உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அவகோடா, டிராகன் பழங்கள் உற்பத்தியை பெருக்க மானியம்

அவகோடா, டிராகன் பழங்கள் உற்பத்தியை பெருக்க மானியம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அவகோடா மற்றும் டிராகன் பழங்கள் உற்பத்தியை அதிகரிப்பதற்கான பணிகளை, தோட்டக்கலை துறை துவக்கியுள்ளது.அவகோடா மற்றும் டிராகன் பழங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவற்றை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு, அதிகளவில் வருவாய் கிடைத்து வருகிறது. அதேநேரத்தில், நுகர்வோர் பயன்படுத்தும் அளவிற்கு விலை கட்டுப்படியாகாமல் உள்ளது. ஒரு கிலோ டிராகன் பழம், 250 ரூபாய்க்கும், அவகோடா, 300 முதல் 400 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இவற்றின் உற்பத்தியை அதிகரிப்பதால், விவசாயிகளுக்கு ஆண்டு முழுதும் வருமானம் மட்டுமின்றி, நுகர்வோர்களுக்கு மலிவான விலையிலும் பழங்கள் கிடைக்கும். இதை கருத்தில் கொண்டு, இவற்றின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான பணிகளை, தோட்டக்கலை துறை துவங்கியுள்ளது. தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டங்களின் கீழ், சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. 60 சதவீத நிதியை மத்திய அரசும், 40 சதவீத நிதியை மாநில அரசும் பகிர்ந்து கொள்கின்றன. அவகோடா சாகுபடிக்கு ஏக்கருக்கு 5,760 ரூபாயும், டிராகன் பழங்கள் சாகுபடிக்கு 38,400 ரூபாயும் விவசாயிகளுக்கு மானியமாக கிடைக்கும். இதற்கான பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாக, தோட்டக்கலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

செந்தில்குமார்
ஆக 13, 2024 19:37

ஆளும்கட்சி விவசாயிகளுக்கு மட்டுமே கிடைக்கும்.


Sck
ஆக 13, 2024 16:33

அவகோடாவா, அல்லது அவகாடோ.


நிக்கோல்தாம்சன்
ஆக 13, 2024 13:37

பணமதிப்பக கொடுக்காமல் செடிகளாக கொடுத்திருந்தா வரவேற்றிருப்பேன் லஞ்சத்தில் ஊறிப்போனவர்களின் ஆட்சியில் இந்த பணம் டாஸ்மாக்கிற்கு சென்று விடுமே என்று கவலையாக உள்ளது


Sampath Kumar
ஆக 13, 2024 11:04

இது எல்லாம் ரோம்ப ஓவர் பணக்காரன் தான் இதை தின்பான் ஏழைகள் உண் பலவகை பலத்திற்கு நிதி கொடுக்க பாருங்க


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை