| ADDED : மார் 17, 2024 04:05 AM
சென்னை : தமிழகம் முழுதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. தலைமைச் செயலகத்தில், முதல்வர் படங்கள் அகற்றப்பட்டன.தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டதும், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. தலைமைச் செயலகத்தில், ஆறாம் கேட் நுழைவு வாயில் பகுதியில், செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள், பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன.நேற்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், அவை அனைத்தும் அகற்றப்பட்டன. அதேபோல் மாவட்டங்களில், பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர், வாகன சோதனையை துவக்கினர். தேர்தல் தொடர்பாக, சுவரொட்டிகள் ஒட்ட, பேனர்கள் வைக்க, சுவர் விளம்பரம் செய்ய, தடை விதிக்கப்பட்டுள்ளது.