உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமைச்சர் ராஜகண்ணப்பன் மீதான வழக்கு ரத்து

அமைச்சர் ராஜகண்ணப்பன் மீதான வழக்கு ரத்து

சென்னை:கடந்த 2021ல், சட்டசபை தேர்தல் நடந்தது. ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்துார் தொகுதியில், ராஜகண்ணப்பன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அமைச்சராகவும் ஆனார். தேர்தலின் போது, விதிமுறைகளை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டதாக, பெருநாழி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்ததாக, கமுதி போலீஸ் நிலையத்தில் மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில், நிலுவையில் இருந்த இந்த இரண்டு வழக்குகளையும், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ரத்து செய்துஉத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை