உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா: பிரதமர் மோடி பங்கேற்பு

ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா: பிரதமர் மோடி பங்கேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டை முன்னிட்டு நாளை டில்லியில் நடக்கும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.1925ம் ஆண்டு விஜயதசமி அன்று நிறுவப்பட்ட ஆர்.எஸ்.எஸ்., வரும் வியாழக்கிழமை அன்று(அக்டோபர் 2) 100 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.இதனை முன்னிட்டு, டில்லியில் நாளை நடக்கும் விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி தலைமை விருந்தினராக பங்கேற்கிறார். அக்., 1 ல் டில்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில் காலை 10:30 மணிக்கு நிகழ்ச்சி துவங்குகிறது. அவ்விழாவில், ஆர்எஸ்எஸ்எமைப்பு நாட்டுக்கு அளித்த பங்களிப்பை எடுத்துக்காட்டும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நினைவு நாணயத்தை வெளியிட்டு பிரதமர் மோடி உரையாற்றுவார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.முன்னதாக, நேற்று மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் பேசிய பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் அமைப்பை பாராட்டி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

R. SUKUMAR CHEZHIAN
செப் 30, 2025 20:35

பெருமையாக உள்ளது, ஒரு ஆர்.எஸ்.எஸ் ஸ்வம்சேவக் சங்க விழாவில் பங்கேற்பது ஆச்சரியம் ஒன்று இல்லை. சங்கத்தின் இலக்கு நமது ரஷ்ட்ரம் உலகில் பரம் வைபவமான நிலையை அடைய வேண்டும் என்பதே அதை நோக்கி நாம் வேகமாக வீறுநடை போடுகிறோம். வெல்க பாரத அன்னை.


Sundar R
செப் 30, 2025 20:20

Relentless, Selfless, Service - That is Rashtriya Swayam Sevak Sangh. Long Live RSS.


Peer Mohideen
செப் 30, 2025 18:11

Aaaaa


sundarsvpr
செப் 30, 2025 17:52

தமிழ்நாட்டில் ஈரோடு வெங்கிடசாமி ராமசாமி என்பவரால் திராவிட கழகம் ஆரம்பிக்கப்பட்டது. இவரின் முக்கிய கொள்கை ஹிந்து திருக்கோயில்களை இடிக்கவேண்டும் பார்ப்பனியத்தை ஒழிக்கவேண்டும். இந்த முக்கிய கொள்கை பெயரளவில் தி. மு க வில் இன்றும் இருக்கிறது. ஆர் எஸ் எஸ் தேசிய உயர்வை வளர்கிறது. தமிழ்நாட்டில் பெருபான்மையோர் ஹிந்துக்கள். இருந்தபோதிலும் தமிழ்நாட்டில் ஆர் எஸ் எஸ் வளர்ச்சி குண்டூசி அளவுதான் மத எதிர்ப்பு கட்சி ஆட்சியில் தொடர்கிறது.


Moorthy
செப் 30, 2025 17:19

ஆர் எஸ் எஸ் என்ற கடலில் கண்டெடுக்கப்பட்ட ஒரு நன் முத்து நமோ ஆர் எஸ் எஸ் ஆல் நமோ வுக்கு பெருமை...நமோவால் ஆர் எஸ் எஸ் கு பெருமை


Moorthy
செப் 30, 2025 17:16

அரசியல் ரீதியாக பிஜேபி,ஏ பி வி பி ,ஹெச்சே எம் எஸ் போன்றவை வலுவாக இருந்தாலும் இந்து மாதத்தில் உள்ள சாதிய பிளவுகளால் ஒடுக்கப்பட்டோர் , தாழ்த்தப்பட்டோர் ஆகியோருக்கு ஆர் எஸ் எஸ் இll இன்னும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும்


RAMESH KUMAR R V
செப் 30, 2025 17:13

உலகம் போற்றும் தன்னலமற்ற உன்னத அமைப்பு


Moorthy
செப் 30, 2025 17:07

மோடி பங்கேற்காவிட்டால் அது ஆர் எஸ் எஸ் நூற்றாண்டு விழாவே இல்லை வாழ்க ஆர் எஸ் எஸ் , வாழ்த்துக்கள் நமோ


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை