உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நிதி நெருக்கடியிலும் தமிழகம் முன்மாதிரி

நிதி நெருக்கடியிலும் தமிழகம் முன்மாதிரி

திருநெல்வேலி மாநகராட்சியில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், 85.56 கோடி ரூபாயில் கட்டப்பட்ட ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட் வளாகம், விளையாட்டு உள் அரங்கம், வணிக வளாகம் திறப்பு மற்றும் கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

இதில் அமைச்சர் உதயநிதி பேசியதாவது:

கிராமங்கள் முதல் நகரங்கள் வரை சீரான வளர்ச்சிக்கு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். டிசம்பரில், திருநெல்வேலியில் பெய்த வரலாறு காணாத மழையால், இங்கிருக்கும் பஸ் ஸ்டாண்டும் வெள்ளத்தால் சூழப்பட்டது. மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது புதுப்பொலிவுடன் திறக்கப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்பின் போது, மூன்று நாட்கள் நானும் நெல்லையில் தங்கி மீட்புப் பணிகளை மேற்கொண்டோம்.நெல் விளையும் பூமியாக மட்டுமின்றி, நெல்லையை சொல் விளையும் பூமியாக்க, 2 கோடி ரூபாயில் அறிவுசார் மையம் திறந்துள்ளோம். ஐந்தாண்டுகளில் தமிழகம் மத்திய அரசுக்கு, 6 லட்சம் கோடி ரூபாய் வரியாக கொடுத்துள்ளது. ஆனால் மத்திய அரசு, நமக்கு 1.50 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே தந்துள்ளது. வெள்ள நிவாரணமாக மத்திய அரசு இதுவரை ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை. சென்னையில் கிடைக்கும் அனைத்து வசதிகள் நெல்லையிலும் கிடைக்க வேண்டும். அதே வசதிகள், தென்காசியிலும் கிடைக்க வேண்டும் என செயல்படுகிறது தி.மு.க.,வின் திராவிட மாடல் அரசு. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை