உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரம்ஜான் சிந்தனைகள்-5 நலமுடன் வாழ...

ரம்ஜான் சிந்தனைகள்-5 நலமுடன் வாழ...

* உலகம் ஒரு பாலம். அதைக் கடந்து செல்ல முயற்சி செய்யுங்கள். அந்த பாலத்திலேயே கட்டடம் கட்டி தங்க வேண்டும் என நினைக்காதீர்கள். * பேராசை பாவங்களின் வேராகும். அதிகம் ஆசைப்பட்டால் அது உன் வாழ்வை தலைகீழாக்கும். * சேர்ந்து வாழுங்கள். பிரிந்து செல்லாதீர்கள். * சுவனம் செல்ல விரும்புபவர்கள் ஒற்றுமையைக் கடைபிடியுங்கள்.* மற்றவருக்காக விட்டுக் கொடுப்பவர்கள், பிறரின் குற்றம், குறைகளை பொறுப்பவர்கள் இறைவனின் கருணையை பெறுவர். * பொது இடம், நடைபாதை, மரத்தடிகளை அசுத்தம் செய்யாதீர்கள். * கடன் கொடுத்து ஒருவருக்கு உதவி செய்வது தர்மம். * எவர் கடனை ஒழுங்காகத் திருப்பித் தருகிறாரோ அவரே உங்களில் மேலானவர்.* அன்பை பரிமாறுங்கள். பொறாமை மறையும்.* தீயவர்களுடன் நட்பு கொள்ளாதீர்கள், மீறினால் அவர்களது பாவங்களும் உங்களின் கணக்கில் சேரும். * ஒருவனை பற்றி விசாரிக்கும் போது, முதலில் அவனது நண்பனை அறிந்து கொள்ளுங்கள்.இன்று நோன்பு துறக்கும் நேரம்: மாலை 6:35 மணிநாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:55 மணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை