தையே தோற்கடித்தவர்கள்தான் நம் விமர்சகர்களும், திரையரங்கு உரிமையாளர்களும்… கமல் அரசியல் சார்புக்கட்சியால், ஓரங்கட்டப்படுகிறார்!


Palani
ஜூலை 10, 2025 15:33

The statement is 100% correct


Oviya Vijay
ஜூலை 10, 2025 15:05

தக் லைஃப் திரைப்படம் ஓடிடியில் வெளியான பின் பார்க்க வாய்ப்புக் கிடைத்தது... என் மனம் முழுவதும் இந்தப் படம் வெளியான நாளில் இதைப் பற்றி வெளிவந்த விமர்சனங்களைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தது... இருப்பினும் நான் ஓடிடியில் படம் பார்க்க ஆரம்பிக்கையில் திரைப்படம் சிறிது சிறிதாக நகர ஆரம்பிக்க ஒவ்வொரு பிரேமிலும் என் மனதில் வாவ் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது... இந்தத் திரைப்படத்தில் என்ன குறை கண்டீர்கள் என்று திரைப்படம் வெளியான நாளில் விமர்சித்தவர்கள் மீது கோபம் கொள்ள வைத்தது... அசோக் செல்வன் கேரக்டர் வேண்டுமானால் முழுவதுமே இல்லாமல் இருந்திருக்கலாம் என்று மட்டும் என் மனதில் தோன்றியது... அதைத் தவிர்த்து வேறொன்றும் குறை இல்லாமல் திரைப்படம் மிக மிக அருமையாக இருந்தது... அடப்பாவிகளா... நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என ஒரு திரைப்படம் முழுவதற்கும் பல்லாயிரக்கணக்கான பேர் சேர்ந்து மாதக் கணக்கில் வருடக் கணக்கில் வடித்தெடுத்த ஒரு திரைப்படத்தை விமர்சனம் என்று ஒற்றை வார்த்தையில் அந்த திரைப்படத்தை சமாதி கட்டுகிறீர்களே... யார்ரா நீங்க எல்லாம் என கோபம் கொந்தளித்தது. தயவுசெய்து மக்களை தியேட்டருக்கு வர விடுங்கள். அவர்கள் வந்து பார்த்து படம் நன்றாக இருக்கிறதா இல்லையா என்பதை அவர்களே முடிவு செய்து கொள்ளட்டும் எனத் திரைப்படக் கலைஞர்கள் கெஞ்சுகிறார்கள். ஆனால் விமர்சகர்கள் என்னும் போர்வையில் இருக்கும் பன்றிகளின் காதுகளில் மட்டும் அது எட்ட மறுக்கிறது... கெடுவான் கேடு நினைப்பான்... நினைவில் கொள்ளுங்கள்... மறவாதீர்...


venugopal s
ஜூலை 10, 2025 15:39

இந்தப் படத்தை தியேட்டரில் போய் பார்த்து விட்டு வந்த போது நீங்கள் சொல்வது போல் தான் நானும் நினைத்தேன்!


ஆரூர் ரங்
ஜூலை 10, 2025 16:42

எல்லா 200 ம் ஒரே மாதிரி நினைக்கிறார்கள். ஒரு எம்பி சீட் போதும். பூமர், அவுட் டேட்டட் ஆட்களின் படங்களை ரசிக்க இளைஞர்கள் தயாராக இல்லை.


Velayutham rajeswaran
ஜூலை 10, 2025 14:04

நடிகர்கள் சில கட்சிகளின் சார்பில் PAID PROMOTION வேலையில் ஈடுபட்டால் அதற்கு எதிர்வினை இப்படித்தான் இருக்கும் முதலில் திருந்த வேண்டியது தமிழ் திரையுலகமே


புதிய வீடியோ