வாசகர்கள் கருத்துகள் ( 2 )
திமுகவிற்கு முடிவுரை எழுத தமிழக மக்கள் தயாராகி விட்டனர்.. கை காசை செலவு செய்து தோற்பதற்கு அவர்கள் என்ன விவரங்கெட்டவர்களா ???
இவர்கள் உடன் பிறப்புகள் அல்லர் உடன் பருப்புகள்
தி.மு.க., வில் விழுப்புரம் மாவட்டத்திற்கு சட்டசபை தேர்தல் பொறுப்பாளராக வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார். எம்.பி., தேர்தலின்போது விழுப்புரம் மாவட்டத்தில் பொன்முடி, மஸ்தான் என இரண்டு அமைச்சர்களாக இருந்தனர். தேர்தல் செலவில் ஒரு பகுதியை இவர்கள் கவனித்துக் கொண்டனர்.இப்போது இவர்கள் இருவரும் அமைச்சர்களாக இல்லை. எனவே தேர்தல் செலவுக்கு தாராளமாக பணம் கிடைக்குமா என்கின்ற சந்தேகம் கட்சி நிர்வாகிகளிடம் எழுந்துள்ளது.விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் மயிலம், செஞ்சி சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகள் ஆரணி லோக்சபா தொகுதியில் உள்ளடங்கி உள்ளன. ஆரணி, திருவண்ணாமலை மாவட்டத்தில் இருப்பதால் லோக்சபா தேர்தலின் போது அந்த பகுதியின் மாவட்ட செயலாளர் அமைச்சர் வேலு தொகுதியில் நடந்த பிரசாரம், கூட்டம் மற்றும், தேர்தல் நடைமுறை செலவுகளை தானே ஏற்று தாராளமாக செய்தார். தற்போது பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பன்னீர்செல்வம் செலவு விஷயத்தில் சிக்கனமாகவும், கறாராகவும் இருப்பார் என கட்சி வட்டாரத்தில் சொல்லி வருகின்றனர்.இதுவரை அமைச்சர் பன்னீர்செல்வம் நடத்திய நிர்வாகிகள் கூட்டத்தில் அட்டென்டன்ஸ் எடுத்து, வராத நிர்வாகிகளிடம் ஏன் வரவில்லை என விளக்கம் கேட்டுள்ளார்.தேர்தல் பணிகளையும், கட்சி பணிகளையும் செய்யாதவர்கள் குறித்து கட்சி தலைமைக்கு புகார் தெரிவிப்பேன் என நிர்வாகிகள் கூட்டத்தில் பகிரங்கமாக பேசி வருகிறார்.இதனால் சட்டசபை தேர்தலின் போது தாராளமாக நிதி கிடைக்குமா என்ற சந்தேகம் உடன்பிறப்புகளிடையே எழுந்துள்ளது. அத்துடன், இருக்கின்ற பதவியை தக்க வைத்துக் கொள்ள தங்களின் கை காசை செலவு செய்ய வேண்டிய நிலை வருமோ என்ற அச்சமும் இவர்களிடம் ஏற்பட்டுள்ளது.
திமுகவிற்கு முடிவுரை எழுத தமிழக மக்கள் தயாராகி விட்டனர்.. கை காசை செலவு செய்து தோற்பதற்கு அவர்கள் என்ன விவரங்கெட்டவர்களா ???
இவர்கள் உடன் பிறப்புகள் அல்லர் உடன் பருப்புகள்