உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தனித்து நின்றாலும் வெற்றி பெறும் வலிமை உள்ளது: காங்., தலைவர்

தனித்து நின்றாலும் வெற்றி பெறும் வலிமை உள்ளது: காங்., தலைவர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவள்ளூர்: ‛‛ தனித்து நின்றாலும், வெற்றி பெறும் வலிமையுடன் உள்ளோம்'', என தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.திருவள்ளூர் நகர காங்., செயற்குழு கூட்டத்தில் செல்வப்பெருந்தகை பேசியதாவது: ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போன்று காங்கிரஸ் தற்போது இல்லை. அனைத்து இடங்களிலும் வலிமையாக உள்ளது. தனியாக நின்றாலும் வெற்றி பெறும் அளவுக்கு நமது கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். 2021 சட்டசபை தேர்தலின் போதும், 2024 லோக்சபா தேர்தலின் போதும் எங்களுக்கு உரிய அங்கீகாரம், மரியாதை தரவில்லை. ஏதோ ஒரு விதத்தில் உதாசீனபடுத்துகிறார்கள். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3xuu1bei&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மரியாதை எங்களுக்கு வேண்டும் என்று சொல்கிறார்கள். அனைத்து நகர, வட்டார, மாவட்ட தலைவர்களும், எங்களுக்கு உரிய அங்கீகாரம் எப்போது கிடைக்கும். கடந்த 2 , 3 தேர்தலில் அது சரியாக இல்லை என்கின்றனர். நாம் வலிமையாக இருந்தால், நமக்கு உரிய மரியாதையும், அங்கீகாரமும் கிடைக்கும். அதற்கு கட்சி கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கூட்டத்தில் கட்சி கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று தான் கூறினேன். தற்போது 9 தொகுதிகள் கொடுக்கின்றனர். ஓட்டு வங்கி அதிகரிக்கும் போது 20 தொகுதிகள் கொடுக்கிறோம் என கூட்டணி கட்சியை சொல்ல வைக்கும் அளவுக்கு தொண்டர்கள் பணியாற்ற வேண்டும். பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் இப்படித்தான் பேச வேண்டும் என்பது விதி. தொண்டர்களை நாங்கள் உற்சாகபடுத்தாமல் வேறு யார் செய்ய முடியும். சித்தாந்தம், கொள்கை கோட்பாடு உள்ள கட்சி காங்கிரஸ் தான். பா.ஜ.,விடம் ஒன்றும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 84 )

V RAMASWAMY
ஆக 09, 2024 13:18

தனித்து நின்றால் ஜெயிக்கமுடியாது என்பதால் தானே எங்கு பார்த்தாலும் இவர்களோடு அல்லது அவர்களோடு கூட்டணி வைக்கிறீர்கள், இந்த நிலையில் என்ன உளறல் ?


Naga Subramanian
ஆக 05, 2024 09:15

ஐயா ராசா, காங்கிரசுக்கு கிடைத்த முத்தே, அளப்பற்கரிய செல்வமே, இதுவரை யாருக்கும் கிடைத்திராத பெரும் தொகையே, பல கட்சிகளைத் கடந்து வந்த காங்கிரஸின் விடிவெள்ளியே, இதைத்தானே எதிர்பார்த்தோம் இராசகுமாரா உனது ஆசை வீண் போகாது. தனியே நின்று பார்த்தால்தானே, உனது பலம் தெரியும். உன்னை விட பொடியன் பிஜேபி யில் தமிழ்நாட்டுல கலக்குறான் பாரு. இராமாயணத்தில் ஹநுமானுக்கு தனது பலம் தெரியாதாம். ஆகையால் தனித்தே நில்லு.... நீயும் ஒரு தேசிய கட்சியிலிருந்துதான் வருகிறாய் என்பதை எள்ளளவும் மறந்துவிடாதே ஆல் தி பெஸ்ட் தலைவா பை...பை....


ramanujam
ஆக 02, 2024 19:55

எப்படி ...எப்படி வெட்க படாம இப்படி பேச முடியுது ....பிஜேபி வாங்கியது 11% ஆனால் உங்களுக்கு 3% தான் ....இந்த உண்மை தெரியுமா ? கூட்டணி கட்சி பலத்தில் 10 தொகுதி கிடைத்து உள்ளது


saravanan samy
ஜூலை 31, 2024 14:06

ராத்திரி கனவில் இருந்து அய்யா இன்னும் தெளியவில்லை


Ramesh Sargam
ஆக 04, 2024 20:46

ராத்திரி கனவில் இருந்து அல்ல, ராத்திரி அடித்த சரக்கு போதையில் இருந்து அல்லக்கை தெளியவில்லை.


Naga Subramanian
ஜூலை 24, 2024 05:22

காங்கிரஸ் செல்லாக்காசாகி நீண்ட காலங்களாகி விட்டது. இந்த கட்சியில் சேர்வதற்கு இவரைப் போன்றவர்கள் தான் வருவார்கள்.


Narayanan
ஜூலை 23, 2024 11:25

செல்லாக்காசு பெருந்தகை தனியாக நின்று வெற்றி பெறுவோம் என்னும் போதாவது திமுக அவர்களை கழற்றிவிட வேண்டும் .இன்னும் ஏன் இந்த வேண்டாத சுமையை சுமக்கவேண்டும் ??ஒரு புறம் சொல்கிறார் தனியே நின்று வெற்றி பெறும் அளவிற்கு இருக்கிறோம் என்று மறுபுறம் சொல்கிறார் கட்சியை கீழ்மட்டத்தில் இருந்து வளர்க்கவேண்டும் என்று. ஆக ஒரு நல்ல குடிகாரனாக உளறிக்கொண்டு இருக்கும் நல்லவர் .


Nallavan
ஜூலை 22, 2024 14:57

காங்கிரஸ் கட்சிக்கு தி மு க காரண் எத்தனை பேர் ஒட்டு போட்டான், காங்கிரஸ் காரண் தி மு க விற்கு எத்தனை பேர் ஒட்டு போட்டான் என்ற கணக்கை எடுத்து பார்த்துவிட்டு பேசினால் நன்றாக இருக்கும்


Raghavan
ஜூலை 22, 2024 14:47

கிராமப்புறங்களில் ஒரு வசனம் பேசுவார்கள் "கூரை ஏறி கோழி புடிக்கமுடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம்" . காலம் காலமாக dmk முதுகில் ஏறி ஏதோ ஒன்று இரண்டு இடத்தை பிடித்து காலம் தள்ளுகிற, ஒரு காலத்தில் இந்தியாவையே ஆண்ட கட்சிக்கே இவ்வளவு சவடால் என்றால் மற்றவர்களுக்கு எவ்வளவு இருக்கும்.


shyamnats
ஜூலை 22, 2024 07:54

ஆளும் கட்சியான தி மு க வே தனித்து நிற்க பயந்துதான் 25 உதிரி கட்சிகளோடு கூட்டணி என்று போட்டியிடுகிறது. அதில் ஒட்டுண்ணி யான கான் கிராஸ் வாய் சவடால் வேற. கட்சி தலைமைக்கு இவரால் தைரியமாக தெரிவித்து, தனியாக நிற்க முடியுமா? ராவுல் வின்சியே இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதும், அவரது தாயார் தேர்தலை தவிர்த்து ராஜ்ய சபா மெம்பரானதும் இவருக்கு தெரியாதா என்ன ?


Vrucodara
ஜூலை 21, 2024 18:49

எப்படி நிற்பார்களாம் - நேராகவா தலைகீழாகவா ?


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை