உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஹிந்து மத உணர்வை புண்படுத்தும் முதல்வர் ஸ்டாலின்; தமிழிசை குற்றச்சாட்டு

ஹிந்து மத உணர்வை புண்படுத்தும் முதல்வர் ஸ்டாலின்; தமிழிசை குற்றச்சாட்டு

கோவை: ஹிந்துமத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக முதல்வரின் செயல்கள் உள்ளதாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜ மூத்த நிர்வாகி தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். அப்போது அவர் பேசியதாவது; முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் நடைபெறும் எந்தவித இந்துமத நிகழ்ச்சிகளுக்கும் செல்வதில்லை. ஆனால் கேரள முதல்வர் பினராய் விஜயன் அழைத்துள்ள உலக ஐயப்ப மாநாடு நிகழ்ச்சிக்கு செல்கிறார். இது எந்தவிதமான நம்பிக்கை என அவர்கள் கூற வேண்டும். ஹிந்துமத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக முதல்வரின் செயல்கள் உள்ளன.ஹிந்து மதத்தை தீவிரமாக பின்பற்றுபவர் என்கிற அடிப்படையில் விசிக வன்னியரசு ராமர் குறித்து பேசியதை வன்மையாக கண்டிக்கிறேன். சமூக நீதியையும் சமத்துவத்தையும் போற்றுவது கம்பராமாயணமும், ராமரும்தான். அதற்கு ராமாயணத்தில் உதாரணங்கள் உள்ளன. சமதர்மம் எனும் தர்மத்தை உடையவன் ராமன். திமுக ஆட்சியில் நடைபெறும் ஆணவக் கொலைகளை தடுப்பதற்கும், ஆணவக் கொலைகளுக்கு எதிரான சிறப்பு சட்டம் இயற்றுவதற்கும், ஆணவக் கொலைகளுக்கு எதிராகவும் போராட்டங்கள் நடத்தாமல், இங்கு நடைபெறும் ஆணவக் கொலைகளுக்கு ராமனும், சனாதன தர்மமும் காரணம் என்கிறார் வன்னியரசு. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டம் ஒழுங்கு மற்றும் அஜாக்கிரதை காரணமாகவே தமிழகத்தில் ஆணவக் கொலைகள் நடந்து வருகின்றன. பிற மாநிலங்களில் ஆணவக் கொலைக்கு எதிராக சட்டங்கள் இருக்கும் போது தமிழகத்தில் ஏன் சிறப்பு சட்டம் கொண்டுவர முடியவில்லை. ஆணவக் கொலை தடுக்க ஸ்டாலினிடம் சென்று விசிக போராட்டம் நடத்த வேண்டும். இந்த நேரத்தில் நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். ஹிந்து மதத்தை பின்பற்றுபவர்கள் ராமனை வணங்குபவர்களின் ஒரு ஓட்டு கூட அவர்களுக்கு செல்லக்கூடாது. மேலும் வன்னி அரசுக்கு பாஜ சார்பில் கம்பராமாயணம் புத்தகங்களை வழங்க உள்ளோம். தமிழையும், தமிழர்களையும் போற்றுவது பாரதிய ஜனதா கட்சி தான். துணை ஜனாதிபதி வேட்பாளராக ஒரு தமிழரை அறிவித்துள்ளது பாஜ தான். அதற்கு திமுக உள்ளிட்ட 'இண்டி' கூட்டணி கட்சியினர் அவருக்கு ஆதரவு அளிக்க மறுக்கின்றனர்.துணை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பற்று எனும் முகமூடியை ஸ்டாலின் தான் போட்டுக் கொண்டுள்ளார். தமிழ் முகமூடி அணிந்து கொண்டு சிபி ராதாகிருஷ்ணன் வருகிறார் என முதல்வர் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழர்களின் பாதுகாவலர்கள் என கூறுபவர்கள் அவர்கள் ஏன் ஒரு தமிழரை துணை ஜனாதிபதியாக ஆதரிக்க மறுக்கின்றனர். மம்தாவின் எதிர்ப்புக்காக தமிழ் வேட்பாளரை தியாகம் செய்தது ஏன் என அவர்கள் தான் கூற வேண்டும, என தமிழிசை சவுந்தர்ராஜன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

M Ramachandran
ஆக 26, 2025 01:04

எப்போலா பார்த்தாலும் கீரல் விழுந்த ரெக்கார்ட் போல அதே பல்லவியா?


pakalavan
ஆக 25, 2025 22:36

பூனூல் போட்டாத்தான் கருவரைக்கு வரமுடியும்னு உங்க ராமரு சொன்னாரா ? இல்ல பிராமின தவிர யாரும் கோவிலுக்க வரக்கூடதுன்டு சொன்னாரா


திகழ்ஓவியன்
ஆக 25, 2025 21:10

எங்க போனாலும் கேரளா ஹிந்து மதம் வேறயா


ராஜா
ஆக 25, 2025 21:06

வடக்கு மதமா அல்லது தெற்கு மதமா என்று தெளிவாக சொல்லுங்கள் அம்மா


joe
ஆக 25, 2025 19:55

திராவிடம் என்ற இடம் பாகிஸ்தானில் மட்டுமே உள்ளது .ஆனால் இங்கே தமிழர்களை திராவிடர்கள் என்று சொல்லி அரசியல் செய்வது ,இது போன்ற குற்றவாளிகள் உருவாதை தடுக்க முடியாமல் போனது .இது தமிழ் பூமி -திராவிட பூமி இல்லையடா . ஆளும் கபோதி அரசியல் வாதிகள் தீவிர வாதத்தை வளர்க்கிறார்கள் . கண்டிப்பாக இயற்க்கை அன்னை இந்த தமிழ் மண்ணின் இயற்க்கை அன்னை பலி வாங்கும் .கண்டிப்பாக .கபோதியின் அரசியல் ஒழிக


joe
ஆக 25, 2025 19:49

நாட்டில்வுள்ள எல்லா துறையும் பிற்போக்குப்படுத்தி சிவில் சட்டங்களையும் நாசமாக்கும் ஒரு தேசிய குற்றவாளிகள்தான் தி மு க . தேசிய சொத்துக்களை கட்சி சொத்து என்று ஊழலுக்குமேல் ஊழல் செய்யும் தீவிரவாத தலைவர்கள் நாங்கள்தான் என்று பகிங்கரமாக சவால் விடும் தேசிய குற்றவாளிகள்தான் இந்த தி மு க என்கிற கபோதிகளின் கூட்டம் .


joe
ஆக 25, 2025 19:43

ஆளும் கபோதி அரசியல் வாதிகளான தி மு க ஒரு இந்திய தேச துரோக கட்சியே.


joe
ஆக 25, 2025 19:41

தி மு க என்கிற கபோதிகள் தேச துரோகிகளே என்பதில் சந்தேகமே இல்லை .


joe
ஆக 25, 2025 19:29

பொது மக்கள் பிச்சை காரர்கள் மாதிரியும் இவங்க சக்கரவர்த்திகள் மாதிரியும் நினைத்திட்டானுக . கருத்து மாறமாட்டாங்க .


எவர்கிங்
ஆக 25, 2025 19:00

தமிழக பாஜக கேடு


Modisha
ஆக 25, 2025 21:21

எவர் கிங்கை விடவா


முக்கிய வீடியோ