உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மனைகளுக்கான சாலை அகலம் கட்டுப்பாடுகள் தளர்வு

மனைகளுக்கான சாலை அகலம் கட்டுப்பாடுகள் தளர்வு

சென்னை:பொது கட்டட விதிகளில், மனைப்பிரிவுகளுக்கான சாலை அகல கட்டுப்பாடுகளை தளர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மனைப்பிரிவு திட்டங்களை செயல்படுத்த, பொது கட்டட விதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி, மனைப்பிரிவுகளுக்கு குறைந்தபட்ச சாலை அகலம், 22 அடியாக இருக்க வேண்டும். அங்கீகாரமின்றி உருவாக்கப்பட்டு, தற்போது வரன்முறை செய்யப்பட்ட மனைப்பிரிவுகளில் இந்த அளவுக்கு சாலை அகலம் இருக்காது. இதனால், வரன்முறை செய்யப்பட்டும் இந்த மனைகளில் வீடு கட்ட அனுமதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதை கருத்தில் வைத்து, சாலை அகல விதிகளில் தளர்வு வேண்டும் என, கட்டுமான நிறுவனங்கள் வலியுறுத்தின. இதற்கு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி, சமீபத்தில் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து சாலை அகல கட்டுப்பாடு தளர்வுக்கான அரசாணை வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர் காகர்லா உஷா பிறப்பித்துள்ளார்.அதில், மாநகராட்சிகள், நகராட்சிகளில் மனைப்பிரிவுகளுக்கான குறைந்தபட்ச சாலை அகலம், 21 அடியாகவும், நகர்ப்புற தன்மையுள்ள ஊராட்சிகளில், இது, 19 அடியாகவும் கணக்கிடப்படும். பொது கட்டட விதிகளில் இதற்கான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ