உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விருதுநகரில் ரிமோட் விமான சாகசம்

விருதுநகரில் ரிமோட் விமான சாகசம்

விருதுநகர் : வானில் டைவ் அடிப்பது உள்ளிட்ட விமான சாகசம் நிகழ்ச்சிகள், என்.சி.சி .,சார்பில் விருதுநகரில் மாணவர்களுக்காக செய்து காண்பிக்கப்பட்டன. விருதுநகர் கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு விழாவில் , விமான குறித்த செயல் விளக்கம் நடந்தது. இதற்கு திருச்சி என்.சி.சி .ஏர் விங்ஸ் காமாண்டிங் ஆபீசர் என். தினகரன் செயல்விளக்கம் அளித்தார்.கம்பிகளால் இயக்கக்கூடிய 4 சி.சி. இன்ஜின் திறன் கொண்ட, மெத்தனாலால் இயங்கக் கூடிய 'கண்ட்ரோல் லைன் ஏரோபேட்ரிக்ஸ்' விமானத்தை , 300 அடி உயரத்தில் 5 நிமிடம் பறக்க செய்தார். இதை தொடர்ந்து, 4 சி.சி. திறன் கொண்ட ரிமோட் கண்ட்ரோல் 'கிளைடர்' விமானமும் பறக்கவிடப்பட்டது.இது மேலே சென்ற ஒரு நிமிடத்தில் இன்ஜின் செயல்இழக்க , காற்றின் திசைக்கேற்ப 3 நிமிடம் பறந்தது. 7 சி.சி. திறன் கொண்ட ரிமோட் கண்ட்ரோல் பவர் விமானம் மூலம் டைவ் அடிப்பது, திரும்புவது உள்ளிட்ட சாகசங்களும் செய்து காண்பிக்கப்பட்டன. இது வானத்தில் 12 நிமிடம் பறந்தப்படி சாகசம் செய்தது. தலைமையாசிரியர் சந்திரமோகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

என். தினகரன் கூறியதாவது: என்.சி.சி., ஏர் விங்ஸ்சில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு விமான செயல் விளக்க பயிற்சியை வழங்குறோம். விமானம் இயங்குவதை யாரும் நேரில் பார்க்க முடியாது. இதை மாணவர்கள் பார்க்கும் போது, விமான படையில் சேருவதற்கு இது ஒரு உந்துதலாக இருக்கும்,என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி