உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு; புகைப்படம் ஆல்பம் இதோ!

பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு; புகைப்படம் ஆல்பம் இதோ!

சென்னை: வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி, பெருமாள் கோவில்களில் இன்று (ஜன.,10) நடைபெற்றது. ரங்கா.. ரங்கா.. கோஷத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் காலை 5.15 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ex6bwnfb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சேலம் காருவள்ளி பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.கரூர் அபயப்பிரதான ரங்கநாதர் சுவாமி, பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு, கோவை பாப்பநாயக்கன்பாளையம் சீனிவாச பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.நாமக்கல் அரங்கநாதர் கோவிலில், ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சொர்க்கவாசல் வழியாக சுவாமி சடாரியை பட்டாச்சாரியார்கள் எடுத்து வந்தனர்.அரியக்குடி திருவேங்கடமுடையான் கோவில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பக்தர்கள் ரங்கா...ரங்கா என கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.சேலம் கோட்டை அழகிரிநாதர், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பொள்ளாச்சி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.மதுரை கள்ளழகர் திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு, காரமடை அரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.கன்னியாகுமரி திருமலை திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாடாளன் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. கோவிந்தா, கோவிந்தா என முழக்கமிட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர் .திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு கண்கவர் மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஆண்டாள், ரங்கமன்னார் எழுந்தருளினர்.சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வீர அழகர் கோயிலில் சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபத வாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.சேலம் மாவட்டம், ஆத்தூர், கோட்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், பிரசன்ன வெங்கடேச பெருமாள் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளினார்.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ தேவி, பூ தேவி நாச்சியார்களுடன் பக்தர்களுக்கு பார்த்தசாரதி பெருமாள் அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

என்றும் இந்தியன்
ஜன 10, 2025 17:07

நான் அனுபவித்தேன் மற்றவர்களும் இதை அனுபவிக்க நான் போட்டோ ஆல்பம் செய்து எனது வாட்ஸாப்ப் நண்பர்களுக்கு அனுப்பிவிட்டேன் pdf பைலாக, நன்றி பல தினமலர்


Matt P
ஜன 10, 2025 11:45

பேரு தான் வைகுண்டேஸ்வரன். ...ராமசாமின்னு பேரு வைச்சுட்டு வூரை ஏமாத்துவது மாதிரி. ..பேரு பெத்த பேரு தாகத்துக்கு தண்ணி லேது.


V வைகுண்டேஸ்வரன்
ஜன 10, 2025 16:33

ஏன் சார் Matt P, என்னைப் பற்றி உமக்கு என்ன தெரியும்?? என் பாட்டி திட்டுவாங்களே ன்னு, பள்ளி நாட்கள் முதல் வேலைக்கு சேர்ந்து 2, 3 வருடங்கள் வரை கூட அதிகாலையில் எழுந்து கோவிலுக்குப் போய், சொர்க்கவாசலுக்குள் நுழைந்து வெளியில் வந்தால் தான் காபி கூட தருவாங்க. இதை நான் இங்கே share பண்ணினதுக்கும் பெரியார் க்கும் என்ன சம்பந்தம்? பேரு பெத்த பேரு, தாக நீலு லேது " தான் சரியான பழமொழி.


V வைகுண்டேஸ்வரன்
ஜன 10, 2025 10:48

வருஷா வருஷம் சொர்க்கத்துக்குள்ள போயிட்டு வர்றாங்க. வந்து வீட்டில் இட்லி அல்லது தோசை சாப்பிட்டுவிட்டு ஆபீஸ் போயிடறோம். என்ன இது, எதுக்கு இது ஒண்ணும் தெரியல.


Ramanujadasan
ஜன 10, 2025 11:20

திராவிட உடன்பிறப்புகளுக்கு இது புரியாததில் வியப்பில்லை. எந்த நல்ல விஷயம் தான் உங்களுக்கு புரியும் ? தெரிந்ததெல்லாம் குற்றங்கள் புரிதல் மட்டுமே


Amar Akbar Antony
ஜன 10, 2025 11:30

பெயர் தங்களுக்கு வைத்துள்ளார்கள் வைகுண்டேஸ்வரன் புனைபெயரா ? பெற்றோரிடம் கேளுங்கள் இல்லையேல் தங்கள் மாமா உறவுமுறையினரை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்


Sidharth
ஜன 10, 2025 12:58

இதை சொன்னா நம்மள கடிச்சி வச்சிருவாங்க சங்கி தோழர்கள்


என்றும் இந்தியன்
ஜன 10, 2025 16:33

வசீம் அஹமதுக்கு தெரிந்தது அவ்வளவு தான்


Rajalakshmi J
ஜன 10, 2025 10:43

மிக்க நன்றி. ???


Ramanujadasan
ஜன 10, 2025 10:33

தமிழ் நாட்டில் இது வரை இருந்த எத்தனையோ பாரம்பரிய ஊடகங்கள் காசுக்கும், சோற்றுக்கும், மற்றவர்களுக்கும் மதம் மாறலாம். ஆனால் தினமலர் என்றுமே சனாதனத்தின் பக்கமே என்று நிரூபிக்கிறது இந்த செய்தி. வாழி தினமலர் , வாழி ராமசுப்பையர் குடும்பம்


Neutrallite
ஜன 10, 2025 10:12

ரங்கா ரங்கா


Durairaj
ஜன 10, 2025 09:42

இருக்கும் இடத்திற்கே எம்பெருமானை தரிசிக்க வாய்ப்பு வழங்கிய தினமலர் பேப்பர் மிகவும் நன்றி ரங்கா ரங்கா ஸ்ரீ ரங்கா


Mario
ஜன 10, 2025 09:33

காஞ்சிபுரத்தில் நடந்த சொர்க்கவாசல் நிகழ்வில் யார் பிரபந்தம் முதலில் பாடுவது என்பது குறித்த சண்டை வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் போட்டுக் கொண்டதாக வெளிவந்திருக்கும் தகவல், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது :


Ramanujadasan
ஜன 10, 2025 10:29

உங்கள் குடும்பத்தில் இது வரை யார் யாருக்கும் வாக்குவாதம் , சண்டை வந்ததே இல்லையா ? இதை ஊர் முழுக்க ஒவ்வொரு நாளும் சொல்வீர்களா ?


Pandi Muni
ஜன 10, 2025 10:43

ஆணியில் தொங்க விட்டு காலண்டராக்கிட்டிங்களேடா


N.Purushothaman
ஜன 10, 2025 09:11

ரங்கா ..ரங்கா ....திருவரங்கா .....


viji kumar
ஜன 10, 2025 09:09

ரங்கா ரங்கா ரங்கா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை