உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்க காரணம்: அமைச்சர் விளக்கம்

மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்க காரணம்: அமைச்சர் விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''சாலைகள் கட்டுமானம் மற்றும் பராமரிப்பை மேம்படுத்தவே, தமிழக மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் அமைக்கப்படுகிறது,'' என, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை போல, தமிழக மாநில நெடுஞ்சாலைகள் ஆணையத்தை உருவாக்கும் மசோதா மீது, சட்டசபையில் நேற்று நடந்த விவாதம்:பா.ம.க., - ஜி.கே.மணி: தமிழக நெடுஞ்சாலை ஆணையத்தால் அமைக்கப்படும் சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்படுமா; அவ்வாறு அமைத்தால், எவ்வளவு கி.மீ., அவை அமைக்கப்படும்?அமைச்சர் வேலு: சாலைகள் கட்டுமானம் மற்றும் பராமரிப்பை மேம்படுத்துவதற்காக, தமிழக மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கப்படுகிறது. மத்திய அரசு, ஏழு மீட்டர், 10 மீட்டர், ஒன்றரை மீட்டர் என, சாலைகளை விரிவாக்கம் செய்து, சுங்க கட்டணம் வசூலித்து வருகிறது. தமிழகத்தில் வாகனங்கள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதை பார்க்கும்போது, 10 ஆண்டுக்கான பட்ஜெட் நிதியை ஒதுக்கினால் கூட, தேவைகள் அதிகமாக இருக்கின்றன. மாநில அரசால் ஈடுகொடுக்க முடியவில்லை. எனவே தான், தமிழக மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.இதற்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரியையும், துறையில் உள்ள மூத்த பொறியாளர்களையும் அலுவலர்களாக நியமிக்க உள்ளோம். மாநில அரசின் நிதியை, இந்த திட்டத்திற்கு பயன்படுத்த இருக்கிறோம். உலக வங்கி, ஜப்பான் வங்கிகளில் இருந்து நிதி பெறுவது தாமதமாகிறது. இந்த ஆணையத்தால் பணிகள் தனியாக நடக்கும். மக்கள் தேவை அறிந்து திட்டங்கள் நிறைவேற்றப்படும். சுங்கச்சாவடி அமைப்பது குறித்து, இப்போது உறுதி செய்ய முடியாது.நிதித்துறை வாயிலாக சட்ட திட்டங்களை உருவாக்கி, அதன்பின்னர், 60 கி.மீட்டருக்குள் சுங்கச்சாவடி வருமா; 50 கி.மீ.,க்குள் சுங்கச்சாவடி வருமா என்பது முடிவு செய்யப்படும்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.இதையடுத்து, இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

C.SRIRAM
பிப் 23, 2024 21:57

நிறைய ஆட்டைய போடலாம் என்பது மட்டுமே உண்மையான காரணம்


duruvasar
பிப் 23, 2024 15:35

ஆட் டய்ய போட்ட நிலங்களுக்கெல்லாம் ஒரு அங்கீகாரம் கெடைச்சிடுமல்ல அதுக்குதான். மற்றபடி தேசிய நெடுசாலை போடுகிற சாலைகளில் நாங்க ஸ்டிக்கர் ஓட்டிடுவோமில்ல. எப்படி நம்ம ராஜதந்திரம் கோபால்


R.MURALIKRISHNAN
பிப் 23, 2024 14:17

மக்களிடமிருந்து வசூல் என்ற கொள்கையை தவிர மக்களுக்கு ஏதாவது நல்ல திட்டங்கள் திமுக ஆட்சியில் வருமா? வராதா? டக்குனு சொல்லுங்க அமைச்சரே


sankar
பிப் 23, 2024 13:07

இவரை பொறுத்தவரை - இந்திய என்கிற ஒன்று கிடையாது - இந்தியா என்றால் வடக்கே உள்ள ஒரு ஊர் - சிறப்பான அமைச்சர் - சாத்திரங்கள்(கோர்ட்டுகள்) வேடிக்கை பார்க்கின்றன


venugopal s
பிப் 23, 2024 11:32

தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைகளின் தரத்தை விட மாநில நெடுஞ்சாலைகளின் தரம் நன்றாக உள்ளது!


ராஜா
பிப் 23, 2024 08:16

பேசாமல் சாலை வரி வாங்குவதை நிறுத்திவிட்டு வெறும் சுங்க கட்டணம் மட்டுமே வசூலித்து விடலாமே!? மாநில நெடுஞ்சாலைகள் இருப்பது மிக சொற்பமான தூரம் தான். அதற்கு இதுவரை ஒதுக்கிய நிதியை செலவு செய்திருந்தால் கூட ஜப்பான் அளவு தரத்துடன் இருந்திருக்கும். காசு எல்லாம் எங்கே போகுதோ தெரியவில்லை!


Raj
பிப் 23, 2024 07:56

காரணம் என்ன சொந்தக்காரன்களுக்கு வேலை போட்டு கொடுப்பதற்கு தான்...


Ramesh Sargam
பிப் 23, 2024 07:04

மொதல்ல இவர் வழுக்கு தலைல ஒரு தார் ரோடு போடணும்...


J.V. Iyer
பிப் 23, 2024 06:47

என்ன காரணம்? கலெக்சன், கமிஷன் தான். வேறு என்ன ஒரு சாலை சென்னையில் ஒழுங்காக கிடையாது. இதில் வசூல் வேறு. இந்த வசூல் ராஜாக்களை என்ன செய்வது மக்களே?


K.L.ESWARAN
பிப் 23, 2024 06:40

அரசியல்வாதிகளுக்கு சுங்கக் கட்டணத்தில் இருந்து விலக்கு என்ற சரத்தும் நீக்கப்பட வேண்டும். முன்னாள் அரசியல்வாதிகளும், தொண்டர்களும் சுங்கக் கட்டணத்தைக் கட்டாயம் கட்ட வேண்டும். சாதாரண மக்கள்தான் சுங்கக் கட்டணம் கட்டாயமாக கட்டி அவதிப்படுபவர்கள்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை