உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருப்பரங்குன்றம் மலைக்கோவிலுக்கு செல்ல கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி

திருப்பரங்குன்றம் மலைக்கோவிலுக்கு செல்ல கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.திருப்பரங்குன்றம் கோவில் மலை மீது உச்சியில் உள்ள தீபத்தூணில், நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், தீபத்தை ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதனால், திமுக அரசைக் கண்டித்து ஹிந்து முன்னணி உள்ளிட்ட ஹிந்து அமைப்புகளும், பாஜ போன்ற கட்சியினரும் அங்கு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=r50nc4id&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தீபத்தூண் விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 2 வாரங்களுக்கு மேலாக திருப்பரங்குன்றம் மலை உச்சிக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.இந்த சூழலில், திருப்பரங்குன்றம் மலையின் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவின் சந்தனக்கூடு விழாவையொட்டி, நேற்று போலீஸ் பாதுகாப்புடன் முஸ்லிம்கள் கொடியேற்ற நிகழ்வை நடத்தினர். இதையடுத்து, நேற்று பிற்பகலில் தங்களையும் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்று கூறி 15க்கும் மேற்பட்ட ஹிந்து சமூக மக்கள் போராட்டம் நடத்தினர். இதனால், அவர்கள் கைது செய்யப்பட்டனர்.இந்த நிலையில், மலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்துள்ளது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மலைக்கு செல்பவர்களின் செல்போன் எண், ஆதார் எண் உள்ளிட்ட விபரங்களை பெற்றுக் கொண்டு, தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், வீடியோ, போட்டோ எடுக்கவும் போலீசார் தடை விதித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Raja
டிச 23, 2025 06:35

அத்தனை கோடி பேர் வாழும் ஊரில் 15 பேர் ஒரு கலவரத்தை உண்டாக்க இவ்வளவு.தீவிரமாக உள்ளார்கள். கோடாரி, தனது கைப்பிடி மரம் என்பதைக் காட்டி தானும் மரம் தான் என சொல்லுமாம். நம்பும் மரங்கள் அதே கோடாரியால் என்ன நிலையாகும் என்பது பிறகு தான் புரியும்


kanoj ankre, mumbai
டிச 22, 2025 23:33

சாதனத்தை கண்டு அவ்ளோ பயம். அப்போ பகுத்தறிவு எல்லாம் உருட்டு போல


A CLASS
டிச 22, 2025 23:32

வரும் தேர்தலில் முருகப்பெருமான் அசுரர்களை விரட்டியடித்து மாபெரும் வெற்றி பெறுவார். வெற்றிவேல் வீரவேல்


sankaranarayanan
டிச 22, 2025 21:37

மலைக்கு செல்பவர்களின் செல்போன் எண், ஆதார் எண் உள்ளிட்ட விபரங்களை பெற்றுக் கொண்டு, தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகள் ஆங்கிலேயர்காலத்தில்கூட இருந்தது இல்லை நமது நாட்டின் நமதுக்கு கோயிலுக்கு செல்லக்ககூட இந்த திராவிட மாடல் அரசு கட்டுப்பாடுகளை விதிக்கின்றது மக்கள் சரியான பாடத்தை வரும் தேர்தலில் புகட்ட வேண்டும்


Kasimani Baskaran
டிச 22, 2025 19:16

திராவிட காட்டாட்சி நடக்கிறது.


Balaa
டிச 22, 2025 18:57

பூவோடு சிறுபான்மையினர் சேர்ந்த நார் இந்துக்கள் மணக்கின்றனர். ஒரு சமுதாயத்தை சார்ந்தவர்கள் கல்லறைக்கு செல்ல பிரச்சினை இல்லாமல் இருப்பதற்கு பெரும்பான்மையினர் உரிமையை யாசகமாக அளிக்கிறது இந்த அரசு. ஏன், தீபம் ஏற்றினால் வரும் மதக்கலவரம் இப்ப வராதா. முருகா, தமிழ் நாட்டை இந்த கயவர்களிடம் இருந்து காப்பாற்றப்பா.


Rajarajan
டிச 22, 2025 17:04

அடப்பாவிகளா, இந்துமதம் பெரும்பாலும் உள்ள நாட்டில், இந்துக்களுக்கே வழிபாட்டுக்கு தடையா ?? என்ன கொடுமை இது. இதை ஹிந்துக்கள் தான் புரிந்துகொள்ளவேண்டும். அதிருக்கட்டும். இந்துக்களின் மதத்தை நம்பாத திராவிட கட்சியினர், மற்ற மதம் தோன்றும்போது அருகில் இருந்தாரா ? அல்லது அந்த கடவுள்களை நேரில் பார்த்தாரா ?? அதை மட்டும் எப்படி நம்புகின்றனர் ?? ஒரு நியாயம் வேண்டாமா ??


Sundaran
டிச 22, 2025 17:00

அறிவு கெட்ட ஆட்சியர்கள். இதை முன்பே செய்திருக்கலாமே. செருப்படி பட்ட பின்பு தான் புத்தி வருகிறது. இந்துக்களின் எழுச்சியை கண்டு ஸ்டாலின் பயந்து விட்டது தெரிகிறது. இதை நம்பி ஏமாந்து தி மு க வுக்கு ஒட்டு போட்டு விடாதீர்கள் இந்துக்களே வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிவிடும். ஒற்றுமையை தொடர்ந்து கடை பிடியுங்கள்


Rathna
டிச 22, 2025 16:54

இங்கே படை எடுத்த ஆப்கானியனுக்கு உள்ள மரியாதை தமிழர் தெய்வத்திற்கு இல்லை. இஸ்லாத்தில் சமாதி தர்கா வழிபாடு முற்றிலும் தடை செய்யப்பட்டு உள்ளது. அவர்களது கொள்கை இறைவன் மட்டுமே வழிபாட்டுக்கு உரியவன். சவூதி அரேபியா நபியின் வழிவந்தவர்கள் பலரது சமாதியை அந்த நாட்டு வளர்ச்சி திட்டங்களுக்காக இடித்து தள்ளியது இதனால் தான்.


Kumar Kumzi
டிச 22, 2025 16:50

சிறுபான்மையினரின் ஓட்டு பிச்சை விரட்டியடிப்போம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை