உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழ்நாடே ஸ்தம்பிக்கும் வகையில் போராட்டம்: ராமதாஸ் எச்சரிக்கை

தமிழ்நாடே ஸ்தம்பிக்கும் வகையில் போராட்டம்: ராமதாஸ் எச்சரிக்கை

திண்டிவனம்: 'இடஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடே ஸ்தம்பிக்கும் வகையில், ஏற்கனவே 7 நாட்கள் நடத்திய சாலை மறியலை விட, கடுமையான போராட்டத்தை நடத்தினால்தான் இந்த அரசு பணியும் என நினைக்கின்றேன்' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார்.வன்னியர் சங்கத்தின் 45ம் ஆண்டு விழாவையொட்டி, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில், வன்னியர் சங்க கொடியை ஏற்றிய பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=397vxw21&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி, தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. வன்னியர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீடு கொடுக்க வேண்டும். பட்டியல் இன மக்களுக்கு 22 சதவீத இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும். வன்னியர் சங்கம் துவங்கிய போதே இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இடஒதுக்கீடு கிடைப்பதற்காக சாலை மறியல், ரயில் மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என தற்போதுள்ள முதல்வரை கோட்டையில் நான் நேரில் சந்தித்து முறையிட்டும், இன்று வரை நிறைவேறவில்லை.இடஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடே ஸ்தம்பிக்கும் வகையில், ஏற்கனவே 7 நாட்கள் நடத்திய சாலை மறியலை விட, கடுமையான போராட்டத்தை நடத்தினால்தான் இந்த அரசு கொடுக்கும் அல்லது பணியும் என நினைக்கின்றேன்.இவ்வாறு ராமதாஸ் கூறினார். மாநில வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி, பா.ம.க., கவுரவ தலைவர் மணி, விழுப்புரம் மாவட்ட செயலாளர் ஜெயராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Kesavan
ஜூலை 23, 2024 12:35

ஏற்கனவே போராட்டம் பண்ணி அப்படியே.. போனால் போகுதுனு விட்டு வச்சிருக்கா பாரு தூக்கி ஜெயிலில் போடாமல்


தமிழ்வேள்
ஜூலை 20, 2024 22:14

மருத்துவரே... தமிழகம் முழுவதும் வன்னியர்களுக்கு சொந்தமானது....வன்னியனைத் தவிர மற்றவன் அந்நியனே.... அப்படீன்னு அள்ளி விட வேண்டியது தானே? என்ன குறைந்து விட்டது? 20 சதம் 10.50 ஆகிவிட்டதே.. அப்புறம் என்ன? டாஸ்மாக் வியாபாரத்தில் வட மாவட்டங்களில் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் உங்கள் கட்சி ஆட்களே? குடிக்காதே என்று சொன்னால் உங்கள் கட்சியில் ஆளே இருக்கமாட்டான்... பார்த்து சூதானமா பேசுங்க அய்யா..


Premanathan Sambandam
ஜூலை 20, 2024 17:21

100 சதவீதம் கேட்டால்தான் 50 சதவீதம் கிடைக்கும். கேளுங்கள் அய்யா


Premanathan Sambandam
ஜூலை 20, 2024 17:19

தொடர் தோல்விகளால் இவர்தான் ஸ்தம்பித்து பித்து பிடித்த மாதிரி பேசுகிறார்


Velan
ஜூலை 20, 2024 16:58

தமிழ்நாடு ஒன்னும் ஸ்தம்பிக்காது தமிழகம் என்ன உங்க குடும்ப சொத்தா


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை