உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எஸ்.ஐ., டூவீலர் சாவியை பறித்து தப்பிய போதை ஆசாமிகள்

எஸ்.ஐ., டூவீலர் சாவியை பறித்து தப்பிய போதை ஆசாமிகள்

ராஜபாளையம் : விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நேற்று காலை 10:30 மணிக்கு போக்குவரத்து எஸ்.ஐ., தாமரைக்கண்ணன் பஞ்சு மார்க்கெட் அருகே பணியில் இருந்த போது பங்க் அருகே உள்ள மதுக்கடையில் இருந்து ஒரே டூவீலரில் இருவர் வந்தனர்.தாமரைக்கண்ணன் அவர்களை நிறுத்த முயன்று டூவீலரில் விரட்டி சென்றார். அவர்களை மறித்து நிறுத்தி குடித்து விட்டு வாகனம் ஓட்டியது தெரிந்து தப்பிக்க முடியாதபடி அவர்களது டூவீலரின் சாவியை எடுத்தார்.வாக்குவாதத்தில் ஈடுபட்ட போதை ஆசாமிகள் அவரது கையில் இருந்த தங்கள் டூவீலரின் சாவியை பிடுங்கி கொண்டு தாமரைக்கண்ணனின் டூவீலர் சாவியையும் எடுத்துக்கொண்டு தப்பினர். இதில் அவரது விரலில் வெட்டு காயம் ஏற்பட்டது. போதை ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.மதியம் 12:00 மணிக்குதான் மதுக்கடைகளை திறக்க வேண்டும் என்றாலும் சட்ட விரோதமாக மற்ற நேரங்களிலும் மது விற்பனை செய்ய்ப்படுவதை விருதுநகர் மாவட்ட நிர்வாகம் கட்டுப்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை