உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள்ளச்சாராய விவகாரம்: இதுவரை 1800 லிட்டர் மெத்தனாலை பறிமுதல் செய்த சிபிசிஐடி

கள்ளச்சாராய விவகாரம்: இதுவரை 1800 லிட்டர் மெத்தனாலை பறிமுதல் செய்த சிபிசிஐடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பாக விசாரணை நடத்திவரும் சிபிசிஐடி, இதுவரை 1800 லிட்டர் மெத்தனாலை பறிமுதல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக உள்ளது. 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. கள்ளச்சாராயம் தொடர்பாக கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ், சின்னதுரை, மாதேஷ் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார், அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் நடத்திய சோதனையில் இதுவரை 1800 லிட்டர் மெத்தனாலை பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களிடம் தனித்தனியாக வாக்குமூலம் பெற்று வருகின்றனர். வாக்குமூலம் பெறும் பணியில் 50க்கும் மேற்பட்ட சிபிசிஐடி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த வழக்கில் கோவிந்தராஜ், சின்னதுரை, மாதேஷ், ஜோசப் உள்ளிட்ட 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது. இதற்கு அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Ramesh Sargam
ஜூன் 26, 2024 22:32

பறிமுதல் செய்யப்பட்ட மெத்தனால் எங்கே?


D.Ambujavalli
ஜூன் 26, 2024 16:34

1800 லிட்டர் மெத்தனாலை cbcid வந்துதான் கண்டு பித்ததாம் போலீசுக்கு, உள்ளாட்சிக்கோ தெரியவே தெரியாதாம் Nampittom


M S RAGHUNATHAN
ஜூன் 26, 2024 15:39

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உயிர் இழந்த அனைவருக்கும் அரசு சார்பில் அல்லது டாஸ்மாக் சார்பில் சிலைகள் வைக்கவேண்டும். இனி கள்ளச்சாராயம் அருந்தாமல் டாஸ்மாக் பானம் அருந்துங்கள் என்று.மக்களுக்கு உயிரை கொடுத்து டாஸ்மாக் வருமானம்.உயர்வதற்கு விளம்பரம் கொடுத்து இருக்கிறார்கள்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூன் 26, 2024 15:15

இதுவும் ஒரு கண்துடைப்புக்கு தான். இன்னும் ஒரு ஆறு அல்லது ஒரு வருடத்தில் இதனை மறக்கடிக்க கூடிய சம்பவம் ஒன்றை நடத்தி எல்லா மீடியாக்களையும் அதன் பக்கம் திரும்பிய பின்னர் பிடிக்க பட்ட இதே மெத்தனால் எலி குடித்துவிட்டதாக கூறி புற வாசல் வழியாக மீண்டும் கள்ளச்சாராய மார்க்கெட்டுக்கு சென்று விடும். யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 26, 2024 14:57

அறுபத்தஞ்சு பேர் செத்தப்புறமா மெத்தனால் இருக்குற இடம் எங்கே என்று தெரிகிறது. அதற்கு முன்னால் தெரியவில்லை. இந்த ஏவல் துறைக்கு. முன்னாடியே தெரிஞ்சிருந்தா அரசாங்கத்துக்கு ஆறரை கோடி மிச்சம்.


Anand
ஜூன் 26, 2024 14:15

கள்ளசாராயத்தை ஒழிக்க ஒரே வழி, அதாவது அரசு விற்கும் நல்ல சாராயத்தை குடித்து உயிரிழந்தால் ருபாய் ஐம்பது லட்சம் வழங்கப்படும் என அறிவித்தால் மிகுந்த பலன் தரும். நல்ல சாராய வியாபாரம் இன்னும் கொடிகட்டி பறக்கும். அரசுக்கு மிகுந்த லாபம் வரும்.


Barakat Ali
ஜூன் 26, 2024 14:13

முன்பே செய்திருந்தால் இத்தனை மரணங்களைத் தவிர்த்திருக்கலாமே ????


S.Bala
ஜூன் 26, 2024 13:14

அப்போ இவ்வளவு நாள் சம்பளம் வாங்கிட்டு வேலை பார்க்காம இருந்திருக்காங்க. செத்தாதான் புடிப்பாங்க போல . நல்ல துறை .


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை