உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டவுட் தனபாலு: கூடிய சீக்கிரமே அமலாக்கத் துறை, சி.பி.ஐ.,யின் கதவுகள் அகலமாக திறக்கும்

டவுட் தனபாலு: கூடிய சீக்கிரமே அமலாக்கத் துறை, சி.பி.ஐ.,யின் கதவுகள் அகலமாக திறக்கும்

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்:

கூட்டணிக்காக கதவு திறந்து இருக்கிறது என அமித் ஷா கூறியுள்ளார்; அவர்கள் திறந்து வைத்திருக்கலாம். எந்த காலத்திலும் பா.ஜ.,வுடன் இனி கூட்டணி கிடையாது. அந்த நிலையில் இருந்து எப்போதும் மாற மாட்டோம். எங்களைப் பொறுத்தவரை பா.ஜ.,வுக்கு இறுக்கமாக கதவை மூடிவிட்டோம்; இந்த விஷயத்தில், முன் வைத்த காலை பின் வைக்க மாட்டோம்.

டவுட் தனபாலு:

நல்லது... பா.ஜ.,வுக்கான கதவை இறுக்கமா மூடிட்ட உங்களுக்கும், உங்க கட்சியின் இதர, 'மாஜி'க்களுக்கும் கூடிய சீக்கிரமே, அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ.,யின் கதவுகள் அகலமாக திறக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!---

தி.மு.க., - எம்.பி.,யான டி.ஆர். பாலு:

நான், 65 ஆண்டு கால அரசியல் அனுபவம் உள்ளவன். நேற்று வந்த தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு எல்லாம் பதில் கூற வேண்டுமா? அந்த அளவுக்கு நான் தாழ்ந்து போனேனா? முந்தா நாள் அரசியலுக்கு வந்த அண்ணாமலை பற்றி எந்த கேள்விகளையும், என்னிடம் கேட்காதீர்கள். என் தகுதிக்கு இணையானவர்கள் குறித்து மட்டும் என்னிடம் கேள்வி கேளுங்கள்.

டவுட் தனபாலு:

அடடா... 65 வருஷம் சீனியரான உங்களிடம் போய், அண்ணாமலை பற்றி கேட்கலாமா... அது போகட்டும்... நாளைக்கு உதயநிதி பத்தி கேள்வி கேட்டாலும், இதே பதிலை தான் சொல்வீங்களா என்ற, 'டவுட்' வருதே!---

பா.ம.க., தலைவர் அன்புமணி:

கூட்டணி தொடர்பாக பேசிக் கொண்டிருக்கிறோம். விரைவில் யாருடன் கூட்டணி என்பதை அறிவிப்போம். யாருடன் பேசுகிறோம்; என்ன பேசுகிறோம் என்பதை, இப்போது கூற முடியாது. சமீபத்தில் சென்னையிலும், தென் மாவட்டங்களிலும் பெரும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இதற்கு காலநிலை மாற்றமே காரணம். காலநிலை மாற்றத்தால் வெள்ளம் மட்டுமல்ல; வறட்சியும் ஏற்படுகிறது.

டவுட் தனபாலு:

மழை, வெள்ளம் வந்தப்ப, மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கலைன்னு குற்றம் சாட்டிட்டு, இப்ப காலநிலை மீது பழிபோடுறீங்களே... ஆளுங்கட்சிக்கு ஆதரவாக பேசுவதன் மூலம், எதிரணியில சீட்களை அதிகரிக்கிற தந்திரமா என்ற, 'டவுட்'தான் வருது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை