மேலும் செய்திகள்
பாஜ கூட்டணிக்கான காரணம்: முதல்வருக்கு இபிஎஸ் பதில்
2 hour(s) ago
'சபரிமலைக்கு ஏன் வருகிறீர்கள் எனக் கேட்டு, கேரள போலீசார் தகாத வார்த்தைகளால் பேசுகின்றனர்; தங்களை தாக்குகின்றனர்' என, தமிழக அய்யப்ப பக்தர்கள் பலர் கூறுகின்றனர். இது அதிர்ச்சியளிக்கிறது. சபரிமலையில், தமிழ் மக்களின் மீது, கேரள கம்யூ., அரசு, தொடர்ந்து அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுகிறது. கேரள போலீசார் தாக்கியதில், தஞ்சாவூரை சேர்ந்த ஒருவர் படுகாயம் அடைந்திருக்கிறார். அரசு தரும் இடைஞ்சல்களால், தமிழக பக்தர்கள் அய்யப்பனை தரிசிக்க முடியாமல், பாதியில் திரும்புகின்றனர். இதற்கு, கேரள கம்யூனிஸ்டுகளின் ஹிந்து விரோத போக்கே காரணம். குடிக்க, குளிக்க தண்ணீர் இல்லை. உண்ண உணவு இல்லை. சுகாதாரம் என்பதே சுத்தமாக இல்லை. சபரிமலையில், தமிழக பக்தர்கள், கேரள அரசால் கொடுமைப்படுத்தப்படுவதை, தமிழக அரசு தட்டி கேட்க வேண்டும். சபரிமலைக்குச் செல்லும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.-நாராயணன் திருப்பதி,,துணைத் தலைவர், தமிழக பா.ஜ.,
2 hour(s) ago