உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பின் ஆர்.எஸ்.எஸ்., 2 மடங்கு உறுப்பினர் சேர்க்கை

ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பின் ஆர்.எஸ்.எஸ்., 2 மடங்கு உறுப்பினர் சேர்க்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பின், ஆன்லைனில் ஆர்.எஸ்.எஸ்.,சில் இணைபவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகி உள்ளதாக அந்த அமைப்பின் இணைப் பொதுச்செயலர் மன்மோகன் வைத்யா தெரிவித்துள்ளார்.ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின், அகில பாரத பிரதிநிதி சபா எனப்படும், தேசிய பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் துவங்கியது. இன்றுடன் நிறைவு பெறவுள்ள இந்தக் கூட்டத்தில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத், பொதுச்செயலர் தத்தாத்ரேய ஹொசபலே உட்பட நாடெங்கும் இருந்து 1,500 பேர் பங்கேற்றுள்ளனர். ஆர்.எஸ்.எஸ்., மட்டுமல்லாது, பா.ஜ., - வி.எச்.பி., - ஏ.பி.வி.பி., உள்ளிட்ட 35 சங்பரிவார் அமைப்புகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் பொதுக்குழுவில் பங்கேற்றுள்ளனர்.லோக்சபா தேர்தல் பணிகள், தேர்தல் முடிந்த பின் ஆர்.எஸ்.எஸ்., பயிற்சி முகாம்களை நடத்துவது, வரும் ஆண்டு முழுவதற்குமான ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழா செயல் திட்டங்கள், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பணிகளை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் விரிவுபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகின்றன.பொதுக்குழு கூட்டத்தையொட்டி, ஆர்.எஸ்.எஸ்., இணைப் பொதுச்செயலர் மன்மோகன் வைத்யா அளித்த பேட்டி:ஆர்.எஸ்.எஸ்.,ஸின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக, கடந்த ஆண்டு ஒரு லட்சம் பேர் உறுப்பினராக இணைந்துள்ளனர். அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்குப் பின், உறுப்பினராக இணைந்தவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது.நிர்வாக வசதிக்காக ஆர்.எஸ்.எஸ்.,சில், 45 மாநிலங்கள் உள்ளன. மார்ச் 1ம் தேதி நிலவரப்படி தினசரி கூடுதலான ஷாகாக்களின் எண்ணிக்கை 73,117 ஆக உள்ளது. இதுதவிர 27,717 வாரக் கூடுதல்கள், 10,567 மாதக் கூடுதல்கள் நடந்து வருகின்றன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஷாகாக்களின் எண்ணிக்கை 4,466 அதிகரித்துள்ளது. ஷாகாக்களுக்கு வருபவர்களில் 60 சதவீதத்தினர் மாணவர்கள். மீதமுள்ளவர்களில் தொழிலாளர்கள் அதிகமாக வருகின்றனர். 89 சதவீதத்தினர் 40 வயதுக்கு கீழ் உள்ளவர்கள்.ஆர்.எஸ்.எஸ்.,ஸின் மகளிர் அமைப்பான ராஷ்ட்ர சேவிகா சமிதி நாடெங்கும், 460 இடங்களில் நடத்திய மகளிர் மாநாடுகளில் 5 லட்சத்து 61 ஆயிரம் பெண்கள் பங்கேற்றனர்.அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக 19.38 கோடி குடும்பங்களுக்கு அழைப்பிதழ் நேரடியாக கொடுக்கப்பட்டது. கும்பாபிஷேகம் நடந்த ஜனவரி 22ல் நாடு முழுவதும் 5 லட்சத்து 60 ஆயிரம் இடங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் நாடு முழுதும் 27.81 கோடி பேர் பங்கேற்றனர். 9.85 லட்சம் கோவில்களில் நிகழ்ச்சிகள் நடந்தன.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Jay
மார் 17, 2024 15:27

ஆர்எஸ்எஸில் சேர உழைக்க வேண்டும், இறங்கி வேலை செய்ய வேண்டும்.


Mariadoss E
மார் 17, 2024 12:04

நாட்டுக்கு ரொம்ப முக்கியம். RSS படைக்கு நாட்டு மேல் அவ்வளவு அக்கறை என்றால் இராணுவ பயிற்சி கொடுத்து பாகிஸ்தான் மட்டும் சீன பார்டருக்கு அனுப்புங்கள். உயிர் தியாகம் செய்து நாட்டுப் பற்றை நிருபிக்கட்டும்....


suresh
மார் 17, 2024 12:40

ஏன் அதை நீங்கள் நிரூபிக்கலாமே ? எவ்வளவு நாள் தான் அடுத்தவன் உழைப்பில் உட்கார்ந்து அனுபவிப்பீர்கள் ?


Oviya Vijay
மார் 17, 2024 13:42

சபாஷ்... சரியான கேள்வி...


suresh
மார் 17, 2024 15:15

திராவிடமும் , CON கிரேஸ் கூட்டணி போல


Oviya Vijay
மார் 17, 2024 17:55

சபாஷ்... சரியான கேள்வி..... அவர்கள் கலகம் செய்வதற்க்கென்றே பிறந்தவர்கள்... சுய சிந்தனை அற்றவர்கள்...


sankar
மார் 19, 2024 16:07

அடுத்தவர் உழைப்பில் உண்பவர் அல்ல


Indian
மார் 17, 2024 11:28

இதுவரை நூறு கோடி பேர் உறுப்பினர்களாக சேர்ந்து உள்ளதாக கேள்வி


suresh
மார் 17, 2024 12:41

அந்த பதிநெட்டு கோடி பேர் என்ன பாகிஸ்தான் குடிமக்களா ?


venugopal s
மார் 17, 2024 08:46

நாட்டில் பைத்தியக்காரர்கள் அதிகமாகி விட்டனர்!


suresh
மார் 17, 2024 10:26

"திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் " என்ற எம்ஜியாரின் பாடல் வரிகள் ஞாபகத்திற்கு வருகிறது


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 17, 2024 11:10

சரியாகச்சொன்னீர்கள் ..... உங்கள் முதல் கருத்தைப் படித்தபொழுதே அப்படித்தான் நானும் நினைத்தேன் ....


VENKATASUBRAMANIAN
மார் 17, 2024 08:37

தமிழகம் கேரளாவில் நிறைய ஆரம்பிக்க வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு தெரியும்


Oviya Vijay
மார் 17, 2024 08:18

சங்கிமங்கிகளின் கூட்டம் இது... இந்தியாவில் அமைதியைக் கெடுக்கும் பிரதான கூட்டம் இது...


suresh
மார் 17, 2024 10:29

குண்டு வைக்கும் தீவிரவாதிகளுக்கும், போதை பொருள் விற்று மக்களை அழித்தொழிக்கும் கும்பலுக்கும் ஆதரவாளர்களுக்கு சங்கத்தை பற்றி என்ன தெரியும்? யானை தடவிய குருட்டு மூடர்கள் இவர்கள்


Barakat Ali
மார் 17, 2024 08:14

பாராட்டுக்கள் .....


Kasimani Baskaran
மார் 17, 2024 07:23

கிராமம் தோறும் ஆர் எஸ் எஸ் அமைப்புக்கள் உருவாக்கப்பட்டு இந்தியாவையே மறு சீரமைக்க வேண்டும்.


Ramesh Sargam
மார் 17, 2024 07:19

எல்லோரும் பாஜகவுக்கு வோட்டு போட்டால், மோடி மீண்டும் பிரதமர் ஆவார் என்பதில் ஒருதுளி சந்தேகமும் இல்லை.


Svs Yaadum oore
மார் 17, 2024 07:10

வளர்ச்சிக்கு ரொம்பவும் சிரமம் தேவையில்லை ....மதம் மாற்றிகள் மற்றும் விடியல் திராவிடனுங்க உள்ளவரை தமிழ் நாட்டில் மிக வேகமாக வளரும் ....


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி