உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்திற்கு நல்ல தலைவர்கள் தேவை: நடிகர் விஜய் ஆசை

தமிழகத்திற்கு நல்ல தலைவர்கள் தேவை: நடிகர் விஜய் ஆசை

சென்னை: ‛‛தமிழகத்திற்கு நல்ல தலைவர்களின் தேவை இருக்கிறது. நல்லா படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்; தலைவர்களாக வர வேண்டும்'' என மாணவர்கள் மத்தியில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் தலைவருமான விஜய் பேசினார்.தமிழகத்தில் உள்ள தொகுதி வாரியாக 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு நடிகர் விஜய்யின், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா, சென்னையில் இன்று (ஜூன் 28) நடைபெற்றது. இந்தாண்டு இந்த விழாவை இன்று மற்றும் ஜூலை 3 என இரண்டு கட்டங்களாக நடக்கிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=i11ru52l&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0விழா நடைபெறும் மண்டபத்திற்கு வந்த நடிகர் விஜய், நாங்குநேரியில் சாதிய தாக்குதலுக்கு உள்ளான மாணவன் சின்னதுரையின் அருகில் அமர்ந்தார். பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. விழாவில் மாணவர்கள் மத்தியில் விஜய் பேசியதாவது: எல்லா துறைகளும் நல்ல துறையே; நமக்கு பிடித்த துறைகளை தேர்ந்தெடுத்து 100 சதவீதம் உழைத்தால் வெற்றிதான். தமிழகத்திற்கு நல்ல தலைவர்களின் தேவை இருக்கிறது. தலைவர்கள் என்பது அரசியலில் மட்டும் சொல்லவில்லை; மாணவர்களான நீங்கள் செல்லும் துறைகளிலும் நல்ல தலைவர்கள் தேவை. நல்லா படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்; தலைவர்களாக வரவேண்டும். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. இது ஒரு பெற்றோராகவும், அரசியல் இயக்க தலைவராகவும் எனக்கு அச்சமாக இருக்கிறது. ஆளும் அரசு தவற விட்டுட்டாங்க அப்படின்னு சொல்ல நான் இங்க வரல; அதற்கான மேடையும் இது இல்ல. நண்பர்கள் யாராவது தவறான பாதையில் ஈடுபட்டால் அவர்களை திருத்த முயலுங்கள். தவறான பாதையில் யாரும் ஈடுபடாதீர்கள்; அடையாளத்தை ஒருபோதும் இழக்காதீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 56 )

Justin Jose
ஜூலை 01, 2024 10:27

நல்ல தலைவர்கள் தேவைதான். ஆனா நீ நல்ல மனுஷனே இல்லையடா தம்பி.


nizam
ஜூலை 01, 2024 09:58

ஐயா இருக்கிற பணத்தை ஏழைகளுக்கு கொடுத்து நீங்களும் அனுபவியுங்க அரசியல் சாக்கடை உங்க குரு விஜயகாந்த் பட்ட பாடு நினைவு இருக்கட்டும்


Karuthu kirukkan
ஜூலை 01, 2024 05:57

எனது புதிய படம் வெளியாகும்போது சரக்கு அடித்துவிட்டு ,எனக்கு கட்டவுட்டு வைத்து பால் அபிபிஷேகம் செய்து பணத்தையும் பாலையும் வீணாக்காமல் வசதி இல்லாதோருக்கு கொடுத்து உதவும் படியும் நாளைய தலைமுறை உன்னை போற்றும் .


Veeraputhiran Balasubramoniam
ஜூன் 29, 2024 18:16

அப்ப இவர்கள் இன்றைய இளைஞர்களை கெடுக்க வில்லை.. படங்களில் கையில் சம்மட்டி யுடன் திரிகிறான் ஒருவன் சக எதிரியை கொல்ல.. பேர் தளபதியான. இன்னொருவன் பீரங்கி 1800 கழில் உள்ளதாம் பெயர் சகல கலா வல்லவன், இன்னொருவன் அசிட் /திராவகத்தில் சக மனிதனை தலைகீழாக கட்டி மூழ்க அடித்து கரைந்து போக செய்வானாம் பெயர் சூப்பர் ஸ்டாராம்... இன்னொருவன் நவீன துப்பாக்கியுடன் காவலர் ராணுவம் அனைவரையும் துவம்சம் செய்து சாகடித்து வங்கி பணம் முழுவதும் ஆட்டய பொடிவானாம் பெயர் தல யாம்... மாணவர்கள் இவர்கள் பின்னால் போயி அரசியல் செய்து நாட்டை இந்த வழிகளில் திருத்திவிடலாம் என்று செல்ல வேண்டும் என்பதே அரசியல் திரைக்கு வர ஊக்குவிக்கிரார்கள்... அன்று எம் ஜி ஆர் இதுபோல் ஏது வும் தனது திரைப்படங்களில் காட்டி வெற்றி பெற்று ஆட்சி செய்யவில்லை.. நாங்களும் அவர் பின்னால் 20 களில் வெறித்தனமாக நல்லது செய்ய கற்று வாழ்க்கையில் வெற்றியின் படிகளில் இன்றும் 63 களில் பயணித்து அவர் ரசிகராக வாழவும் முடிந்து உள்ளது என்பதே எனது அனுபவம்


தத்வமசி
ஜூன் 29, 2024 13:36

நல்ல தலைவர்கள் வேண்டும் என்பதை விட, நல்ல ஜால்ராக்கள் இருக்கக் கூடாது என்று சொல்லுங்கள். அடிமைகள், கொத்தடிமைகள் வேண்டாம். சுதந்திரமாக சிந்திப்பவர்கள் வேண்டும். திரைத்துரையினர் வேண்டாம். உழைப்பாளி தான் வேண்டும். காசு வாங்கி ஓட்டு போடுபவர்கள் வேண்டாம். காசு கொடுக்கும் அரசியவாதியும் வேண்டாம்.


Barakat Ali
ஜூன் 28, 2024 20:22

பாஜக உள்ள வந்துடும் ....... அதனால பாலிடால் மூலம் பேசி களமிறக்கப்பட்ட ஆள்தான் சோசப்பு விசை திராவிட முறைப்படி இப்படித்தான் அந்தப்பெயரை குறிப்பிடனும் .....


M Ramachandran
ஜூன் 28, 2024 19:41

70 ஆண்டுகளாக தமிழக மக்கள் புத்தி மழுங்கி சினிமா என்ற மாயையில் விழுந்து அவ்ர்களை போற்றி கட்டவூட்டுக்கு பாலாபிஷேஹம் செய்து மகிழ்ந்து துதி பாடிக்கொண்டிருக்கின்றது. எதோ அவர்கள் தான் சமூக காவலர்கள் என்று. உண்மையான மக்கள் சேவகர்கள் யார் என்று பகுத்துணரமுடியா பல்லக்கு தூக்கும் கூட்டம் திருந்தாத தமிழ்நாடு


syed ghouse basha
ஜூன் 28, 2024 18:53

திரு விஜய் அவர்களுக்கு கூட்டம் கூடி உங்களைஇருக்கும் இடம் தெரியாமல் ஆக்கிவிடுவார்கள் தேவையில்லாமல் அரசியலில் இறங்கி பரிதாபத்திற்குரியவர் ஆகிவிடாதீர்கள் உங்கள் சத்து 5 அல்லது 7 சதவீதம்தான் இதற்கு இவ்வளவு அலப்பரை தேவையில்லை


என்றும் இந்தியன்
ஜூன் 28, 2024 16:39

தான் நல்ல தலைவனில்லை என்று இவ்வளவு தெளிவாக யாரும் ஒப்புக்கொண்டிருக்கவே மாட்டார்கள்


என்றும் இந்தியன்
ஜூன் 28, 2024 16:37

நல்ல தலைவர்களா நல்ல நடிகர்களா???1967க்கு பின் டாஸ்மாக்கினாட்டில் வந்த எல்லா தலைவர்களும் நல்ல நடிகர்களாக மட்டுமே இருந்திருக்கின்றனர்


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ