உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராமருக்கு வரலாறே கிடையாது: அமைச்சர் கண்டுபிடிப்பு?

ராமருக்கு வரலாறே கிடையாது: அமைச்சர் கண்டுபிடிப்பு?

அரியலூர்: ‛‛ராமருக்கு 3 ஆயிரம் ஆண்டு வரலாறு இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் ராமருக்கு வரலாறே கிடையாது'' என தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கண்டுபிடித்துள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vcvblnuz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சில நாட்களுக்கு முன்னர் புதுக்கோட்டை கம்பன் கழகம் சார்பில் நடந்த கம்பன் திருவிழா நிறைவு விழாவில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், ‛‛ திராவிட மாடல் ஆட்சிக்கு முன்னோடி ராமர் ஆட்சி தான் என்று கூறியதோடு, ஈ.வெ.ராமசாமி, அண்ணாதுரை, கருணாநிதி, ஸ்டாலினுக்கு முன்னோடியாக ராமரை நாங்கள் பார்க்கிறோம்'', என்று கூறிச் சென்றார். இந்தப் பேச்சு அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில். ரகுபதியின் பேச்சுக்கு மாறாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வாயை திறந்துள்ளார்.அரியலூரில், ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடும் நிகழ்ச்சியில் சிவசங்கர் பேசியதாவது: ராமருக்கு 3 ஆயிரம் ஆண்டு வரலாறு இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் ராமருக்கு வரலாறே கிடையாது. ராஜேந்திர சோழன் ஆட்சி செய்ததற்கான கோயில்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆதாரமாக உள்ளன. ராஜேந்திர சோழனை கொண்டாடாவிட்டால் வரலாறு இல்லாதவர்களை நம் தலையில் கட்டிவிடுவார்கள். இவ்வாறு அவர் பேசினார். இந்தப் பேச்சு தி.மு.க., அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 82 )

Ramaswamy Jayaraman
ஆக 23, 2024 14:02

வரலாறு இருக்கும் இவருக்கு கோவில் கட்டி கும்பிடலாம்.


S.V.Srinivasan
ஆக 17, 2024 12:55

ராஜேந்திர சோழன் வரலாறெல்லாம் அறவே தெரியாத இவருகிட்ட வேறென்ன எதிர்பார்க்க முடியும். திருப்தி படுத்துருதா நினைச்சுக்கிட்டு ராமரை வம்புக்குஇழுக்குது. பரிதாப படலாம் வேறென்ன சொல்றது. மொத்தத்தில் இந்த மாதிரி ஆளெல்லாம் மந்திரி ஆகியிருப்பது தமிழகத்தின் தலையெழுத்து.


kannan
ஆக 14, 2024 12:18

புராணத்திற்க்கும் வரலாற்றுக்கும் வித்தியாசம் தெரியாத மடையர்களை என்னவென்று சொல்வது? புராணக்கதைகள் உக்கருத்து புரிந்து நல்ல நெறிகளுன் வாழ ஏற்படுத்தப்பட்ட புணைவுக் கதைகள். அதில் ஆதாரம் இருக்கிறது என்று நம்புவோர் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளும் கோமாளிகள்.


RAMKUMAR
ஆக 12, 2024 13:56

தலைவா நீங்க சொல்றதுதான் கரெக்ட். வாழும் ராமர் நம்ம உதயநிதி தான். இவிங்க கடக்கிறாங்க


veeramani
ஆக 10, 2024 08:38

மதிப்பிற்குரிய சிவசங்கர் பேச்சு அவரது அறியாமையை காட்டுகிறது அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு டாக்குமெண்ட் , அதற்கு ம்முன்னர் ராமர் பயணம் செய்த வழித்தடங்கள்.. தமிழ்நாட்டில் எடுத்துக்கொண்டால் திருச்சி முதல் ராமேஸ்வரம் வரை தற்போது உள்ள சாலைகள், கரைக்குடி அருகே உள்ள கண்டதேவிஅனுமன் இந்தியாவில் சீதை கண்டு கால்பதித்த இடம், ராமர்செது பாலம், திருப்புல்லாணி கோயிலில் உள்ள ராமர் விக்ரகம், காரைக்குடி வரைவன்பட்டியில் அனுமனை பூஜிக்கும் ராமர் , பின்னர் தேவிபட்டினத்தில் நவகிரகம் கற்கள், ராமர் வணங்கிய உப்பூர் விநாயகர் , ராமர் ஒய்வு எடுத்த ராமநாதபுரம், ...இப்படி அடிக்கிக்கொண்டு செல்லலாம். தயவுசெய்து ராமரை பற்றி எவரும் ஹரக்குறைவாக பேசவேண்டாமே ??


நிக்கோல்தாம்சன்
ஆக 07, 2024 18:56

அப்போ இயேசு , முகம்மது நபி போன்றவர்களின் கல்வெட்டு தமிழகத்தில் நிறைய இடத்தில் கண்டுபிடித்தாரா சிவசு?


Matt P
ஆக 22, 2024 06:16

உங்க பெயர் உண்மையிலேயே நிக்கோல் தாம்ப்ஸன் தானா?


s sambath kumar
ஆக 07, 2024 14:04

அடியாட்களை அமைச்சர் ஆக்கினால், அவருக்கு ராமரை பற்றி என்ன தெரியும்? தமிழகத்தை பிடித்த சனியன்கள், எப்போது ஒழியும் என்று காத்திருக்கிறோம். அதுவரை ஓலமிடுவதை சகித்துக்கொள்வதை தவிர வேறு வழியில்லை.


R.P.Anand
ஆக 06, 2024 18:17

ஓசி பிரியாணி வேலை செய்யுது


Narayanan
ஆக 06, 2024 12:53

இந்த அமைச்சருக்கு வரலாறு இருக்கிறதா ? மூடர்கள் ஆட்சியில் எதுவும் பேசுவார்கள்


R SRINIVASAN
ஆக 05, 2024 09:41

காசியில் வாழ்ந்த முஸ்லீம் மஹான் கபீர் தாசர் ராமரை பக்தியோடு வணங்கினர். ராமா நாமத்தை சொல்லியே நிறைய அற்புதங்களை நிகழ்த்தினார்


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ