உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் ஆகாயத்தை தொடுது அரிசி விலை: பொது மக்கள் அதிர்ச்சி

தமிழகத்தில் ஆகாயத்தை தொடுது அரிசி விலை: பொது மக்கள் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் அரிசி விலை கிலோவுக்கு ரூ.10 வரை உயர்ந்துள்ளது, சாமானிய மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. வெளிமாநில வியாபாரிகள், டெல்டா மாவட்டங்களில் அதிகளவில் வாங்கி செல்வதே இதற்கு காரணம் என தெரிகிறது.தமிழகத்தில் காய்கறிகள், பூண்டு உள்ளிட்டவற்றின் விலை அதிகரித்து வந்த நிலையில், அத்தியாவசிய உணவுப்பொருளான அரிசி விலையும் அதிகரித்து வருகிறது. கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.15 வரை விலை உயர்ந்து மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. சென்னையில் 25 கிலோ எடை கொண்ட அரிசி மூட்டையின் விலை ரூ.100 வரை அதிகரித்துள்ளதாக வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.அண்டை மாநிலங்களில் இருந்து நெல் வரத்து குறைவு மற்றும் ஆந்திரா, கர்நாடகா மாநில வியாபாரிகள், டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களிலும் போட்டி போட்டுக் கொண்டு நெல் மற்றும் அரிசியை வாங்கி செல்வதால் விலை உயர்ந்து காணப்படுவதாக அரிசி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் பாதிப்பு, அறுவடை நேரத்தில் பலத்த காற்று வீசியது மற்றும் தென் மாவட்டங்களை புரட்டிப்போட்ட கனமழை காரணமாக நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதுவும் அரிசி விலை உயர ஒரு காரணம் எனவும் அரிசி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Chennaivaasi
பிப் 01, 2024 13:20

அரிசி மட்டுமா? நல்லெண்ணெய் லிட்டர் 490 தாண்டிவிட்டது. காய்கறிகள் தவிர மீதி எல்லா மளிகை பொருட்களும் சுமார் ஐம்பது சதவிகிதம் உயர்ந்து விட்டது.


raghavan
பிப் 01, 2024 11:29

பரந்தூர் விமான நிலையம்தான் வேண்டும். அரிசி வேண்டாம். ஏனென்றால் நான் ஒரு டெல்டாக்காரன். அரிசி ஒரு கிலோ ஆயிரம் ருபாய் ஆனாலும் எனக்கு கவலை இல்லை.


வெகுளி
பிப் 01, 2024 06:45

திராவிட மாடல் .... அப்படிதான் இருக்கும்....


Mani . V
பிப் 01, 2024 06:37

நாங்கள் ஊழல் பேர்வழிக்கு நாடு முழுவதும் சிலை வைப்பதில் மும்மரமாக இருக்கிறோம்.


J.V. Iyer
பிப் 01, 2024 06:31

அதைப்பற்றி எங்களுக்கு என்ன கவலை? மேல்தட்டுக்காரர்கள் இப்படி நினைப்பதால் கழகக்கட்சிகள் திரும்பத்திரும்ப ஆட்சிக்கு வருகின்றனர். அவர்களும் ஓட்டுப்போட வருவதில்லை. கீழ்த்தட்டுக்காரர்கள் ஆயிரம் ருபாய், கொலுசு, மட்டமான சாராயம், சிக்கன் பிரியாணி பொட்டலம் எல்லாம் கொடுத்தால் இவர்களைத்தவிர வேறு யாருக்கு வோட்டுப்போடுவார்கள்? தமிழகத்திற்கு சாபக்கேடு.


Ramesh Sargam
பிப் 01, 2024 00:58

முதல்வர் ஸ்பெயின் போயிருக்கிறார். அநேகமாக அங்கிருந்து குறைந்தவிலைக்கு அரிசி வாங்கிக்கொண்டு வந்தாலும் வருவார். அதுவரை பொறுத்திருங்கள்.


JAISANKAR
பிப் 01, 2024 00:32

அரிசி கிலோ 500 விற்க வேண்டும் அப்போதுதான் விவசாயிகள் பற்றி மக்களுக்கு தெரியவரும். 1970 இல் தங்கம் கிராம 18 ரூபாய் நெல் விலை மூ ட்டை 18 ரூபாய் இன்று நெல் விலை மூ ட் டை ரூபாய் 1100 தங்கம் ரூபாய் 5800. விலை ஏற்றம் சமமாக இல்லை. 1980 இல் ஹ மாம் சோப்பு 150 கிராம் ஒரு ரூபாய் இன் று 55 ரூபாய். விவசாயி நஷ டத் தில் அதை விட்டு வெளியேறி வருகிறார்கள். அரிசி உற்பத்தி குறைந்த்து விலை உயர்வு வரும்


அப்புசாமி
ஜன 31, 2024 23:03

எல்லிரும் கெளம்பி உ.பி போயிருங்க. அரிசி கிலோ மூணு ரூவாய்க்கு.கிடைக்கிதாம்.


K.Ramakrishnan
ஜன 31, 2024 22:25

மோடி ஆட்சியில 35 கிலோ அரிசி சும்மா கொடுக்கிறேன்னு சொல்றாங்க.. ஒரு குடும்பத்துக்கு அந்த அரிசி போதாதா? தமிழ்நாட்டு எம்.எல்ஏ.ஒருத்தரு அந்த அரிசியைத்தான்சோறு பொங்கி சாப்பிடுறாரு. மாதம் ரூ.11,250 வருவாயில் குடும்பமே நடத்துறாரு. அவரை பின்பற்றினாலே வறுமை இல்லாமல் போய் விடுமே... அதுசரி.. மற்ற மாநிலங்களில் எல்லாம் அரிசி கிலோ பத்து ரூபாய்க்கு கிடைக்குதா?


g.s,rajan
ஜன 31, 2024 21:36

இந்தியாவிலும் விலைவாசி விண்ணை முட்டுது .....


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை