உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பேச்சு, பேட்டி, அறிக்கை: தலைமைக்கு ராஜா ஐஸ் வச்சு பார்க்கிறாரோ?

பேச்சு, பேட்டி, அறிக்கை: தலைமைக்கு ராஜா ஐஸ் வச்சு பார்க்கிறாரோ?

தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை:

அப்போது கருணாநிதி மூலவர்; ஸ்டாலின் உற்சவர். இப்போது மூலவர் முதல்வர்; உற்சவர் உதயநிதி என, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா கூறியுள்ளார். மூலவர், உற்சவர் என்பதெல்லாம் சனாதன பழக்க வழக்கங்கள், நடைமுறைகள். சனாதனத்தை ஒழிப்போம் என்று மேடைக்கு மேடை முழங்குகிற ராஜா, ஸ்டாலினையும், உதயநிதியையும் சனாதனத்தோடு ஒப்பிடுவது ஏன்?

சமீப காலமாகவே, ராஜா சர்ச்சைக்குரிய பல விஷயங்களை பேசி, வம்புல மாட்டிட்டு இருக்காரு... அதனால, மறுபடியும் சீட் கிடைக்குமா என்ற சந்தேகத்தால, தலைமைக்கு இப்படி ஐஸ் வச்சு பார்க்கிறாரோ?

இந்திய தேசிய லீக் கட்சியின் தென்மண்டல அமைப்பு செயலர் அம்ஜத்கான் அறிக்கை:

சட்டசபையில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிகழ்ச்சி நிறைவில் நாட்டுப்பண்ணும் இடம் பெறுவது பல ஆண்டுகளாக பின்பற்றி வருவது நல்மரபு. இதற்கு மாறாக கவர்னர் ரவி, அரசுடன் இணைந்து தயாரித்த உரையை வாசித்து, சபைக்கு வழங்க மறுத்து அமர்ந்து விட்டதும், நாட்டுப்பண் இசைக்கும் முன் வெளியேறியதும், ஜனநாயக மாண்புகளை சிதைத்து தமிழக அரசையும், மக்களையும் அவமதிக்கும் செயல்.

தேர்தல் நேரத்துல, இப்படி அறிக்கை விட்டால் தான், ஆளுங்கட்சியின் கருணை பார்வை தன் மேல படும்னு நினைக்கிறாரோ?

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை:

சட்டசபையை, சபாநாயகர் அப்பாவு பொதுக்கூட்ட மேடையாக்கி இருக்கிறார். இந்த லட்சணத்தில், கவர்னர் மரபை மீறிவிட்டார் என்று தி.மு.க., குற்றம் சொல்கிறது. அப்படி என்ன மரபை மீறினார்? 'தமிழ்த்தாய் வாழ்த்தோடு, தேசியக் கீதத்தையும் பாடுவோம்' என்றதில் என்ன பெரிய மரபு மீறல் இருக்கிறது? விளையாட்டுத் துறை அமைச்சராக உதயநிதியை நியமனம் செய்து, முதல்வருக்கு மேலாக முன்னுரிமை தருவது மரபு மீறல் இல்லையா?

அதெல்லாம் மரபு மீறல் இல்லை... அவங்களது அடிப்படை உரிமை!

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை:

ஈரான் நாட்டு மீனவர்களையும், பாகிஸ்தான் நாட்டு மீனவர்களையும், கடல் கொள்ளையர்களிடம் இருந்து, இந்திய கடற்படை காப்பாற்றியதை போல், மன்னார் வளைகுடா பகுதியில், தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினராலும், கடல் கொள்ளையர்களாலும் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த மத்திய அரசு முன்வர வேண்டும்.

வாஸ்தவமான கோரிக்கை தான்... மத்திய அரசு மனசு வச்சா நல்லாயிருக்கும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை