உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தட்கல் டிக்கெட் கூட கிடைக்காத தென் மாவட்ட ரயில்கள்; பரிதவிக்கும் பயணிகள்

தட்கல் டிக்கெட் கூட கிடைக்காத தென் மாவட்ட ரயில்கள்; பரிதவிக்கும் பயணிகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விருதுநகர் : தென் தமிழகத்தில் இருந்து குறைவான ரயில்கள் இயக்கப்படுவதால் தட்கல் டிக்கெட் கூட கிடைப்பதில்லை என்று பயணிகள் புலம்புகின்றனர்.சென்னை கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட்டில் தென் மாவட்ட பஸ்கள் நிறுத்தப்படுகின்றன. அங்கிருந்து சென்னை செல்ல 2 மணி நேரம் ஆகிறது. இதனால் சென்னை எழும்பூரில் இறங்கும் வகையில் ரயில் பயணத்தை தேர்வு செய்வது அதிகரித்துள்ளது.தென் மாவட்டங்களில் இருந்து வந்தே பாரத், அனந்தபுரி, முத்து நகர், நெல்லை, பொதிகை, சிலம்பு மற்றும் முன்பதிவில்லா பயணிகளுக்காக அந்தியோதயா ரயில்கள் இயக்கப்படுகின்றன. அவை அனைத்திலும் முன்பதிவு நிரம்பி வழிகிறது. பயணத்திற்கு முதல் நாள் கூடுதல் கட்டணத்தில் முன்பதிவு செய்யும் தட்கல் டிக்கெட்கள் கூட கிடைப்பதில்லை. இரட்டை ரயில் பாதை ஏற்படுத்தப்பட்ட பின்னரும் பயணிகள் தேவைக்கேற்ப கூடுதல் ரயில்கள் அறிவிக்கப்படவில்லை. கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தால் வழக்கத்தை விட அதிகம் பயணிகள் ரயிலை விரும்பும் நிலையில் கூடுதலாக ரயில்கள் இயக்குவது அவசியம்.வந்தே பாரத் ரயில் திருநெல்வேலியில் காலை புறப்படுவது போல், சென்னையில் இருந்தும் காலை புறப்படுவது போல இயக்கலாம். மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

N Annamalai
ஜன 31, 2024 00:10

இனியாவது வாய் திறந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசுவார்களா ?.


venugopal s
ஜன 30, 2024 16:44

அதுதான் இருந்த ரயில்கள் எல்லாவற்றையும் அயோத்திக்கு அனுப்பி வைத்து விட்டார்களே!


JAISANKAR
ஜன 30, 2024 15:09

விடியா அரசு தான் காரணம் என்று பதிவு செய்யும் நிலைய வித்துவான் எங்கே?


A.Gomathinayagam
ஜன 30, 2024 14:18

மழை விட்டும் தூவானம் விட வில்லை .இரட்டை பாதை ,அகல பாதை தென் மாவட்ட மக்கள் தொகைக்கு ஏற்ற நன்மை கிடைக்கவில்லை ,தென் மாவட்டங்களில் தொழில் தொடங்க வேண்டும் ,புதிய தொழில் தொடங்க சென்னை ,திருவெள்ளூர் ,காஞ்சீபுரம் ,செங்கல்பட்ட்டு மாவட்டங்களை தவிர்க்க வேண்டும்


vijayaraj
ஜன 30, 2024 14:10

அண்ணாமலைக்கு வோட்டு போடுங்கள். தென்னக மக்கள் தொழில் மற்றும் பயண வசதிகளை கேட்டு பெற முடியும். மற்ற கட்சிகள் செவிடன் காதில் சங்கு ஊதியது போல தான். தென் தமிழகத்துக்கு விடிவு பிறக்க பிஜேபி வரவேண்டும் என்பது என் கருத்து.


surendran111@yahoo.com
ஜன 30, 2024 13:09

ரயில்வே தூங்கி வள்ளியும் நிறுவனம் என்பதிற்கு நல்ல உதாரணம். வடக்கில் இருந்து சென்னை வந்து திரும்பும் ரயில்களை தமிழ்நாட்டின் கடைசிவரை செங்கோட்டை, திருச்செந்தூர், கன்னியாகுமாரி, ராமேஸ்வரம், நாகப்பட்டினம், பொள்ளாச்சி, போடி ஆகிய ஊர்கள் வரை நீட்டித்தாலே இப்பத்து போதுமான ரயில்களை பயன்படுத்த முடியும். இவர்கள் நோக்கம் முழுவது தனியார் இக்க வேண்டும் எந்தே...... எண்ணத்தசொல்ல .....


surendran111@yahoo.com
ஜன 30, 2024 13:44

முதலில் வரவும் முழுவதும் சென்னை வந்து சேரும் குறிப்பாக சென்னையில் மாலை வரும் ரயில்கள் நீட்சியாலே போதும் 1)கோரமண்டல் எக்ஸ்பிரஸ் 34)நவஜீவன் express 2)சார்மினார், 3)மும்பை -சென்னை 4)தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் 6)க்ராண்ட் திருங்க எக்ஸ்பிரஸ் 7) செங்கல்பட்டு காட்சிகூட எக்ஸ்பிரஸ் 9)மும்பை ள்காமண்ய திலாக் எக்ஸ்பிரஸ் இன்னும் பல ரயில்களாய் நீடிக்கலாம் அல்லது இணைக்கலாம்


SOLAIRAJA
ஜன 30, 2024 12:55

அதாவது, கோவை மற்றும் பெங்களூர் மார்க்கத்தில் இயக்குவது போல சென்னை to திருநெல்வேலி வழித்தடத்தில் சீரிய இடைவெளியில் ரயில்கள் இயக்கப்பட்டால் இந்த பிரச்சினை எல்லாம் தீர்ந்து விடும்....... கோவை மற்றும் பெங்களூரு மார்க்கத்தில் குறைந்தது 45-60 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்தால் ஏதாவது ஒரு ரயிலில் டிக்கெட் கிடைக்கும் தட்கல் டிக்கெட் கிடைப்பதிலும் அதிக சிக்கல் இருக்காது. தென் மாவட்டத்திற்கு செல்லும் ரயில்கள் ஒவ்வொன்றிலும் கோவில்பட்டியில் சராசரியாக 300-400 பேர் இறங்குகிறார்கள். எனவே, கோவில்பட்டிக்கு என்று தனியாக ஒரு ரயில் இயக்கப்பட்டால் அதை சுற்றி உள்ள ஊரில் உள்ளவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.......... மற்ற ரயில்களில் உள்ள டிக்கெட் கிடைப்பதில் உள்ள இடர்பாடும் ஓரளவுக்கு சரியாகும்....... சென்னைக்கு வர தொடர் போக்குவரத்து, சாலையை கடக்க மேம்பாலம் போன்ற எந்த ஒரு அடிப்படை வசதிகள் இல்லாமல் திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலைய கூத்து அதை பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. நிர்வாக திறனற்ற அரசு மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் இன்ன பிற அது தொடர்பான அதிகாரிகள்.... மக்களின் கஷ்ட நஷ்டங்களை அவர்கள் நிலையில் இருந்து புரிந்து கொள்ளாத அரசு இருந்தென்ன பயன்... தேர்ந்தெடுத்த நம்மை நாமே நொந்து கொள்வதை தவிர வேறொன்றும் செய்வதற்கு இல்லை. தமிழக அரசியலில் மாற்றம் வந்தால் ஒழிய நம் பிரச்சினைகள் தீர போவதில்லை.... நன்றி


அப்புசாமி
ஜன 30, 2024 11:46

தத்திகள் ரயில்வேயிலும் இருக்காங்க. ஒரு வருஷத்துக்கு முன்னாடி டிக்கெட் பதிவு செய்து விடவும்.


vadivelu
ஜன 30, 2024 13:00

கருது எழுதுவோரிலும் தத்தி இருப்பது தெரிகிறது.


enkeyem
ஜன 30, 2024 15:25

தமிழகத்திலிருந்து முப்பத்தி ஒன்பது தத்திகள் பார்லிமென்டில் என்ன கிழித்தார்கள்? ஓஹோ அவர்களுக்குத்தான் கருணா குடும்ப சஹஸ்ரநாமம் பாடும் பணியில் மும்முரமாக உள்ளார்களா? தொகுதி மக்கள் நலனுக்கு குரல் கொடுக்க நேரமில்லையே.


Raa
ஜன 30, 2024 11:06

உலகத்திலேயே நல்ல பிசினஸ் இருக்கு என்று தெரிந்தும், காசு செய்யத்தெரியாத ஒரே கம்பெனி நம்ம ரயில்வே கம்பனிதான். இவர்களுக்கு இலவச கோட்டாவை நிறுத்திவிட்டு ரயில் டிக்கெட் புக் செய்து பயணியுங்கள் என்று சொன்னால் தான் பொது மக்களின் கஷ்டம் தெரியும். நோகாம நொங்கு தின்பவர்களுக்கு பசித்தவனின் வயிறு தெரிய வாய்ப்பில்லை. இவர்கள் ஒழுங்கா ரயில் விட்டாலே ஆம்னி பேருந்துக்களின் கொட்டத்தை அடக்கிவிடலாம்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜன 30, 2024 11:06

சென்னை ராமேஸ்வரம் (திருச்சி வழி), சென்னை கன்யாகுமரி (மதுரை வழி) தடங்களில் காலை, மதியம் மற்றும் இரவு என இரு மார்க்கமும் 10-20 பெட்டிகள் கொண்ட ரயில்கள் தலா இரண்டு என மொத்தம் 6 ரயில்கள் இயக்க வேண்டும். தென்னக மக்களுக்கும், தலைநகர் மக்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும். ராயில்வே நிர்வாகத்திற்கு லாபமும், நல்ல பெயரும் கிட்டும். மத்திய அரசு தேர்தலுக்கு முன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்