உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சீமான் தலை இருக்காது: வலைதளத்தில் மிரட்டல்

சீமான் தலை இருக்காது: வலைதளத்தில் மிரட்டல்

சென்னை : நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்து, 'இன்ஸ்டாகிராம்' சமூகவலைதளத்தில் பதிவிட்டவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நேற்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்தி அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 28ம் தேதி, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர், அவரது இன்ஸ்டாகிராமில் ஒன்றை பதிவு செய்துள்ளார்.அதில் நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தலை விரைவில் துண்டாக்கப்படும்; அவரது பதவிக்கு போட்டி ஏற்படும். அனைத்து கட்சி தலைவர்களும் இரங்கல் செய்தி தெரிவிப்பார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.நா.த.க., துவங்கிய நாள் முதல் இன்று வரை தெலுங்கு மக்கள் குறித்தோ, மற்ற எந்த தேசிய இன மக்கள் குறித்தோ இழிவாகவோ, அவதுாறாகவோ பேசியது கிடையாது.தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பதிவிட்ட சந்தோஷ் என்பவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரிக்கின்றனர்.

கைது

இது தொடர்பாக விசாரணை நடத்திய தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஜக்கம்பட்டியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரை, தேனி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Venkatesh
மே 01, 2025 22:27

சீமோனுக்கு தலையே இல்லையே...


Venkatesh
மே 01, 2025 20:29

அதையும் இதையும் பேசி சீமானும்.... அதை பெரிது படுத்தி விளம்பரம் தேடிய/கொடுத்த மீடியா க்களும் அந்த வெறி பிடித்த மூர்க்கனை பிரபல படுத்தி விட்டன..,..


தாமரை மலர்கிறது
மே 01, 2025 19:18

நானும் ரவுடிதான் என்று வடிவேலு சொல்வதை போன்று இருக்கிறது சீமானின் நாடகம்.


abdulrahim
மே 01, 2025 16:51

விளம்பர பயித்தியம்


S Satheesh Kumar
மே 01, 2025 16:21

சீமான் ஒரு தேசதுரோகி ... பாகிஸ்தான் சப்போர்ட் பன்ற ஒரு தேசத்துரோகி.


நிக்கோல்தாம்சன்
மே 01, 2025 12:57

காவல்துறை என்று ஒன்று தமிழகத்தில் இருக்கா ?


M Ramachandran
மே 01, 2025 11:28

காவல் துறை தீ மு காவினருக்கு நமுத்து போன பட்டாசு. எப்படியும் பேச்சாம் எப்படியும் நடந்து கொள்ளலாம். எது செய்தாலும் தீ மு க்க வினர் மீது நடவடிக்கையயை வேண்டுமானால் காவல் துறை கோலம் கோபால புறம் வாசலில் நின்று கொண்டிருக்க வேண்டும். தலைய அசைய்தால் மென்மையான சட்டங்கள் மூலம் பதிவு செய்யலாம். அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து அவர்கள் விரும்பும் தேவை கலை பூர்த்தி செய்து உபஜாரம் செய்து நீதி மன்றத்திற்கு அழைத்து வரும்வரை பத்திரமாக காக்க வேண்டிய கடமையுணர்வுடன் செயல் பட வேண்டும். .


RAMAKRISHNAN NATESAN
மே 01, 2025 10:50

சீமானைப் போன்ற அரசியல்வாதிகள் தேவையா ?


Kalaiselvan Periasamy
மே 01, 2025 08:57

சீமானை பேசியதில் தப்பில்லை. இவரை போன்றோரை தேச துரோக வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இவர் பின்னால் ஓடும் தமிழர்கள் அடி முட்டாள்கள் .


RAJ
மே 01, 2025 08:14

தேசதுரோகி.. .. தப்பில்லை..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை