உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜாதி என்ற சுமையை இன்னும் சிலர் இறக்கி வைக்கவில்லை: ஐகோர்ட் கவலை

ஜாதி என்ற சுமையை இன்னும் சிலர் இறக்கி வைக்கவில்லை: ஐகோர்ட் கவலை

சென்னை; 'அரசியல் சாசனம் வகுத்து, 75 ஆண்டுகள் கடந்தும், ஜாதி என்ற தேவையில்லாத சுமையை, சமூகத்தில் உள்ள ஒரு சில பிரிவினர் இன்னும் கீழே இறக்கவில்லை' என, சென்னை உயர் நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகா ஆவலப்பட்டி கிராமத்தில், வரதராஜபெருமாள் மற்றும் சென்றாய பெருமாள் கோவில்கள் உள்ளன.இக்கோவில்களில், குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்த பரம்பரை அல்லாத அறங்காவலர்கள் நியமிப்பது தொடர்பாக திட்டம் வகுக்கக்கோரி, ராஜேந்திரன் என்பவர், 2015 டிச., 22ல் விண்ணப்பம் செய்தார்.இந்த விண்ணப்பத்தை உரிய காலத்துக்குள் பரிசீலித்து, ஹிந்து அறநிலைய துறையின் கோவை இணை ஆணையர் உத்தரவு பிறப்பிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. அறநிலைய துறை சார்பில் சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜரானார்.

நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

கோவிலுக்கு ஒரு திட்டத்தை வகுக்க கோரிய விண்ணப்பம் நிலுவையில் இருந்தால், அத்தகைய திட்டத்தை வகுக்க, இந்த நீதிமன்றம் உத்தரவிடும். ஆனால், இந்த வழக்கில் மனுதாரரின் கோரிக்கை என்பது, ஜாதியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது.ஜாதி ஒரு சமூக தீங்கு; ஜாதியற்ற சமூகம் என்பது தான் நம் அரசியல் சாசனத்தின் இலக்கு. ஜாதியை நீடித்து, நிரந்தமாக்க செய்யும் வகையிலான வழக்கு தொடுத்த மனுதாரரின் கோரிக்கை, அரசியல் சாசனம் மற்றும் பொது கொள்கைக்கு விரோதமானது. எனவே, மனுதாரரின் கோரிக்கை மனுவை, ஹிந்து அறநிலைய துறையின் கோவை மாவட்ட இணை ஆணையர் தள்ளு படி செய்ய வேண்டும். ஜாதியை நிலை நிறுத்துவதற்கான எதையும், எந்த நீதிமன்றமும், ஒருபோதும் பரிசீலிக்க முடியாது.இதற்கான காரணம் மிகவும் எளிது. ஜாதி என்பது, ஒருவர் வாழ்க்கையில் என்ன கற்றுக் கொள்கிறார் அல்லது செய்கிறார் என்பதை பொறுத்து, அது தீர்மானிக்கப்படுவதில்லை; அது, பிறப்பால் ஏற்படுகிறது. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற, சமூகத்தின் அடிப்படை நெறிமுறை களுக்கு எதிராக உள்ளது.ஜாதி, நாட்டை பல காலமாக பிளவுபடுத்தி வருகிறது. சமூகத்தை பிளவு படுத்தி, ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி, கலவரங்களை துாண்டும் ஜாதி, வளர்ச்சிக்கு எதிரானது. ஜாதி அடிப்படையில் எந்த பாரபட்சமும் இருக்கக்கூடாது. ஜாதியில்லா சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பதே, அரசி யல் சாசனத்தை உருவாக்கிய தலைவர்களின் கனவாக இருந்துள்ளது.

75 ஆண்டுகள்

அரசியல் சாசனம் வகுத்து, 75 ஆண்டுகள் கடந்த நிலையில், ஜாதி என்ற தேவையில்லாத சுமையை, சமூகத்தில் உள்ள ஒரு சில பிரிவினர் இன்னும் கீழே இறக்கி வைக்காமல் உள்ளனர்.இதனால், அரசியலமைப்பு சட்டத்தின் செயல்பாடுகளே விரக்தியடைந்து உள்ளன. ஜாதி அமைப்பு, சமூகத்தின் குறிக்கோள்கள் மற்றும் மதிப்புகளை, சிதைக்க வழிவகுக்கிறது.ஜாதியை நிலைநிறுத்தும் எந்தவொரு கோரிக்கையும், அரசியலமைப்புக்கு விரோதமானது மட்டுமல்ல, பொது கொள்கைக்கும் எதிரானது என்பதை, உறுதியாக அறிவிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.அறங்காவலர் பதவிக்கு, பக்தி, நம்பிக்கையுடன், ஆன்மிக, அறச்சிந்தனை தான் அவசியம். இவற்றை அடிப்படையாக கொண்டு தான் அறங்காவலர்களை நியமிக்க வேண்டும்; ஜாதி அடிப்படையில் அல்ல.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

M S RAGHUNATHAN
பிப் 16, 2025 16:32

முதலில் district judiciary இல் இட ஒதுக்கீட்டை நிறுத்துங்கள். Subordinate judiciary


S.Murugesan
பிப் 16, 2025 16:11

ஏன் எனது கருத்து இடம் பெறவில்லை


Sridhar
பிப் 16, 2025 16:07

யோவ், அவனவன் அவங்களோட வேலைய ஒழுங்கா பாருங்கய்யா. மலைபோல கேசு குமிஞ்சிட்டு இருக்கு. உடனே நியாயம் கொடுக்க வக்கில்லாத நீதிமன்றங்கள், இருந்தும் பிரயோசனம் இல்லேங்கற நிலையில இருக்கும்போது, நமக்கெதுக்கு வேற பிரச்சினையெல்லாம்?


Sivagiri
பிப் 16, 2025 14:41

கோர்ட்டுல வேலைக்கு சேர ஜாதி கேட்க மாட்டாங்களா - - - - எங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம் என்று எப்போ சொல்றாங்களோ அப்போதான் , ஆட்டோமெட்டிக்கா ஜாதி இல்லாம போயிடும் . . .


சுலைமான்
பிப் 16, 2025 14:26

எதுக்குங்கய்யா இறக்கி வைக்கனும்.. நீதிபதிகளே ஜாதி அடிப்படையில்தானே பதவி உயர்வு வாங்கறீங்க.... ஊருக்கு உபதேசம் சொல்லாதீங்க... முதல்ல உங்க முதுகுல உள்ள அழுக்க கழுவுங்க.


Ramesh Sargam
பிப் 16, 2025 12:43

ஜாதி என்ற தேவையில்லாத சுமையை, சமூகத்தில் உள்ள ஒரு சில பிரிவினர் இன்னும் கீழே இறக்கவில்லை. அதேபோன்று ஒரு சில அரசியல்கட்சிகள் தங்கள் சுயநலத்துக்காக ஜாதியால் மக்களை பிளவுபடுத்தி ஆட்சி செய்கிறார்கள். அவர்களுக்கும் அந்த சுமையை இறக்கிவைக்க மனமில்லை.


கடல் நண்டு
பிப் 16, 2025 11:52

ஆமாஆமா … பள்ளிகளில் ஜாதி சான்றிதழ் வாங்க / கேட்க கூடாது என்று உத்தரவு போட முடியவில்லை .. சிலர் இறக்கி வைக்கலையாம்.. ஏத்தி வைத்திருப்பதே நீதிமன்றங்கள் தான் திராவிடியா அரசை ஏன் இந்த நீதிமன்றங்கள் கேள்வி கேட்பதில்லை ? பயமா ? .. இதில கவலை வேற ..மாற்றம் முதலில் சொல்பவர்களிடமிருந்து துவங்கட்டும் .. நீதிபதிகள் தங்களது ஜாதியை துறக்க தயாரா?? ஊருக்கு தான் உபதேசம் .. விளங்கிரும் தமிழகம் ..


raja
பிப் 16, 2025 10:41

எதுக்கு இறக்கி வைகணும்... அரசே உன் ஜாதி என்ன என்று பார்த்து படிப்பு வேலையில் இட ஒதுக்கீடு கொடுக்கும் வரை ஜாதியை ஒழிக்கவும் முடியாது..அதன் வளர்ச்சியை தடுக்கவும் முடியாது....


MUTHU
பிப் 16, 2025 09:44

கிராமிய கலாச்சாரத்திலிருந்து நாடு என்று நகர மயமாகியதோ மக்கள் புலம் பெயர்ந்து வாழ ஆரம்பித்த சுமார் நாற்பது ஆண்டுகளில் பிராந்திய மொழி அடிப்படைவாதம், சாதீய சிந்தனைகள் போன்றவை நீர்த்து போய் விட்டது. இதனை சிலர் புரியாமல் நீதியரசர் உள்பட இன்னமும் இதனை ஒரு பிரச்சினை போன்று பார்க்கின்றனர். சாதீயம் அழிக்க முடியாது. மக்களின் வாழ்வில் சுய பிடிதனமே தான் என்ற அடிப்படைவாதம் தான். அது மொழியாய் இருக்கலாம். மதம் சார்ந்ததாய் இருக்கலாம். சாதியாய் இருக்கலாம். ஊர் சார்ந்ததாய் இருக்கலாம். கம்யூனிசம் அழியாமல் எங்ஙனம் சங்கம், அமைப்பு என்று வேறு வேறு பரிணாமங்களை எடுக்கிறதோ அதை போன்றதே இதுவும். உலகம் முழுவதும் இது பொருந்தும். உதாரணமாய் ஒரு சாதாரண போலீஸ்காரன் கூட தான் பணியாற்றும் காவல் நிலையம் தவிர்த்து மற்ற காவல் நிலையத்தினை பற்றி சற்று குறைவான மதிப்பீடுகளே கொண்டிருப்பான். சற்று நேரத்தில் மடியும் நிலையிலுள்ள ஒரு வயதானவனை கேளுங்கள். அவன்கூட தனது எண்ணங்களே உயர்ந்தது என்ற அடிப்படைவாதம் கொண்டிருப்பான். அதற்காக அவனை அடிப்படைவாதி என்று என்ன வேண்டியதில்லை. அடிப்படைவாதம் அழியுமிடத்தில் ஆன்மிகவாதியாய் உண்டாகியிருப்பான். ஆனால் அனைவரும் ஆன்மீகவாதியாய் இருக்க முடியாது. பிரச்சினை அதுவல்ல. பொது பிரச்சினைகளில் அனைத்தும் அனைவருக்கும் சமம் என்ற கோட்பாடு கடைபிடிக்கப்படுகின்றதா என்பதே.


நிக்கோல்தாம்சன்
பிப் 16, 2025 08:44

மதம் என்னும் அரக்கன் வெளியே வந்து அடக்கியாண்டு கொண்டிருக்கும் போது ஜாதியை பற்றி பேசுறாங்களே, எப்போ தான் இந்த அரக்கனை அறிவார்களோ


jayvee
பிப் 16, 2025 09:32

அரிசிமூட்டை சொன்ன சரியாதான் இருக்கும்.. கிருத்துவத்துல ஜாதி இருக்கு, இருக்கலாம் ..இஸ்லாத்தில் ஜாதி இருக்கு, இருக்கலாம் .. ஹிந்துமதத்தில் இருக்கலாம் ..கோட்டாவிற்காக ..இருக்கக்கூடாது அடுத்தவன் பொண்ணை கடத்தி கல்யாணம் செய்யும்போது ..


நிக்கோல்தாம்சன்
பிப் 19, 2025 09:28

நீங்க என்ன சொன்னாலும் புரிந்து கொள்ளவே முடியாத நிலையில் உள்ளீர்கள் போல ஜேவி , மதம் பிடித்து அலையும் உங்களை போன்றவர்களுக்கு ஆப்ரிக்க கதி ஆனால் தான் திருந்துவார்கள் ஆனால் உங்களின் குழந்தைகளை கையில் ஆயுதம் ஏந்த வைத்து விடுவார்கள் சோரஸ்களும் யூனுசுகளும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை