உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாகிஸ்தான் தேர்தல் ஓட்டுப்பதிவு; பலத்த பாதுகாப்பு

பாகிஸ்தான் தேர்தல் ஓட்டுப்பதிவு; பலத்த பாதுகாப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பார்லிமென்ட் பொதுத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று (பிப்8) காலை துவங்கியது. 50 ஆயிரத்திற்கும் மேலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அசம்பாவிதங்களை தவிர்க்க முக்கிய பகுதிகளில் மொபைல் போன் தொடர்பு, இன்டர்நெட் தடை செய்யப்பட்டுள்ளது. பாக்., பிரதமராக, 2018 - 22 வரை பாக்., தெஹ்ரீக் - இ - இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான், 71, பதவி வகித்தார். இவரது ஆட்சி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து அவர் பதவி விலகினார்., இம்ரான் மீது ஊழல் உட்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் தண்டனை பெற்றார் .இதையடுத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக பதவி ஏற்றார்.இவரது பதவி காலம் நிறைவடையும் முன்பே கடந்தாண்டு ஆகஸ்டில் பார்லிமென்ட் கலைக்கப்பட்டடது.இந்நிலையில் பாகிஸ்தான் பார்லிமென்டான தேசிய சபைக்கு இன்று தேர்தல் நடக்கிறது. 336 உறுப்பினர்களை கொண்ட பாகிஸ்தான் தேசிய சபைக்கு 266 உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்படுகிறார்கள். 60 இடங்கள் பெண்களுக்காகவும், 10 இடங்கள் அந்நாட்டின் சிறுபான்மை மக்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன.பதிவு செய்யப்பட்ட 167 கட்சிகள், 5,121 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நாடு முழுதும் 90,582 ஒட்டுச்சாவடிகளில் பலத்த பாதுகாப்புடன் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.தவிர பஞ்சாப், சிந்து, கைபர் பக்துன்வாஹா, பலுசிஸ்தான் ஆகிய மாகாண சட்டசபைகளுக்கும் இன்று தேர்தல் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை