உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க.,வை ஒழிக்க அக்கட்சியினரே போதும்: தமிழிசை

தி.மு.க.,வை ஒழிக்க அக்கட்சியினரே போதும்: தமிழிசை

தமிழக பா.ஜ., சார்பில் சென்னை உட்பட ஏழு இடங்களில், 'வந்தே மாதரம்' பாடலின், 150வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்த பாடலை, பள்ளிகளில் பாட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். இதை, சுதந்திரத்திற்கு போராடியதாக சொல்லிக் கொள்ளும் காங்கிரசும், தி.மு.க.,வும் செய்யவில்லை. தேசத்திற்கு விரோதமான கட்சி என்பதை, காங்கிரஸ் முன்னெடுத்து செல்கிறது. நேரு, மன்மோகன் சிங் ஆட்சி காலங்களில், வாக்காளர் சிறப்பு திருத்தப் பணிகள் நடந்துள்ளன. ஆனால், பிரதமர் மோடி ஆட்சியில் நடக்கும்போது மட்டும் எதிர்க்கின்றனர். இதற்கு ஏன் தி.மு.க., பயப்படுகிறது; அக்கட்சி, கடந்த இரு ஆண்டுகளாக சேர்த்த போலி வாக்காளர்கள் நீக்கப்படுவர். தமிழகத்தில் பெண்கள் கடத்தப்படு கின்றனர். தி.மு.க.,வை ஒழிக்க, அக்கட்சியினரே போதும். - தமிழிசை முன்னாள் தலைவர், தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை