உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / லட்சத்தீவில் பிரதமர் மோடி: தமிழக போலீஸ் பாதுகாப்பு

லட்சத்தீவில் பிரதமர் மோடி: தமிழக போலீஸ் பாதுகாப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : லட்சத்தீவில் நலத்திட்டப் பணிகளை துவக்கிய பிரதமர் மோடிக்கு, தமிழக காவல் துறையைச் சேர்ந்த, இரண்டு எஸ்.பி.,க்கள் தலைமையில், பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.ஜன.,2ல் தமிழகம் வந்த பிரதமர் மோடி, திருச்சியில் விமான நிலைய புது முனையம் திறப்பு மற்றும் பாரதிதாசன் பல்கலை பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். அவர், லட்சத்தீவு தலைநகரான, 7 கி.மீ., பரப்பளவில் உள்ள கவரத்தி தீவில், பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவருக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டது.பிரதமருக்கான பாதுகாப்பு பணியில், மத்திய அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க, தமிழக காவல் துறையில், கமாண்டோ படை மற்றும் கடலோர பாதுகாப்பு குழு உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் ஈடுபட்டனர்.போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், 'பிரதமருக்கான பாதுகாப்பு பணியில் உள்ளூர் போலீசாரும் ஈடுபடுவர். தமிழகம் வந்த பிரதமருக்கு எவ்வித குளறுபடியும் இன்றி சிறப்பான பாதுகாப்பு அளிக்கப்பட்டது.'அந்த அனுபவத்தின் அடிப்படையில், லட்சத்தீவிலும் தமிழக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இது பரஸ்பரமான நடவடிக்கை தான்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

JAISANKAR
ஜன 04, 2024 07:24

மத்திய உள்துறை அமைச்சர் கட்டு பா ட் லில் உள்ள திகார் ஜெயிலில் தமிழ் நாடு போலிஸ் தான் பாதுகாப்பு பணி் செய் கிரார்


Yes your honor
ஜன 04, 2024 07:08

முன்பு 'வேர் எவர் யு கோ அவர் நெட்வர்க் வில் ஃபாலோ யூ' என்ற ஹட்சு நெட்வொர்க் விளம்பரம் வரும். அதேபோன்று இன்று நம் மோடி ஜி எங்கே சென்றாலும் அங்கேயே சென்று அவர் காலில் விழும் நிலைக்கு வந்து விட்டார்கள் விடியாத வாய்த்துடுக்குகள்.


N Annamalai
ஜன 04, 2024 06:08

திறமையான காவல்துறை என்ற பெயர் நிலை நாட்டப் பட்டு உள்ளது .வாழ்த்துக்கள்


raja
ஜன 04, 2024 06:05

பாதுகாப்பில் பிரதமர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.. முன்னாள் பிரதமர் ராஜிவ் விற்ற்கும் திமுக ஆட்சியில் இருந்த பொழுது தமிழக போலீஸ் தான் காவலுக்கு இருந்தது என்பதை மறந்து விட கூடாது....ஒன்கொள் கொள்ளை கூட்ட கோவால் புற குடும்பம் எந்த எல்லைக்கும் செல்வார்கள் அவர்கள் சிறை செல்லும் சூழ்நிலை வந்தால்...


Mani . V
ஜன 04, 2024 05:06

லட்சத்தீவு தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டில் இல்லையே. அப்படியிருக்க ஏன் தமிழகப் போலீஸ் பாதுகாப்புப் பணியை செய்ய வேண்டும்? எது வருங்காலக் கூட்டணிக் கட்சித் தலைவரை குளிர்விக்க இந்த ஏற்பாடா? அப்பச் சரி. நோ கமெண்ட்ஸ்.


kijan
ஜன 04, 2024 04:53

தமிழக போலீசார் மிக திறமையானவர்கள் .... அரசியல் அழுத்தம் இல்லாமல் இருந்தால் ....இன்னும் சிறப்பாக செயல் படுவார்கள் .....


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை