உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எங்களை விட பா.ஜ., அதிக ஓட்டு வாங்கினால் கட்சி கலைப்பு: சீமான் சத்தியம்

எங்களை விட பா.ஜ., அதிக ஓட்டு வாங்கினால் கட்சி கலைப்பு: சீமான் சத்தியம்

சென்னை: லோக்சபா தேர்தலில், நாம் தமிழர் கட்சியை விட, பா.ஜ., என்ற கட்சி தனியாக அதிக ஓட்டுகளை பெற்றால் நான் கட்சியை கலைத்துவிட்டு செல்கிறேன் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக தெரிவித்தார்.இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: தமிழர்களை திருடர்கள் போல சித்தரித்து பேசுகிறார் மோடி. இதுபோன்ற பேச்சை ஏப்ரல் 19ம் தேதிக்கு முன்பே பேசியிருக்க வேண்டியதுதானே!. தென் மாநிலங்களில் பா.ஜ., தவிர்க்க முடியாத சக்தியாக வரும் என அண்ணாமலை பேசுகிறார். அவர், தனித்து நின்று போட்டியிட்டு காட்டட்டும். ஜூன் 4ல் வெளியாகும் லோக்சபா தேர்தல் முடிவுகளில் பா.ஜ., என்ற தனிக்கட்சியாக பெற்ற ஓட்டுகள், நாம் தமிழர் கட்சியை விட கூடுதலாக பெற்றால், நான் கட்சியை கலைத்துவிட்டு செல்கிறேன். யார் பெரிய கட்சி என்பது அப்போது தெரியும். அவர்களின் கூட்டணியாக ஓட்டை கணக்கிடக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 109 )

Seenu Krishnamurthy
மே 28, 2024 15:26

நீ கட்சி நடத்துவதாலோ களைத்து இட்டு போவதாலோ யாருக்கும் எந்த நஷ்டமும் லாபமும் இல்லை எனவே நீ கதறாமல் களைத்து விடு


Seenu Krishnamurthy
மே 28, 2024 15:15

திருப்பியும் கதறி கதறி ...


Natchimuthu Chithiraisamy
மே 27, 2024 19:17

கண்டிப்பாக நடந்து விடும். கட்சி கலையாது


Seenu Krishnamurthy
மே 27, 2024 16:16

கலைத்துவிட்டு என்ன செய்ய போகிறார்


Mohan
மே 27, 2024 13:29

ஐயா, உரத்த குரலில் பேசினால் உத்தம மனிதன் என்ஒ


RAMAKRISHNAN NATESAN
மே 27, 2024 11:32

எது எப்படியோ பிஜேபி யை நம்பித்தான் கட்சி நடத்துகிறாய் என்று உணர்த்தியதற்கு நன்றி ....


duruvasar
மே 27, 2024 10:38

அழுகி போனால் காய்கறி கூட சமையலுக்கு ஆகாது


Mohan
மே 26, 2024 22:55

பிஜேபி க்கு விழுந்த ஓட்டுகளை எப்படி தனியாக பிரிக்க முடியும். கூட்டணி கட்சி சார்ந்த ஓட்டுக்கள் விழுந்திருக்குமே. அதனால தான் சவால் விடுறாரோ. 26 ல பார்ப்போம்.


Thanjavur K. Mani Iyer
மே 26, 2024 09:53

இந்தமாதிரி சவால்களை யாராக இருந்தாலும் முன்கூட்டியே சொல்லி இருக்க வேண்டும். எல்லாம் முனைந்த பிறகு எந்த சூழ்நிலையிலும் ஏற்க தாக்குதல்ல.


Authilingam S
மே 26, 2024 09:14

ஜூன் 6ம் தேதிக்கு பிறகு விமர்சகர்கள் எல்லோரும் வாலை சுருட்டிக் கொண்டு காணாமல் போய் விடுவார்கள்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை