உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எட்டு ஆண்டுகளில் ரூ.80 லட்சம் செலவு; ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இல்லை தீர்வு

எட்டு ஆண்டுகளில் ரூ.80 லட்சம் செலவு; ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இல்லை தீர்வு

கோவை.: கடந்த எட்டு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வை, திருத்தம் செய்ய சட்டப் போராட்டத்துக்காக, ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள், தங்கள் ஓய்வூதியத்தில் இருந்து, ரூ.80 லட்சம் வரை செலவழித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில், 2018ம் ஆண்டு முதல் ஓய்வு பெற்றவர்கள் அகவிலைப்படியை திருத்தக் கோரி, மிகப்பெரிய சட்டப்போராட்டத்தை நடத்தி வருகின்றனர். தமிழக அரசு தொடர்ந்த பல வழக்குகளை, உச்ச மற்றும் உயர் நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்துள்ளன. அதன் பின்னரும் அரசு தொடர்ந்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படியை திருத்தம் செய்யக்கூடாது என்ற நோக்கில், மனுக்களை தாக்கல் செய்து வருகிறது. இது ஓய்வூதியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற ஊழியர் ஒருவர் கூறியதாவது:

ஓய்வூதியதாரர்களுக்கு, 54 சதவீதம் வரை அகவிலைப்படி வழங்க வேண்டும். ஆனால், 2016 முதல் அரசு, 5 சதவீதம் மட்டுமே வழங்கி வருகின்றனர். 7வது ஊதியக்குழு அமல்படுத்துவதற்கு முன், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு, 239 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும். ஆனால் அது, 119 சதவீதமாக மட்டுமே உள்ளது.

நீண்ட சட்ட போராட்டம்

மாற்றங்கள் இல்லாததால், 2018ல், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், ரிட் மனு தாக்கல் செய்தோம். நீதிமன்றம், 2019ல் எங்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. குறிப்பிட்ட கால இடைவெளியில், திருத்தம் செய்யப்பட்ட அகவிலைப்படியை விடுவிக்க, டி.என்.எஸ்.டி.சி.,ன் ஓய்வூதிய அறக்கட்டளைக்கு உத்தரவிட்டது.இதை நிறைவேற்றாததால், பிப்., 2019ல் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதிலும் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இந்நிலையில், அரசு அக்., 2019ல் அரசு இயற்றிய அரசாணை, 142 ல் அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும், ஐந்து சவீத அகவிலைப்படியை முடக்கியது. இதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. எங்களுக்கு சாதகமாக, 2023ல் தீர்ப்பு கிடைத்தது. இதை நிறைவேற்றாததால், ஏப்., 2023ல் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்தோம். அதிலும் எங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைத்தது.

பல ஓய்வூதியர்கள் உயிரிழப்பு

இதை எதிர்த்து ஓய்வூதிய அறக்கட்டளை, 2023ல் உயர்நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்தது. இதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதன் பின், ஓய்வூதிய அறக்கட்டளை, மாநில அரசுடன் சேர்ந்து டிச., 2023, சிறப்பு விடுப்பு மனு தாக்கல் செய்தது. அவையும் நிராகரிக்கப்பட்டன. அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவும், கடந்த சனிக்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது அரசு உச்ச நீதிமன்றத்தின் இறுதித்தீர்ப்பை, மறு ஆய்வு செய்வதற்காக (கியூரேட்டிவ் பெட்டிஷன்), மனு தாக்கல் செய்துள்ளது.எங்களுக்கு எந்த பலன்களையும் தரக்கூடாது என, அரசு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. கடந்த, 2017 முதல் தமிழகத்தில், 95 ஆயிரம் ஓய்வூதியர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட் டனர். அவர்களின் குடும்பத்தினர் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். இதுவரை எங்கள் ஓய்வூதியத்தில் இருந்து, நன்கொடை பெற்று ரூ.80 லட்சம் வரை சட்ட போராட்டங்களுக்காக செலவழித்து விட்டோம். தீர்வு காண்பதாக, தேர்தல் வாக்குறுதி கொடுத்த தி.மு.க., அரசு, அதை மறந்தே போனது.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

thangaraj angappan
ஜன 23, 2025 18:32

ஓய்வூதியம் என்பது பிச்சையல்ல.பணிக்காலத்தில் நிர்வாகம் கொடுக்க வேண்டிய சேமநலநிதியை அரசே வைத்துக்கொண்டு அதற்குண்டான வட்டி தான் பென்சனாக‌ கொடுக்கிறது.போக்குவரத்தில் மட்டும் டிரஸ்ட் ஆரம்பித்து தொழிலாளிகளின் வயிற்றில் அடிக்கிறது அரசாங்கம்.


Mohan das GANDHI
ஜன 23, 2025 16:26

கம்யூனிஸ்ட்டு காட்சிகள் தமிழ்நாட்டில் திமுக ஸ்டாலினிடம் பல கோடி ரூபாய் பேட்டி வாங்கி விட்டார்கள் திருமாவளவன் திமுக போல ? ஆகவே தொழிலாளர்கள் உரிமைகளில் கமியூனிஸ்ட்டு போராட்டம் என்ற போர்வையில் போலி நாடகம் நடித்தாலும் பின்னால் திமுகவின் கொத்தடிமைகளே கமியூனிஸ்ட்டு தமிழ்நாட்டின் சாபக்கேடுகள் திமுகவின் கூட்டணிகள்


Rajukalai
ஜன 23, 2025 14:38

தயவுசெய்து பேசுங்க போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள் தமிழக அரசே.


Venkatesan Srinivasan
ஜன 23, 2025 14:02

ஐயோ பாவம். தேர்தல் வாக்குறுதிகள் நம்பி ஏமாந்த ஜென்மங்கள். பாவத்தின் சம்பளம் மரணம் என்பது கிருத்துவ வாக்கியம். பத்தாயிரம் போக்குவரத்து ஓய்வூதியர் சரியான ஓய்வூதியம் பெறாமலேயே உயிரை விட்டனர். தகுதி இல்லாத ஏமாற்று கூட்டத்துக்கு வாக்களித்தது பாவம். அரசாங்க ஊழியர்கள் என்பது ஒரு அரசியல் சாயம் பூசிய வர்க்கம். சாயத்தின் நிறம் ஆட்சியாளர்கள் பொருத்து மாறும். தனியார் நிறுவன ஊழியர்கள் தன்னிச்சையாக முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளது. பெரும்பாலான அரசு ஊழியர்கள் அரசியல் கட்சிகளின் ஏவல் ஆட்களாக மாறிவிட்டனர். சட்டம் தன் கடமையை இழந்து உள்ளது.


KumaR
ஜன 23, 2025 11:08

எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி னு ஒருத்தரு உருட்டிட்டு இருக்காரு. இதுல நாங்க சொன்ன எல்லா வாக்குறுதியும் நிறைவேத்தியாச்சி னு பெருமை வேற.. இந்த பொல்லாப்புக்கு...


அப்பாவி
ஜன 23, 2025 09:10

பணியில் இருக்கும் போதே சம்பாரிச்சுக்கணும். அதுதான் திராவிட மாடல்.


ராமகிருஷ்ணன்
ஜன 23, 2025 07:30

திமுக அரசுக்கு ஒரு நல்ல ஐடியா. பேசாம ஓய்வூதியம் பெறும் அரசு ஊழியர்கள் அனைவரையும் டிஸ்மிஸ் செய்து அவர்களை அரசு ஊழியர்கள் கிடையாது என்று அறிவித்து விடுங்கள். அரசுக்கு ஏகப்பட்ட பணம் மிச்சமாகும்.


Kasimani Baskaran
ஜன 23, 2025 07:29

ஊழல் பசியில் பத்தாண்டுகளாக நோஞ்சானாக இருந்த தீம்க்கா ஊழல் செய்யாமல் பொது மக்களுக்கு நன்மை செய்யும் என்று ஓட்டுப் போட்டது ஒய்வு பெற்ற ஊழியர்களின் தவறு.


ராமகிருஷ்ணன்
ஜன 23, 2025 07:26

புளுகினி ராசாவின் தேர்தல் வாக்குறுதிகளை நம்பிய உங்களுக்கு எந்த ஜென்மத்திலும் பழைய ஓய்வூதியம் கிடைக்காது திமுகவின் 550 டூபாகூர் வாக்குறுதிகள் ஓடும் தண்ணீரில் எழுதப்பட்ட எழுத்து போன்றது. நிக்கும் தண்ணீரில் அரை செகண்டாவது தெரியும்.


visu
ஜன 23, 2025 06:11

இது மக்கள் வரிப்பணம் இவர்கள் ஓய்வூதிய அகவிலைப்படி கிடைக்கவில்லை என்கிறார்கள் அரசு வரவுக்கேற்ப செலவு செய்யவேண்டும் ஒன்று இலவசங்களை நீக்கவேண்டும் இல்லை அரசு ஊழியர்களை குறைக்க வேண்டும்


சமீபத்திய செய்தி