உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூட்டணிக்கு வரக் கூறி அழுத்தமா?: சீமான் சொல்வது இது தான்!

கூட்டணிக்கு வரக் கூறி அழுத்தமா?: சீமான் சொல்வது இது தான்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'நாம் தமிழர் கட்சி கூட்டணிக்கு வர வேண்டும் (எந்தக் கூட்டணி என்று அவர் குறிப்பிடவில்லை) என்பதால் தான் விவசாயி சின்னம் ஒதுக்கப்படாமல் அழுத்தம் கொடுக்கப்படுகிறது' என அக்கட்சி தலைவர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார். நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவை சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்யதா கட்சிக்கு, வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இது குறித்து சீமான் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ndw7z1iy&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தேர்தல் விதிமுறை மற்றும் தேர்தல் வரைவுப்படி பார்த்தால் கரும்பு விவசாயி சின்னம் எனக்கு தான் கிடைக்க வேண்டும். முன்னதாக தேர்தலில் போட்டியிடுவதற்கு விவசாயி ஏர் உழும் சின்னம், வண்டி சக்கரம் சின்னங்களை ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் கேட்டேன். அது மாநில கட்சிக்கு கொடுத்திருக்கிறோம் அதனால் தர முடியாது என்று சொன்னார்கள்.

கரும்பு விவசாயி சின்னம்

தற்போது பக்கத்து மாநிலத்தை சேர்ந்த புதிதாக கட்சி ஆரம்பித்தவருக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கியுள்ளார்கள். அவர் இந்த தேர்தலில் போட்டியிடுவாரா இல்லையா என்றே தெரியவில்லை. தேர்தல் தேதி அறிவித்து ஒரு வாரத்திற்கு பிறகு தான் எனக்கு சின்னம் ஒதுக்கினார்கள். நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதற்காக தான் வேறு ஒருவருக்கு சின்னத்தை ஒதுக்கியுள்ளார்கள். நாங்கள் வளர்ந்து வருவதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

7 சதவீதம்

நாம் தமிழர் கட்சி கூட்டணிக்கு வர வேண்டும் என்பதனால் தான் விவசாய சின்னம் ஒதுக்கப்படாமல் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. 7 சதவீதம் இருக்கும் வாக்கு வீதம் கூட்டணி வைத்தால் 0.7 சதவீதம் கூட கிடைக்காது. நீதிமன்றம் உறுதியாக விவசாயி சின்னத்தை எங்களுக்கு ஒதுக்க உத்தரவிடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. லோக்சபா தேர்தலில் விவசாயி சின்னத்தை பெறுவது தொடர்பாக நீதிமன்றத்தை நாடவுள்ளோம். இவ்வாறு சீமான் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

A1Suresh
பிப் 17, 2024 22:56

செபாஸ்டியர் என்ற தந்தையின் பெயரையே செந்தமிழன் என்று மாற்றிவிட்டாரே


M Selvaraaj Prabu
பிப் 17, 2024 22:41

நான் ஏற்கெனெவே எல்லா பத்திரிகைகளையும் கேட்டு கொண்டதுதான். தமிழை கொள்ளாதீர்கள். இங்கே "பிரஷர்" என்பதற்கு அர்த்தம் "நெருக்கடி" என்பதாகும். அழுத்தம் இல்லை அய்யா இல்லை. அழுத்தம் என்றால் ஒருவரை அல்லது ஒன்றை மற்றொருவர் அல்லது ஒருவர் கையை கொண்டோ, உடலின் மற்ற பாகங்களை கொண்டு அழு(மு)த்துவது. தயவு செய்து எல்லா பத்திரிகைகளும் இனிமேல் அழுத்தம் என்று கூறாமல் நெருக்கடி என்று கூறவும்.


M Selvaraaj Prabu
பிப் 19, 2024 06:07

"கொல்லாதீர்கள்" என்பது "கொள்ளாதீர்கள்" என்று பதிவானது வருத்தம் அளிக்கிறது.


Godfather_Senior
பிப் 17, 2024 20:41

இவருக்கு பெரும் நிஜமில்லே ஊரும் நிஜமில்லே அட தனது சொந்த ஜாதியை கூட மறைக்கிறவனுக்கு என்ன விவஸ்தை இருக்கப்போகிறது திமுகவுக்கு ஜால்றா தட்டியே நூற்றுக்கணக்கான கோடி சுரண்டியாச்சு . பொழுதுக்கும் மூச்சுக்கு மூச்சு பொய் பேசுவதே தொழில் . இந்த தேர்தலுடன் டெபாசிட் நஷ்டமாகி கடைய மூடப்போறவருக்கு எவ்வளவு திமிர் பேச்சு


Shankar
பிப் 17, 2024 19:51

சீமானுக்கு பொய்ச்சொல்ல யாராவது கற்றுக்கொடுக்கணுமா என்ன?


AL.NACHI
பிப் 17, 2024 17:51

வாய்க்கு வந்ததெல்லாம் பேசுனா இப்படிதான் நடக்கும் ...இந்த தேர்தலோடு கட்சி காலி...


கடல் நண்டு
பிப் 17, 2024 17:44

சவுண்ட் சைமன் அவர்களின் இலங்கை தமிழர்கள் வியாபாரம் சீக்கிரம் காலி... சீக்கிரம் தி மு க விலோ / திமுக பி டீம் ( அதிமுக) அல்லது திமுக சி டீம் ( சோசப் விசை) இடம் போயி ஐக்கியமானால் நல்ல சாப்பாடு கிடைப்பதில் பிரச்னை இருக்காது .. அதை விட்டு விட்டு என்ன முக்கினாலும் ஒன்னும் நடக்காது ..


வீரபாண்டி,அலங்காநல்லூர்
பிப் 17, 2024 17:33

சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு உண்டியல் சின்னம் ஒதுக்கி அவமானப்படுத்திய தேர்தல் ஆணையம். நாதக சீமானும் அவரின் தும்பிகளும் உண்டியல் ஏந்தி திறள்நிதி வசூலிக்கும் கும்பல் என்று தேர்தல் ஆணையம் வரைக்கும் தெரிஞ்சிருச்சு போல!????


naranam
பிப் 17, 2024 17:23

இவருக்குகெல்லாம் ஒரு கூட்டம் அதற்கு ஒரு கூட்டணி வேறு..அப்பால போப்பா!


K.Ramakrishnan
பிப் 17, 2024 17:05

அடிக்­கடி புதுகார் வாங்­கு­வ­தற்கு உங்­க­­ளுக்கு தம்­பி­மார்கள் இருக்­கி­றார்கள். உங்கள் கட்சி துரைமு­ருகன் சர்­வ­தேச அளவில் நிதி திரட்­டு­கிற வல்­லமை படைத்­­த­வ­ராக இருக்­கிறார். ஒரு சினிமா டைரக்­ட­­ரா­க இருந்து முடி­யா­ததை எல்லாம் அர­சியல் கட்சி துவங்கி சாதிக்­கி­றீர்கள் என்றால் இது வளர்ச்சி தானே....


Kundalakesi
பிப் 17, 2024 17:03

Democracy is crushed in all ways.


சரவணன்,விளாத்திகுளம்
பிப் 17, 2024 17:39

தும்பிகளிடம் சூதானமா இருந்துக்க குண்டலகேசி, உண்டியல குடுத்து திரள்நிதி வசூலிக்க விட்ருவானுக!????


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை