உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாநாடு நிகழ்வுகளை காண சிறப்பு ஏற்பாடு

மாநாடு நிகழ்வுகளை காண சிறப்பு ஏற்பாடு

சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்று துவங்கிய, உலக முதலீட்டாளர் மாநாடு, இன்று நிறைவு பெற உள்ளது. நேற்று மாநாட்டு நிகழ்வுகளை, 38 மாவட்டங்களில் உள்ள, 40 லட்சம் மாணவ - மாணவியர், தங்கள் மொபைல் போன் வாயிலாக பார்க்க வசதி செய்யப்பட்டது.அனைத்து மாவட்டங்களில் உள்ள முக்கிய கல்லுாரிகள், மாவட்ட தொழில் மையங்கள், டிட்கோ வளாகம் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் சார்பில், 1.60 லட்சம் மாணவ - மாணவியர் மாநாட்டு நிகழ்வுகளை, எல்.இ.டி., திரையில் காண ஏற்பாடு செய்யப்பட்டது.மாநாடு தொடர்பான வாட்ஸாப் செய்திகள், 45 லட்சம் பேருக்கு அனுப்பப்பட்டுள்ளன. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டு நிகழ்வுகளை, மாணவ - மாணவியர் காண, இந்தியாவில் முதல் முறையாக நேற்று வசதிகள் ஏற்படுத்தப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை