உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவில்களை பராமரிக்க தனி வாரியம்: பிராமணர் சங்க மாநாட்டில் தீர்மானம்

கோவில்களை பராமரிக்க தனி வாரியம்: பிராமணர் சங்க மாநாட்டில் தீர்மானம்

திருச்சி : 'தமிழக கோவில்களை சிறப்பான முறையில் நிர்வகித்து பராமரிக்க, தன்னாட்சி உரிமை கொண்ட தனி வாரியம் அமைக்க வேண்டும்' என, திருச்சியில் நடந்த பிராமணர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.திருச்சி, திருவானைக்காவலில் நேற்று, தமிழ்நாடு பிராமணர் சங்க மகளிர் அணி மற்றும் இளைஞர் அணி மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் மாநில தலைவர் என்.நாராயணன் வரவேற்று அறிமுக உரையாற்றினார்.கோவில் கந்தாடை அண்ணன் சுவாமிகள் அருளாசி வழங்கினார். டாக்டர் ராதா ராமச்சந்திரன், கலா ரத்னா சிந்துஜா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். டாக்டர் விஜயசுந்தரி, நடிகை மற்றும் சமூக சிந்தனையாளர் கஸ்துாரி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.இளைஞரணி அமர்வில், மும்பை தொழிலதிபர் சேஷாத்திரி நாதன், நடிகர் மற்றும் சினிமா தயாரிப்பாளர் 'பிரமிட்' நடராஜன், தமிழ்நாடு மீனவர் பேரவை நிறுவனர் தலைவர் அன்பழகனார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.காமராஜர் மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன், மணிகண்டன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநாட்டில், சில நாட்களுக்கு முன், உடல் நலக்குறைவால் இறந்த, தே.மு.தி.க., தலைவர் விஜய்காந்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.தொடர்ந்து, வரலாறு காணாத பெரும் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட இடர்பாடுகளை சமாளிக்க நடவடிக்கை எடுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாவன:மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகையை அதிகரித்து வழங்க வேண்டும். மத்திய அரசு சட்டப்பூர்வமாக நடைமுறைப்படுத்தியுள்ள பொருளாதார அடிப்படையில் நலிந்தோருக்கான, 10 சதவீதம் இட ஒதுக்கீட்டை, தமிழக அரசு கொள்கை ரீதியாக ஏற்றுக் கொள்ளவில்லை.இந்த முடிவை மறு பரிசீலனை செய்வதோடு, 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி, முற்பட்ட சமூகங்களின் ஏழை, எளிய மற்றும் கிராமப்புற மக்களுக்கு வாய்ப்புகள் வழங்க வேண்டும்.கேரளா அரசை போல முற்பட்ட சமூகங்களை சேர்ந்த நலிந்தோருக்கு உதவும் வகையில், தமிழக அரசு தனி நல வாரியம் ஏற்படுத்த வேண்டும்.ஹிந்து சமய அறநிலையத் துறையினரால் நியமிக்கப்பட உள்ள அறங்காவலர் குழு நியமனங்களில், அந்தந்த கோவில் ஸ்தலத்தார்கள், தீர்த்தகாரர்கள் மற்றும் பிராமணர்களுக்கும் தகுந்த பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்.தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை மேலும் சிறப்பான முறையில் நிர்வகித்து பராமரிக்க உதவும் வகையில், அவற்றை தன்னாட்சி உரிமை கொண்ட தனி வாரியம் அமைத்து நிர்வகிக்க வேண்டும்.இவ்வாறு பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Seshan Thirumaliruncholai
ஜன 01, 2024 20:31

பிராமண சங்கம் மட்டும் திருக்கோயில்கள் சீரழிவுகளை தடுக்கமுடியாது. எல்லா இந்துக்களும் ஒன்றுசேர்ந்து திருக்கோயில் முகப்பில் பிட்சை எடுக்கவேண்டும். அர்ச்சகர்கள் தட்டில் வாங்குவதும் பிட்சை திருகோயில் வாசலில் உட்கார்ந்து கேட்பதும் பிட்சை ஏளனமாய் பேசியவர்கள் வாயை அடைக்கவேண்டும். உண்டியலில் செலுத்தும் பணம் தாறுமாறாய் செலவு செய்வது தடுக்க முடியும்.


Velan Iyengaar
ஜன 01, 2024 22:37

தீப தட்டில் போடுவதும் திருவோட்டில் போடுவதும் ஒன்று என்பதை நீர் உணருகிறீர்கள்வாசலில் அமர்ந்து பிச்சை பெரும் ஒரு முறை... இறைவனை காட்டி தீபத்தை முன்னிறுத்தி ஆணவத்துடன் தட்சிணை பெறுவது இன்னொரு முறை... தீபத்தை ...ஆராதனையை காட்டி பக்தர்களை ஏமாற்றுவது உயர்வான பாதையா ??இவர்கள் தன்னை உயர்த்தி காட்டிக்கொள்வது எவ்வளவு அபத்தமானது என்பது புரிகிறதா?? அதுவும்....தட்சிணை போடும் தொகையை முன்னிறுத்தி இறைவன் பெயரை சொல்லி காட்டப்படும் மரியாதையை அளவு ...எத்தகையது?? அதை glorify செய்யும் களவாணித்தனத்தை என்னவென்பது??


Velan Iyengaar
ஜன 01, 2024 22:52

உண்டியலில் செலுத்தும் பணத்துக்கு ஒரு கணக்கு இருக்கு தட்டில் போடப்படும் தட்சிணைக்கு?? சில புகழ் பெற்ற கோவில் பட்டர்கள்... மற்றும் தீட்சிதர்கள்...அவர்கள் அந்த கோவில் நெருக்கத்தை வைத்து அவர்கள் தனிப்பட்ட விதத்தில் நடத்தும் சுப காரியங்களுக்கு லட்சக்கணக்கில் பெரும் தட்சிணைகளுக்கு என்ன கணக்கு?? எடுத்துக்காட்டாக ....திருப்பதி பெருமாள் கோவில் பட்டர்கள்... ..அவர்கள் வெளியே நடத்தும் பெரும் பணக்காரக்குடும்ப சுபகாரியங்கள்..அதற்க்கு பெரும் தட்சிணை/ கூலி லட்சக்கணக்கில்.....யாகங்கள்... அதற்கான கூலி.... கூலி தானே.... அதை தட்சிணை என்று சொல்லிக்கொண்டாலும் உண்மையில் அதுவும் தினக்கூலி வகை தானே??அது வேறு ...கணக்கு...அதே போல கபாலி கோவில் மற்றும் மதுரை மீனாட்சி கோவில் தீட்சிதர்கள்...அவர்கள் வெளியே நடத்தும் சுபகாரியங்கள்...இதுக்கு எதாவது ஒரு கணக்கு இருக்கா?? ஒரு வரி இருக்கா??நேர்மை இருக்காதா?? நியாயம் இருக்கா?? அந்த பட்டர்/ தீக்ஷிதர்கள் வாழும் இடங்கள்....அதன் மதிப்பு அதே புகழ பெறாத சிறிய கோவிலில் ஆத்மார்த்தமான பூஜை புனஸ்காரங்களை ஆகம் விதிப்படி நடத்தி உண்மையாக .. நேர்மையாக வாழக்கை நடத்தும் பட்டர்கள்/ தீட்சிதர்கள்....ஏழ்மயில் உழன்று....இந்த வேறுபாட்டுக்கு சனாதனவாதிகள் என்ன சொல்வார்கள்??


g.s,rajan
ஜன 01, 2024 19:00

தமிழகத்தில் கோயில்கள் கொள்ளையர்களின் கூடாரமாக மாறிவிட்டதால் அரசாங்கம் இந்து மதக் கோயில்களின் அதிகாரங்களில் ,நம்பிக்கைகளில் ,வழிபாட்டு முறைகளில் கண்டிப்பாகத் தலையிடுவது துளியும் சரியல்ல,அவற்றில் இருந்து விலகிவிடுவது இந்து மதத்தினருக்கு மிகவும் நல்லது .


N Annamalai
ஜன 01, 2024 15:36

நல்ல யோசனை .ஆனால் நடக்காது .கோவில் சொத்துக்கள் கொள்ளை அடிக்கப்படுவதால் கொடுக்க மாட்டார்கள்


vbs manian
ஜன 01, 2024 14:25

கோவில்களில் உண்டியை எடுத்துவிடுங்கள்.கழகம் ஓடி விடும். ஹைட்ரா பாடில் விசா பெருமாள் என்று அழைக்கப்படும் விஷ்ணு கோவிலில் கிடையாது. கூட்டம் தாங்காது.


A.Gomathinayagam
ஜன 01, 2024 13:59

பிரமாணர் தவிர முற்படுத்தப்பட்ட சாதியில் பல சாதிகள் இருக்கின்றன .அவர்களிடமும் ஓட்டுவங்கி இல்லாததால் அவர்களும் தமிழக அரசியல் கட்சிகள் எந்த முக்கியத்துவமும் தருவதில்லை


Indian
ஜன 01, 2024 11:27

antha


Svs Yaadum oore
ஜன 01, 2024 10:28

பொருளாதார அடிப்படையில் நலிந்தோருக்கான, 10 சதவீதம் இட ஒதுக்கீட்டை, தமிழக அரசு கொள்கை ரீதியாக ஏற்றுக் கொள்ளவில்லை....ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை?? ...இது எதோ பிராமணர்களுக்கு மட்டும் என்று 3 சதத்திற்கு எதற்கு 10 சதம் என்று திராவிடனுங்க நாடகம் ....பிராமணர்களை தவிர்த்து இந்த 10 சதவீதம் இட ஒதுக்கீட்டில் வரும் மற்ற முன்னேறிய ஜாதியினர் பலர் ...இருபது ஜாதிகளாவது இந்த இட ஒதுக்கீட்டில் வரும் ...


GMM
ஜன 01, 2024 10:25

கோவில் நிர்வாகம் தன்னாட்சி பெற்ற வாரியம் பொறுப்பில் இருப்பது நல்லது. கோவில் சொத்து, இடம், பிற அதிகாரம் வாரியத்தின் பொறுப்பில் இருக்க வேண்டும். பெரிய கோவில் பூசாரி, பணியாள், தலைவர் உறுப்பினர்கள் சைவ, வைணவ உணவு பழக்க வழக்கங்கள்/ஒழுக்கம் கடைபிடிக்க வேண்டும். இது கட்டாயம். 10 சதவீத இட ஒதுக்கீடு கொள்கை திராவிடம் விரும்ப வில்லை என்றால், அந்த மக்களுக்கு 100 சதவீத வரி விலக்கு மத்திய, மாநில அரசுகள் கொடுக்க வேண்டும். அதன் மூலம் தன் இன ஏழை மக்களுக்கு உதவ முடியும். வழக்கு தாக்கல் செய்ய வேண்டும். சர்வ மத, சர்வ குணமுடைய இந்து அறநிலைய துயர் (துறை) நீக்க வேண்டும்.


Rajarajan
ஜன 01, 2024 09:17

ஹிந்து வழிபாடு முறை / ஹிந்து கடவுள் / ஹிந்து சமயம் / ஹிந்து கோவில்கள் பிடிக்கவில்லை மற்றும் நம்பிக்கை இல்லையெனில், ஹிந்து அறநிலைய துறையை அரசு கைவிடுவது தான் சிறந்தது. நம்பிக்கை உடையவர் எடுத்து நடத்திக்கொள்ளட்டும். இந்த அரசுக்கு ஹிந்து வழிபாடு வேண்டாம், ஆனால் வசூல் மட்டும் வேண்டும்.


Anonymous
ஜன 01, 2024 08:59

வேறு பொழைப்புல தான் மண் அள்ளி போட்டு. விட்டீர்களே


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை