உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போதையில்லா தமிழகம் உருவாக பா.ஜ., கூட்டணிக்கு மக்கள் ஓட்டளிக்க வேண்டும்

போதையில்லா தமிழகம் உருவாக பா.ஜ., கூட்டணிக்கு மக்கள் ஓட்டளிக்க வேண்டும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : ''போதையில்லா தமிழகத்தை உருவாக்க, பா.ஜ., கூட்டணிக்கு தமிழக மக்கள் ஓட்டளிக்க வேண்டும்,'' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வேண்டுகோள் விடுத்தார். ரங்கராஜ் பாண்டேயின், 'சாணக்யா' யு -டியூப் சேனலின் ஐந்தாம் ஆண்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நிர்மலா சீதாராமன் பேசியதாவது:தொழில்நுட்ப வளர்ச்சியில், ஆட்சியாளர்களை நோக்கி சாதாரண மக்களும் கேள்வி கேட்கும் சூழல் உருவாகியுள்ளது. இது, வரவேற்கக் கூடியது என்றாலும், சமூக ஊடகங்கள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி விடுகின்றன. எல்லா அரசியல் கட்சிகளும், எல்லா தலைவர்களும் ஒன்று தான் என்ற எண்ணத்தை, மக்களிடம் ஊடகங்கள் விதைக்கின்றன. ஆனால், இன்று அந்த நிலை மாறத் துவங்கியுள்ளது.

கேட்பதில்லை

எல்லா கட்சிகளையும் போல பா.ஜ., அல்ல. எல்லா தலைவர்களையும் போல பிரதமர் மோடி அல்ல. நமக்கான தலைவர் மோடி என்பதை மக்கள் உணரத் துவங்கியுள்ளனர். பா.ஜ.,வையும், பிரதமர் மோடியையும் கேள்வி கேட்கும் ஊடகங்கள் மற்ற கட்சிகளிடம் கேட்பதில்லை. முடியாது என தெரிந்தும், முதல் கையெழுத்து போடுவோம் என்று சொன்ன கட்சிகளிடம் கேள்வி கேட்பதில்லை.லோக்சபா தேர்தல் நேரத்தில், இண்டியா கூட்டணி என்பது பொழுது போக்கு மட்டுமே. எமர்ஜென்சி காலத்தில், சட்டத்திற்கு எதிராக பார்லிமென்ட் பதவிக்காலத்தை நீட்டித்து, அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்து, மதச்சார்பின்மை என்ற வார்த்தையை சேர்த்தனர். அதை, மூலமந்திரமாக்கி அரசியல் நடத்துகின்றனர். மதச்சார்பின்மை என்ற பெயரில் பெரும்பான்மை மக்களின் மதத்தை கேவலமாக பேசுகின்றனர். ஒரு மதத்தை மட்டும் டெங்கு போல, கொசு போல ஒழிப்பேன் என்கின்றனர். மற்ற மதங்களை பற்றி பேசுவதில்லை; இது, கோழைத்தனம்.'டாஸ்மாக்' பற்றி பேசி முடிக்கும் முன், வேறொரு சரக்கை இறக்கி விட்டனர். போதையில்லா தமிழகத்தை உருவாக்க, லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணிக்கு மக்கள் ஓட்டளிக்க வேண்டும். மோடி மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தால், இந்தியா வல்லரசாகும். இல்லையெனில், புல்லரசாகி விடும்.

அமோக வெற்றி

லோக்சபா தேர்தலில் தேசிய கட்சிகளுக்கு ஓட்டளிக்கும் முதிர்ச்சி தமிழகத்தில் இருந்தது. இப்போது, தமிழகத்தில் தேசிய கட்சி பா.ஜ., தான். எனவே, ஆன்மிகத்தையும், தேசியத்தையும் முன் வைக்கும் பா.ஜ., கூட்டணிக்கு தமிழக மக்கள் ஓட்டளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.விழாவில் பேசிய த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன், ''பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராவது உறுதி. எப்போதும் தேசிய சக்திகளுக்கு ஆதரவளிக்கும் தமிழக மக்கள் இந்த முறை, பா.ஜ., கூட்டணிக்கு ஓட்டளிப்பர். தமிழகத்தில் பா.ஜ., கூட்டணி அமோக வெற்றி பெறும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

J.Isaac
மார் 17, 2024 17:13

பெயரிலும் , ஊரிலும் உண்மை இல்லையே.


sankar
மார் 18, 2024 08:21

ஊழல் கட்சிகள் கூட்டணி என்று ஏற்கெனெவே கேட்ட பெயர் - இப்போது மேலும் மகுடமாக போதை கும்பல் தொடர்பு - இதற்கு மேலும் அந்த கூட்டணி தேறும் என்று நினைக்கிறீர்களா சார்


venugopal s
மார் 17, 2024 16:45

மக்களுக்கு அபின் (போதைப்பொருள்) என்று நான் சொல்லவில்லை, கார்ல் மார்க்ஸ் சொல்லி இருக்கிறார்!


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 17, 2024 18:58

கார்ல் மார்க்ஸ் யாருக்கு முன்னோடி ???? திக மற்றும் திமுகவுக்குத்தானே ????


கனோஜ் ஆங்ரே
மார் 17, 2024 14:00

இந்த செய்திக்கு... இந்தம்மாவின் பதில் என்ன..?


கனோஜ் ஆங்ரே
மார் 17, 2024 18:37

குஜராத்ல போன மாசம் ஆயிரம் கிலோ போதைப் பொருள் பிடிச்சதை அதச் சொன்னேன்.


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 17, 2024 21:50

இவர் நிர்வகிப்பது பொருளாதாரம் ..... போதை பொருள் பிடிபட்டால் அதற்கான விசாரணையை முன்னெடுக்க வேண்டியது மத்திய உள்துறை ..... டீம்கா அடிமைகளுக்கு ஐ க்யூ தான் நெகட்டிவ் ன்னு நினைச்சோம் .... இப்போ ஜிகே யிலுமா ????


Sridhar
மார் 17, 2024 12:35

அருவருக்கத்தக்க திருட்டு திராவிடியா கும்பல் வேரோடு தமிழகத்திலிருந்து அப்புறப்படுத்த படவேண்டும். அதன் ஆரம்பம் இந்த பாராளுமன்ற தேர்தலில் தெரியவில்லை என்றால் தமிழ்நாடு மிகப்பெரிய அழிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது என்று அர்த்தம்.


Mariadoss E
மார் 17, 2024 12:13

அப்ப போதை இல்லாத குஜராத் உண்டாக என்ன செய்ய வேண்டும்?


கனோஜ் ஆங்ரே
மார் 17, 2024 14:02

இந்தம்மா இங்க வந்து உருட்டிட்டு போவுது.


செந்தமிழ் கார்த்திக்
மார் 17, 2024 11:45

ரங்கராஜ் "பாண்டே" அவர்கள் அவரது பாஜக கொள்கை பரப்பும் வியாபாரத்தை தமிழ்நாட்டில் ஆரம்பிக்காமல் வட மாநிலங்களில் ஆரம்பித்து இருந்தால் இந்நேரம் பெரிய கோடீஸ்வரர் ஆக்கிருப்பார்.. பாவம்.


Barakat Ali
மார் 17, 2024 12:54

தானா சேர்ந்த கூட்டம் இது ........ 200 உ பி ஸ் பரிதாபப்பட தேவையில்லை .....


செந்தமிழ் கார்த்திக்
மார் 17, 2024 13:47

காசிற்கு தான் சேர்த்த கூட்டம் என்பது ஊருக்கே தெரியும். இந்த உருட்டல் எல்லாம் வேணாம்.


முருகன்
மார் 17, 2024 11:25

போதைப்பொருள் வருவது ஏதோ தமிழகத்தில் இருந்து தான் என பேசுவதின் நோக்கம்தேர்தல் தான்


J.Isaac
மார் 17, 2024 11:23

முதலில் உ.பி, ம.பி மாநிலங்களை போதையில்லா மாநிலங்களாக மாற்றுங்கள். இங்கு வந்து நடிக்க வேண்டாம்


Barakat Ali
மார் 17, 2024 08:53

கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஒரு மாதிரியாகவும், மக்களவைத் தேர்தலுக்கு வேறொரு மாதிரியாகவும் வாக்களிக்கிறார்கள்.. தமிழக மாக்களுக்கு அந்த வேறுபாடு தெரியவில்லை ...... ஆகவே திமுக கூட்டணிக்கு முப்பது இடங்கள் உறுதி ....


sankar
மார் 17, 2024 09:58

அதெல்லாம் பழைய காலம் - இப்போ பாருங்கள் திமுக ஒற்றை இலக்கம் வெல்வதே சிரமம்


செந்தமிழ் கார்த்திக்
மார் 17, 2024 13:49

சங்கர் அவர்கள், தேர்தலுக்கு பிறகு பேசவும்.


sankar
மார் 17, 2024 17:41

தாராளமாக -


kamal
மார் 17, 2024 08:32

we have to vote for a parties who dont supply drugs to Tamilnadu and gateway to India via gujarat


Bala
மார் 17, 2024 21:48

Who is bringing drugs to T.N via Gujarat ? Former DMK member Jaffer saadiq???? I don't know. Yes we should not vote for such parties


மேலும் செய்திகள்







புதிய வீடியோ