மேலும் செய்திகள்
தந்தை, தாய் இறந்த நிலையில் தேர்வெழுதிய மாணவிகள்
04-Mar-2025
கடலூர்: கடலூர் தந்தை இருந்த சோகத்திலும் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.கடலூர் வண்ணாரப் பாளையம் பகுதியை சேர்ந்தவர் நாராயணன். ஆட்டோ ஓட்டுனர் இவரது மகன் இளஞ்செழியன் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இன்று, அதிகாலை நாராயணன் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தார். தந்தையின் உடலைப் பார்த்து மகன் இளைஞ்சலின் கதறி அழுதார். வணிகவியல் தேர்வு நடந்த நிலையில் மாணவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி தேர்வு எழுத அனுப்பினர். தந்தை இறந்த சோகத்திலும் மனம் தளராமல் பள்ளிக்கு சென்று தேர்வு எழுதினார். மதியம் தேர்வு முடிந்து சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நாராயணன் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
04-Mar-2025