உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ராமதாஸ் ஓராண்டாக வேதனையில் உள்ளார்

 ராமதாஸ் ஓராண்டாக வேதனையில் உள்ளார்

அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் இணைவது குறித்து, இதுவரை தகவல் எதுவும் இல்லை. ஆனால், பா.ஜ., தமிழக மேலிட பொறுப்பாளர் பியுஷ் கோயல் மற்றும் அ.தி.மு.க., பொதுச்செயலர் ஆகியோர் சந்தித்துள்ளனர். அப்போது கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்ததாக தகவல் பரவி உள்ளது. ஆனால், எங்களுக்கு எந்த அழைப்பும் வரவில்லை. யூகத்தின் அடிப்படையில் சொல்ல விருப்பமில்லை. ஆனால், கூட்டணி தொடர்பாக எந்த பேச்சும் நடக்கவில்லை. பா.ம.க., என்றால் ராமதாஸ் தான். தற்போது கட்சிக்குள் ஏற்பட்டுள்ள அப்பா - மகன் பிரச்னையில், ராமதாஸ் ஓராண்டாக வேதனையில் உள்ளார். இது தொடர்பாக, டில்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வந்துள்ளது. யார் வேண்டுமானாலும், பா.ம.க., என கூறிக் கொள்ளலாம். ஆனால், தமிழக மக்கள், ராமதாஸ் சொல்லும் பா.ம.க.,வுக்குத்தான், ஓட்டு போடுவர். --ஜி.கே.மணி, கவுரவ தலைவர், பா.ம.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை