உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரதமரின் இ - டிரைவ் திட்ட நிதியை பெற எந்த முயற்சியும் எடுக்காத தமிழக அரசு: ரூ.2,000 கோடி வரை கிடைப்பது தவிர்ப்பு

பிரதமரின் இ - டிரைவ் திட்ட நிதியை பெற எந்த முயற்சியும் எடுக்காத தமிழக அரசு: ரூ.2,000 கோடி வரை கிடைப்பது தவிர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் மின் வாகனங்களை இயக்குவதற்கான கட்டமைப்புகளை உருவாக்க, பிரதமரின், 'இ- டிரைவ்' திட்ட நிதியை பெறாமல், தமிழகம் ஓராண்டாக காத்திருக்கிறது. மாநிலங்களில் உள்ள அரசு போக்குவரத்து கழகங்கள், மின்சார பஸ்களை இயக்கவும், அதற்கான, 'சார்ஜிங்' மையங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், பிரதமரின், 'இ- - டிரைவ்' திட்டத்தை, 2024 இறுதியில் இருந்து மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. நாடு முழுதும், அடுத்த ஆண்டுக்குள் மின்சார பஸ்கள் இயக்க, 11,000 கோடி ரூபாயும், சார்ஜிங் வசதி போன்ற கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த, 2,000 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்ற மாநில அரசுகள் தனி நிறுவனம் ஒன்றை உருவாக்கி, இந்நிதியை பெற்று, மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரித்து வருகின்றன. தமிழகத்தில் மின்சார வாகனங்களின் இயக்கம் பெயரளவிலேயே இருக்கிறது. மத்திய அரசு வெளியிட்ட, 40 முக்கிய நகரங்களின் பட்டியலில், சென்னை, மதுரை, கோவை இடம் பெற்றுள்ளன. முக்கிய வழித்தடங்கள் பட்டியலில், சென்னை - பெங்களூரு, சென்னை - விழுப்புரம், கோவை - சேலம், கோவை - பெங்களூரு, கோவை - சென்னை, சென்னை - நாகர்கோவில், திண்டுக்கல் - திருநெல்வேலி, சென்னை - ஐதராபாத், சென்னை - விஜயவாடா போன்றவையும் இடம் பெற்றுள்ளன. ஆனாலும், பிரதமரின், 'இ - டிரைவ்' திட்டத்தை செயல்படுத்தவும், அதற்கான நிதியை பெறவும் தமிழக அரசு முயற்சிக்கவில்லை. இது குறித்து, மின்சார பஸ்களை இயக்கி வரும் தனியார் பஸ் நிறுவனர் சுனீல்குமார் கூறியதாவது: எரிபொருள் செலவு குறைவு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நீண்ட கால செலவும் குறைவு என்பதால், மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. மஹாராஷ்டிரா, கர்நாடகா, டில்லி, பஞ்சாப், உத்தர பிரதேசத்தில் மின்சார வாகனங்களும், பஸ்களும் அதிகளவில் இயக்கப்படுகின்றன. ஆனால், தமிழகத்தில் மின்சார வாகனங்களுக்கான கட்டமைப்பு வசதி போதிய அளவில் ஏற்படுத்தப்படவில்லை. மின்சார பஸ்களும், இதர மின்சார வாகனங்களும் அதிகளவில் இயக்கப்படாததற்கு, சார்ஜிங் வசதி உள்ளிட்ட போதிய கட்டமைப்புகள் இல்லாததே முக்கிய காரணம்.வாகன எண்ணிக்கை, மக்கள் தொகை அடிப்படையில், பிரதமர் திட்டத்தில் ஒதுக்கிய மொத்த நிதியில், தமிழகத்துக்கு, 2,000 கோடி ரூபாய் வரை பெற்று இருக்கலாம். ஆனால், அதற்கான முயற்சிகளை, தமிழக அரசு முழு வீச்சில் எடுக்கவில்லை. தமிழகத்தில் நாங்கள் மின்சார பஸ்களை இயக்க தயாராக உள்ளோம். இதற்கான கட்டமைப்பு வசதிகள் எங்கே செய்யப் போகின்றனர்; எவ்வளவு இடங்களில் சார்ஜிங் வசதி ஏற்படுத்த போகிறார்கள்? எனவே, மின்சார பஸ்கள், வாகனங்கள் பயன்பாட்டை அதிகரிக்க, கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த வேண்டும். அதுபோல், 'சார்ஜிங்' கட்டணத்தையும் குறைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். தமிழக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: மத்திய அரசின் நிதி பெறுவதற்கு முன்பே, உலக வங்கி நிதி உதவியுடன், மின்சார பஸ்கள் இயக்குவதற்கான பணிகள் துவங்கப்பட்டன. எனவே, 100க்கும் மேற்பட்ட மின்சார பஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மேலும், பிரதமரின் இ - டிரைவ் திட்டத்தின் கீழ் நிதி பெற்று, மின்சார வாகனங்களுக்கான திட்டங்களை செயல்படுத்த, தனி நிறுவனமும் தற்போது உருவாக்கப்பட்டு உள்ளது. விரைவில் தன் பணியை, இந்நிறுவனம் மேற்கொள்ளும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

டில்லி 'டாப்'

தற்போதைய நிலவரப்படி அதிகபட்சமாக, டில்லி 3,020; மஹாராஷ்டிரா - 2,923; கர்நாடகா - 1833 என, மின்சார வாகனங்களை இயக்கி வருகின்றன. தமிழக்தில், 131 மின்சார பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. சென்னையில் முதற்கட்டமாக, 500 மின்சார பஸ்கள் இயக்கப்படும் என, 2020ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஜெர்மன் வங்கி உதவியுடன், இந்த பஸ்கள் கொள்முதல் செய்யப்படும் என தெரிவிதது. ஆறு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இன்னும், 500 பஸ்கள் வாங்கப்படவில்லை. சென்னையில் வியாசர்பாடி உட்பட பல்வேறு பணிமனைகளில், மின்சார பஸ்களுக்கான, 'சார்ஜிங்' கட்டமைப்பில் தொழில்நுட்ப பிரச்னை இருப்பதால், பஸ் சேவை துவங்குவதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

மனிதன்
ஜூன் 24, 2025 19:01

மொதல்ல கேட்டத தமிழ்நாட்டின் நியாமான நிதியை கொடுங்கப்பா...


M S RAGHUNATHAN
ஜூன் 24, 2025 11:53

ஏனுங்க உலக வங்கியில் கடன் வாங்கினால் திருப்பி கட்ட வேண்டாமா? திமுக அரசு கல்விக் கடனை ரத்து செய்தது போல்? உலக வங்கியும் கடனை ரத்து செய்துவிடுமோ? மத்ய அரசு sorry ஒன்றிய அரசு இந்த குன்றிய அரசிற்கு நிதி தருகிறோம் என்றால், வீராப்பு காட்டி ஏன் வீணாகப் போகவேண்டும்.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜூன் 24, 2025 09:27

ரயில்வே இலாகாவால் தமிழகத்திற்கான ஒதுக்கிய நிதியை உபயோக படுத்த வக்கில்லாமல் நிதியை திருப்பி அனுப்பியதை வசதியாக மறந்து விட்டீர்கள்.....இப்பொழுது ஒதுக்கிய மின்சார கட்டமைபிற்கான நிதியை கமிஷன் படியவில்லை என்ற காரணத்தினால் திட்டத்தை அமுல் படுத்த படவில்லை....தவிர கமிஷன் கொள்ளையடிக்கத்தான் திமுக திட்டம் தீட்டுமே தவிர மக்கள் நலனை சார்ந்து அல்ல.... உதாரணத்திற்கு கட்டுமரம் வழங்கிய டிவி மக்கள் பொழுது போக்க அல்ல அவர் குடும்பத்தினர் நடத்திய சுமங்கலி கேபிள் விஷன் என்ற கேபிள் நிறுவனம் கொள்ளையடிக்க.....அந்த ஒரு குடும்பம் கொள்ளையடிப்பதை தடுக்க அம்மா அவர்கள் கொண்டு வந்தது தான் அரசு கேபிள் விஷன் என்பது தனி கதை.....நிலமை இப்படி இருக்க எங்கு "வாயு" பிரிந்தாலும் மத்திய அரசை குறை சொல்வது ஒரு வகையான மன நோயே....!!!


Arachi
ஜூன் 24, 2025 08:10

கேட்டுத்தான் வாங்க வேண்டுமா. கேட்காமலயே கொடுக்க வேண்டியதுதானே. திருப்பியா அனுப்பப்போறாங்க. மொத்தத்தில் மத்திய அரசு நல்லாயில்லை. வேற்றுமையில் ஒற்றுமை மறைந்து கொண்டு வருகிறது.


Kjp
ஜூன் 24, 2025 10:09

ஏன் கேட்டால்தான் என்ன.கௌரவம் குறைந்து விடுமா?


lana
ஜூன் 24, 2025 08:00

இங்கு ஆட்டையை போடும் திட்டத்தை மட்டுமே ஏற்றுக் கொள்வார்கள். கணக்கு கேட்பது திராவிட மாடல் க்கு பிடிக்காது ஒன்று. அன்று கணக்கு கேட்டால்தான் mgr வெளி ஏற்றப்பட்ட நிகழ்வு.


S.kausalya
ஜூன் 24, 2025 07:37

இந்த மத்திய அரசு, நிதியை கொடுத்து விட்டு, செலவு கணக்கை கேக்குது. கணக்கு கேட்டால்


Mani . V
ஜூன் 24, 2025 05:14

அதை முழுமையாக அந்த குடும்பம் ஆட்டையைப் போடலாம் என்றால், எப்பொழுதோ செலவு கணக்கு காட்டி சுருட்டிக் கொண்டு போய் இருப்பார்கள்.


Kasimani Baskaran
ஜூன் 24, 2025 03:43

காசடிக்க வாய்ப்பில்லை என்றால் எப்படி வாங்க மனம் வரும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை