உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ஜ., குற்றச்சாட்டு தமிழக அரசு மறுப்பு

பா.ஜ., குற்றச்சாட்டு தமிழக அரசு மறுப்பு

சென்னை:தமிழக பா.ஜ., சமூக வலைதள பக்கத்தில், 'முதல்வர் ஸ்டாலின் தொகுதியான கொளத்துாரில், ஒரே வீட்டில், 30 பேர் வாக்காளர்களாக உள்ளார்களே, இதற்கு பதில் சொல்லுங்கள்' என, கூறப்பட்டுள்ளது. இதற்கு விளக்கம் அளித்து, தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை, கொளத்துார் தொகுதியில், 84வது ஓட்டுச்சாவடியில் வீட்டு எண், 11ல், 30 வாக்காளர்கள் உள்ளனர். அதில், ரபியுல்லா என்று ஒரே பெயரில் மூன்று வாக்காளர்கள் உள்ளதாக, பா.ஜ., - எம்.பி., அனுராக் தாகூர் கூறியிருக்கிறார். இதை, தமிழக பா.ஜ., தன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது. கொளத்துார் தொகுதி ஆண்டாள் அவென்யூவில் உள்ள, 11ம் எண் என்பது தனி வீடல்ல; அது, அடுக்குமாடி குடியிருப்பு. ஓட்டுச்சாவடி எண், 84 விபரங்களின்படி, வரிசை எண், 40 முதல், 75 வரையில் உள்ள வாக்காளர்கள், 11 எண் உடைய ஏ.எஸ்.வீனஸ் கோர்ட் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இதில், ரபி என்பவரின் பெயர் வரிசை எண், 50லும், 52ல் கணவர் என்கிற இடத்திலும் இடம்பெற்றுள்ளது. மேலும், வரிசை எண், 348, 352ல் தந்தை என்கிற இடத்தில் இடம்பெற்றுள்ளது. ஆனால், வீடியோவில் குறிப்பிட்டதுபோல், ரபி பெயரில் மூன்று வாக்காளர்கள் இல்லை. மேலும், ஓட்டுச்சாவடி எண், 157ல் ரபியுல்லா என்ற பெயர் தந்தை, கணவர் என்ற இடங்களில் வருகிறது. 11ம் எண் கொண்ட குடியிருப்பில், இஸ்லாமியர்கள் மட்டுமே வசிப்பது போன்ற தவறான பிரசாரத்தை மேற்கொண்டு உள்ளனர். அங்கு, அனைத்து மதத்தினரும் வசிக்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

ManiMurugan Murugan
ஆக 17, 2025 22:35

இதை தான் அனு ராக் தாகூரிடம் ஏன் கேட்க வில்லை என்று ராகுல் ஒப் பாரி யா ராகுலைப் போல் அவர் திரை கதை வசனம் நாடகம் போட வில்லை அவர் விவரம் சொல்லியுள்ளார் இதற்கு அந்த தொகுதி வேட்பாளர் தான் பதில் சொல்ல வேண்டும் ராகுல் எதிர்க்கட்சி தலைவர் அதுவும் பாராளுமன்றத்தில் இப்படி உப்புக்கு சப்பாணி ஆட்டம் போட க் கூடாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை