உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொன்முடி வழக்கில் ஏப்., 15ல் விசாரணை

பொன்முடி வழக்கில் ஏப்., 15ல் விசாரணை

சென்னை:சொத்துக்குவிப்பு வழக்கில், முன்னாள் அமைச்சர் பொன்முடி விடுதலை உத்தரவை, ஆய்வு செய்யும் விதமாக எடுக்கப்பட்ட வழக்கின் விசாரணையை, ஏப்ரல் 15க்கு, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோரை விடுதலை செய்து, வேலுார் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த உத்தரவை மறுஆய்வு செய்யும் விதமாக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார். பொன்முடி தரப்பில் கோரியதை தொடர்ந்து, விசாரணையை, மார்ச் 12 முதல் 15 வரை நடத்துவதாக, நீதிபதி அறிவித்திருந்தார். அதன்படி, இந்த வழக்கு, நேற்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு இருந்தது.இவ்வழக்கில் இறுதி விசாரணையை, ஏப்ரல் 15 முதல் 19 வரை மேற்கொள்வதாக அறிவித்த நீதிபதி,விசாரணையை தள்ளி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை