உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாதயாத்திரை பக்தர்களுக்கு தனிப்பாதை வேண்டும் ஹிந்து முன்னணி வலியுறுத்தல்

பாதயாத்திரை பக்தர்களுக்கு தனிப்பாதை வேண்டும் ஹிந்து முன்னணி வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர்: 'பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு தனிப்பாதை அமைக்க வேண்டும்' என ஹிந்து முன்னணி அமைப்பு வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து அவ்வமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியிருப்பதாவது:திருச்செந்துார் பழனி சபரிமலை சமயபுரம் உள்ளிட்ட ஆன்மிகத் தலங்களுக்கு காவடி தீர்த்த குடம் இருமுடி எடுத்து பாதயாத்திரையாக பக்தர்கள் செல்வது வழக்கம். பக்தர்கள் பாதயாத்திரையாக செல்லும்போது பல இடங்களில் விபத்துகள் நிகழ்கின்றன; உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.அசம்பாவிதங்களை தடுக்கும்விதமாக பாதயாத்திரை பக்தர்களுக்கு தனி சாலை வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அப்போதைய அ.தி.மு.க. அரசு திண்டுக்கல்லில் இருந்து பழனி வரை; செம்பட்டியில் இருந்து ஒட்டன்சத்திரம் வரை பாதயாத்திரை பக்தர்கள் பயன்படுத்த தனி ரோடு அமைத்து கொடுத்தது.தற்போது இந்த ரோடுகள் குண்டும் குழியுமாக புல் செடிகள் முளைத்து விஷ ஜந்துகள் நடமாடும் இடமாக மாறிவிட்டன. இதனால் இதைப் பயன்படுத்துவதை தவிர்த்து கனரக வாகனங்கள் செல்லக்கூடிய ரோட்டில் பக்தர்கள் நடந்து செல்ல வேண்டியுள்ளது.தாராபுரம் உடுமலை வழியாக வரக்கூடிய பக்தர்களுக்கு தனி ரோடு இல்லை. திருச்செந்துாருக்கு பல ஆண்டுகளாக பக்தர்களுக்கு தனி சாலை அமைக்கும் திட்டம் கிடப்பில் உள்ளது.மேலும் திருநெல்வேலி முதல் திருச்செந்துார் வரையிலும் துாத்துக்குடி முதல் திருச்செந்துார் வரையிலும் இருக்கும் ரோடுகளும் மோசமான நிலையில் உள்ளன.பக்தர்களுக்கு தனி ரோடு ஒளிரும் குச்சி கழிப்பிடம் மருத்துவம் குடிநீர் வசதி உள்ளிட்டவற்றை வழங்க அறநிலையத்துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

முருகன்
ஜன 15, 2024 20:58

இந்தியா என்பது தனி ஒரு மதம் கிடையாது இது போல் அனைத்து மதத்தினரும் கேட்டால் பிரச்சினை தான் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்


Google
ஜன 15, 2024 14:01

நல்ல நோக்கம் நிறைவேற வாழ்த்துக்கள்..


திகழ்ஓவியன்
ஜன 15, 2024 19:26

modi ஒரு KM ரோடு போட 290 கோடி அவரிடம் sollungal அமைத்து கொடுப்பார் 7600000000000000000000000 கோடி சும்மா தான் இருக்கு


வீரா
ஜன 15, 2024 12:53

இருக்கும் பாதையை செப்பணிட்டு தர சொல்லித்தான் கோரிக்கை.செய்தியை சரியாக படிக்கவும். இங்கு பதிவிடுவோர் மூன்றாவது இரயில் பாதை தனி பாதை என்று ஹிந்துக்கள் மீது காழ்புணர்சியை காட்டுவது சரியல்ல. துர்கா ஸ்டாலின் அவரது மகள் திருவண்ணாமலையில் நடந்தது அரசுகள் அமைத்த கிரிவலபாதையில் அல்லாமல் நடுரோட்டில் அல்ல. இருக்கும் தனி பாதையை செப்பனிட்டு கொடுத்தால் ஹைவேயில் வாகனங்களும் வேகமாக செல்லமுடியும் என்ற அறிவு கூட இல்லாது ஹிந்துக்கள் நம்பிக்கையை கொச்சை படுத்தும் கருத்துக்களை பதிவிடுவது அறுவெருக்கதக்கது.


sahayadhas
ஜன 15, 2024 10:57

ரொம்ப யோசிக்காதீங்க பக்தியா கூப்பிட்டா கடவுளே விட்டுக்கு வருவாரு.


rameshkumar natarajan
ஜன 15, 2024 10:33

This is very much possible provided if Hindu Munnani and others should surrender their land for this purpose.


rajan
ஜன 15, 2024 07:50

பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு தனிப்பாதை அமைக்க வேண்டும்' என ஹிந்து முன்னணி அமைப்பு வலியுறுத்திய... அனைத்து இந்துக்களும் தங்கள் வீடு மற்றும் கடை முன் பகுதியை தனி பாதை அமைக்க இலவசமாக அளிக்க வேண்டும் மற்றும் அதற்கான செலவையும் இந்துக்களே ஏற்க வேண்டும் என்றும் இவர் சொல்லுகிறார்


அப்புசாமி
ஜன 15, 2024 06:32

இந்தியன் ரயில்வேஸ் மூணாவது தண்டவாளம் போட்டுக் குடுக்கலாமே...


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி