உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  மத்திய அரசை கண்டித்து 26ல் ஆர்ப்பாட்டம்

 மத்திய அரசை கண்டித்து 26ல் ஆர்ப்பாட்டம்

சென்னை: நம் நாட்டில், 29 தொழிலாளர் சட்டங்களை, நான்கு சட்ட தொகுப்புகளாக மாற்றி அமல்படுத்திய மத்திய அரசை கண்டித்து, 13 தொழிற்சங்கங்கள் சார்பில், வரும் 26ல் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. இது குறித்து, தொ.மு.ச., தலைவர் நடராஜன், ஏ.ஐ.டி.யு.சி., மாநில பொதுச்செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூறியதாவது: நுாறாண்டு கால போராட்டத்தின் விளைவாக உருவாக்கப்பட்ட, 29 தொழிலாளர் சட்டங்கள், நான்கு சட்டத் தொகுப்புகள் என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளன. தொழிலுறவு சட்டத்தொகுப்பு, சம்பள தொகுப்பு, தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் சட்ட தொகுப்பு, சமூக பாதுகாப்பு தொகுப்பு என, மத்திய அரசு மாற்றி, நேற்று முன்தினம் முதல் நடைமுறைப்படுத்த அறிக்கை வெளியிட்டுள்ளது. இதை கண்டித்தும், இந்த சட்ட தொகுப்புகளை வாபஸ் பெறக் கோரியும், வரும் 26ம் தேதி, எல்.பி.எப்., - ஏ.ஐ.டி.யு.சி., - சி.ஐ.டி.யு., - ஐ.என்.டி.யு.சி., உட்பட 13 மத்திய தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ