உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறுமி பாலியல் வழக்கு குற்றவாளியை பிடிக்க தனிப்படை

சிறுமி பாலியல் வழக்கு குற்றவாளியை பிடிக்க தனிப்படை

சென்னை:திருவள்ளூர் மாவட்ட சிறுமி பாலியல் வன்முறை வழக்கில், குற்றவாளி குறித்து துப்பு துலக்க முடியாததால், கூடுதலாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. கடந்த, 12ம் தேதி, திருவள்ளூர் மாவட்டத்தில் தனியாக நடந்து சென்ற, 10 வயது சிறுமியை, மர்ம நபர் மாந்தோப்புக்குள் துாக்கிச் சென்று பாலியல் வன்முறை செய்தார். இது தொடர்பான வழக்கில், குற்றவாளியை கைது செய்ய, வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ரா கர்க் மேற்பார்வையில், திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., தலைமையில், மூன்று டி.எஸ்.பி.,க்கள் அடங்கிய எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இப்படையினரால் துப்பு துலக்க முடியவில்லை. இதனால், மர்ம நபர் குறித்து தகவல் தருவோருக்கு, 5 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் அறிவித்துள்ளார். எனினும், குற்றவாளி தொடர்பாக, போலீசா ருக்கு நம்பத்தகுந்த தகவல் கிடைக்கவில்லை. எனவே, கூடுதலாக மேலும், 12 தனிப்படைகள் அமைத்து, குற்றவாளியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை